522 கிமீ ரேஞ்ச்... சென்னையில் சோதனை செய்யப்படும் சீன எலெக்ட்ரிக் எம்பிவி கார்.. வந்தால் இன்னோவாவுக்கு தலைவலி!

பிஒய்டி நிறுவனத்தின் இ6 எலெக்ட்ரிக் எம்பிவி கார் இந்தியாவில் வைத்து தீவிர சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. சென்னை அருகே பெங்களூர் நெடுஞ்சாலையில் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கும் பிஒய்டி இ6 காரின் பிரத்யேக படங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

522 கிமீ ரேஞ்ச்... சென்னையில் சோதனை செய்யப்படும் சீன எலெக்ட்ரிக் எம்பிவி கார்... வந்தால் இன்னோவாவுக்கு புது தலைவலி!

சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம் மின்சார வாகனத் தயாரிப்பில் முன்னோடி நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஏற்கனவே, இந்தியாவில் மின்சார பேருந்துகளை விற்பனை செய்து வரும் பிஒய்டி நிறுவனம், இந்திய பயணிகளின் கார் சந்தையிலும் வர்த்தகத்தை வலுவாக்க முயற்சித்து வருகிறது. இதற்காக, அடுத்து ஒரு எலெக்ட்ரிக் எம்பிவி கார் மாடலை பிஒய்டி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பது தெரிய வந்துள்ளது.

522 கிமீ ரேஞ்ச்... சென்னையில் சோதனை செய்யப்படும் சீன எலெக்ட்ரிக் எம்பிவி கார்... வந்தால் இன்னோவாவுக்கு புது தலைவலி!

ஆம். பிஒய்டி நிறுவனத்தின் இ6 மின்சார எம்பிவி கார் மாடல்தான் இந்திய சாலைகளில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அண்மையில் இந்த கார் சிங்கப்பூரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்தியாவிலும் இந்த மாடலை களமிறக்க பிஒய்டி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

522 கிமீ ரேஞ்ச்... சென்னையில் சோதனை செய்யப்படும் சீன எலெக்ட்ரிக் எம்பிவி கார்... வந்தால் இன்னோவாவுக்கு புது தலைவலி!

சென்னை, பூந்தமல்லி அருகே பெங்களூர் நெடுஞ்சாலையில் வைத்து பிஒய்டி இ6 கார் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. இதன் பிரத்யேக ஸ்பை படங்களை எமது வாசகர் கார்த்திக் பனவரா ஸ்ரீகாந்த் பகிர்ந்து கொண்டுள்ளார்.

522 கிமீ ரேஞ்ச்... சென்னையில் சோதனை செய்யப்படும் சீன எலெக்ட்ரிக் எம்பிவி கார்... வந்தால் இன்னோவாவுக்கு புது தலைவலி!

இந்த புதிய எலெக்ட்ரிக் எம்பிவி காரை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்ய பிஒய்டி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது, இந்தியாவின் புதிய இறக்குமதி கொள்கையின் மூலமாக முதல் 2,500 யூனிட்டுகளை எந்த மாற்றங்களும் இல்லாமல் விற்பனை செய்து கொள்ள முடியும். இதனை பயன்படுத்தி, இந்த காரை இறக்குமதி செய்து விற்பனை செய்ய பிஒய்டி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

522 கிமீ ரேஞ்ச்... சென்னையில் சோதனை செய்யப்படும் சீன எலெக்ட்ரிக் எம்பிவி கார்... வந்தால் இன்னோவாவுக்கு புது தலைவலி!

பிஒய்டி இ6 காரின் முகப்பு மிக நேர்த்தியாகவும், அழகாகவும் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. எலெக்ட்ரிக் கார்களில் பயன்படுத்தப்படும் வகையில் சிறிய துளைகளுடன் கூடிய பெரிய முகப்பு க்ரில் அமைப்பு இடம்பெற்றுள்ளது. அதற்கு மேலாக க்ரோம் பட்டையில் பிஒய்டி பேட்ஜ் மற்றும் அதன் இருபுறங்களிலும் ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் கண்களை கவரும் விதமாக அமைந்துள்ளன.

522 கிமீ ரேஞ்ச்... சென்னையில் சோதனை செய்யப்படும் சீன எலெக்ட்ரிக் எம்பிவி கார்... வந்தால் இன்னோவாவுக்கு புது தலைவலி!

மிக வலிமையான பாடி லைன்கள், அழகிய அலாய் வீல்கள், ரூஃப் ஸ்பாய்லர், கச்சிதமான டெயில் லைட்டுகளுடன் வசீகரிக்கிறது இந்த எலெக்ட்ரிக் கார். க்ரோம் பீடிங் மற்றும் பட்டடைகள் இதனை பிரிமீயமாக காட்டுகிறது.

522 கிமீ ரேஞ்ச்... சென்னையில் சோதனை செய்யப்படும் சீன எலெக்ட்ரிக் எம்பிவி கார்... வந்தால் இன்னோவாவுக்கு புது தலைவலி!

இந்த காரின் டேஷ்போர்டில் 10.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்படும். இதன் திரையின் கோணத்தை மாற்றிக் கொள்ளும் வசதி குறிப்பிடத்தக்கது. லெவல் 1 தானியங்கி டிரைவிங் நுட்பத்தையும் இந்த கார் பெற்றிருக்கிறது.

522 கிமீ ரேஞ்ச்... சென்னையில் சோதனை செய்யப்படும் சீன எலெக்ட்ரிக் எம்பிவி கார்... வந்தால் இன்னோவாவுக்கு புது தலைவலி!

இந்த காரில் 72kWh பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 522 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று பிஒய்டி தெரிவிக்கிறது. இதில் உள்ள ஒற்றை மின் மோட்டார் 94 பிஎச்பி பவரையும், 180 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

522 கிமீ ரேஞ்ச்... சென்னையில் சோதனை செய்யப்படும் சீன எலெக்ட்ரிக் எம்பிவி கார்... வந்தால் இன்னோவாவுக்கு புது தலைவலி!

புதிய பிஒய்டி இ6 எம்பிவி கார் ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் இடையிலான விலையில் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவுக்காக பிஒய்டி நிறுவனம் திட்டமிட்டுள்ள மூன்று கார் மாடல்களில் ஒன்றாக இந்த புதிய எலெக்ட்ரிக் எம்பிவி கார் இருக்கும். இந்தியர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களுடன், நடைமுறை பயன்பாட்டிற்கு மிகச் சிறந்த மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
BYD e6 electric MPV has been spotted testing yet again near Chennai. The e6 MPV was recently launched in the Singapore market. The company could have imported the electric MPV for testing its extensively on Indian roads ahead of its launch in the market.
Story first published: Saturday, April 24, 2021, 16:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X