இந்தியாவில் இப்படி ஒரு எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறை... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் எம்பிவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் இப்படி ஒரு எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறை... விலை எவ்ளோனு தெரியுமா?

சீனாவை சேர்ந்த பிஒய்டி (BYD) நிறுவனம் இந்தியாவில் தனது முதல் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இ6 (BYD e6) என பெயர் சூட்டப்பட்டுள்ள இது எலெக்ட்ரிக் எம்பிவி ரக கார் ஆகும். இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதல் எலெக்ட்ரிக் எம்பிவி கார் என்ற பெருமையையும் பிஒய்டி இ6 பெற்றுள்ளது.

இந்தியாவில் இப்படி ஒரு எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறை... விலை எவ்ளோனு தெரியுமா?

ஆனால் பிஒய்டி நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்போவதில்லை. அதற்கு பதிலாக கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் மற்றும் கார் ஃப்ளீட் உரிமையாளர்களுக்கு இந்த கார் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் பி2பி (B2B) தயாரிப்பு ஆகும்.

இந்தியாவில் இப்படி ஒரு எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறை... விலை எவ்ளோனு தெரியுமா?

ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே பிஒய்டி இ6 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கிடைக்கும். இதன் விலை 29.15 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். பிஒய்டி நிறுவனம் இ6 எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் நீண்ட காலமாகவே சோதனை செய்து வந்தது. இறுதியாக இந்த கார் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இப்படி ஒரு எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறை... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்த எலெக்ட்ரிக் காரில் க்ரோம் பூச்சுக்களை அதிகளவில் காண முடிகிறது. முன் பகுதியில் எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்களை இந்த கார் பெற்றுள்ளது. உட்புறத்தை பொறுத்தவரை, லெதர் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் காரின் டிரைவர் மற்றும் முன்பக்க பயணியின் இருக்கையை 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும்.

இந்தியாவில் இப்படி ஒரு எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறை... விலை எவ்ளோனு தெரியுமா?

மேலும் 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் சிஸ்டமும் இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளது. இது ப்ளூடூத் மற்றும் வைஃபை கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பெற்றுள்ளது. பிஒய்டி இ6 எலெக்ட்ரிக் காரில், 71.7 kWh பிளேடு பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 520 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இப்படி ஒரு எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறை... விலை எவ்ளோனு தெரியுமா?

இது மிகவும் சிறப்பான ரேஞ்ச் என்பதில் சந்தேகமில்லை. இ6 எலெக்ட்ரிக் காரானது, ஏசி மற்றும் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் என இரண்டையும் சப்போர்ட் செய்யும். இதில் டிசி ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால் பேட்டரியை 30 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை வெறும் 35 நிமிடங்களில் சார்ஜ் செய்து விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இப்படி ஒரு எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறை... விலை எவ்ளோனு தெரியுமா?

ஆனால் பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் வரை நிரப்புவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? என்பது போன்ற தகவல்களை பிஒய்டி நிறுவனம் வெளியிடவில்லை. இந்தியாவின் முக்கியமான நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், ஐதராபாத், விஜயவாடா, அகமதாபாத் மற்றும் கொச்சி ஆகிய நகரங்களில் மட்டுமே பிஒய்டி இ6 எலெக்ட்ரிக் கார் கிடைக்கும்.

இந்தியாவில் இப்படி ஒரு எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறை... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. தற்போதைய நிலையில் டாடா நிறுவனத்தின் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்தான், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை தன்வசம் வைத்துள்ளது. வரும் காலங்களில் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வரவுள்ளன.

Most Read Articles

English summary
Byd e6 electric mpv launched in india check details here
Story first published: Monday, November 1, 2021, 23:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X