இதையும் விட்டு வைக்கலயா!! ஃபோர்டு ஈக்கோஸ்போர்டின் போலி மாடல் - எலக்ட்ரிக் காராக சீனாவில் அறிமுகம்

இதையும் விடவில்லையா? என கேட்க தோன்றுகின்ற அளவிற்கு பிரபலமான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரின் போலி மாடலை சீனர்கள் உருவாக்கியுள்ளனர். அச்சு அசலாக ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்றே இருக்கும் இந்த போலி சீன தயாரிப்பை பற்றி இனி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

இதையும் விட்டு வைக்கலயா!! ஃபோர்டு ஈக்கோஸ்போர்டின் போலி மாடல் - எலக்ட்ரிக் காராக சீனாவில் அறிமுகம்

உலகளவில் பெரும்பாலான வாகனங்களின் வடிவமைப்பை அப்படியே காப்பயடித்து உருவாக்கப்படும் போலி சீன வாகனங்களை அவ்வப்போது நமது செய்தி தளத்தில் பார்த்து வருகிறோம். இந்த வகையில் தற்போது பிரபல ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காம்பெக்ட் எஸ்யூவி காரின் காப்பி மாடலை பற்றி பார்க்க போகின்றோம்.

இதையும் விட்டு வைக்கலயா!! ஃபோர்டு ஈக்கோஸ்போர்டின் போலி மாடல் - எலக்ட்ரிக் காராக சீனாவில் அறிமுகம்

இந்த காப்பி மாடலை உருவாக்கிய சீன நிறுவனத்தின் பெயர் பிஒய்டி ஆகும். இதில் ஹைலைட் என்னவென்றால், இந்த போலி ஈக்கோஸ்போர்ட் காரினை எலக்ட்ரிக் மோட்டார் உடன் கொண்டுவந்துள்ளனர். அதாவது பெட்ரோல் & டீசலுக்கு பதிலாக வாகனத்தை தொடர்ந்து இயக்க சார்ஜ் ஏற்ற வேண்டும்.

இதையும் விட்டு வைக்கலயா!! ஃபோர்டு ஈக்கோஸ்போர்டின் போலி மாடல் - எலக்ட்ரிக் காராக சீனாவில் அறிமுகம்

இந்த சீன எலக்ட்ரிக் காரின் பெயர் யுவான் ப்ரோ என சூட்டப்பட்டுள்ளது (நல்லவேளை இதற்காகவாவது சொந்தமாக யோசிக்கிறார்களே). சீனாவில் பெரும்பாலான எலக்ட்ரிக் கார்கள் குறைவான விலையில் தான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. யுவான் ப்ரோவின் விலை அதனை காட்டிலும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் விட்டு வைக்கலயா!! ஃபோர்டு ஈக்கோஸ்போர்டின் போலி மாடல் - எலக்ட்ரிக் காராக சீனாவில் அறிமுகம்

பிஒய்டி நிறுவனம் இந்த எலக்ட்ரிக் காரை உருவாக்க பயன்படுத்திய டிசைன் மொழியினை ‘டிராகன் ஃபேஸ் 3.0' என அழைக்கிறது. டிராகன் என்றதும் ஃபோர்டு நிறுவனம் அதன் சில கார்களில் வழங்கும் பெட்ரோல் என்ஜின் தான் ஞாபகத்திற்கு வருகிறது. இந்த சீன காரில் குறிப்பாக பக்கவாட்டு பகுதி மற்றும் பின்பகுதி கிட்டத்தட்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரை அச்சு அசலாக ஒத்திருக்கிறது.

இதையும் விட்டு வைக்கலயா!! ஃபோர்டு ஈக்கோஸ்போர்டின் போலி மாடல் - எலக்ட்ரிக் காராக சீனாவில் அறிமுகம்

எந்த அளவிற்கு என்றால், ஈக்கோஸ்போர்டில் வழங்கப்படுவதை போன்று பின் கதவில் ஸ்பேர் சக்கரத்தை கூட மறக்காமல் பொருத்தியுள்ளனர். அதேபோல் ஈக்கோஸ்போர்டின் அதே அளவிலான சாய்வான கூரையை இந்த சீன யுவான் ப்ரோவும் பெற்றுள்ளது. ஆனால் காரின் முன்பக்க ஹெட்லைட் டிசைன் & க்ரில் உள்ளிட்டவற்றை எம்ஒய்டி நிறுவனமே சொந்தமாக யோசித்து வடிவமைத்துள்ளது.

இதையும் விட்டு வைக்கலயா!! ஃபோர்டு ஈக்கோஸ்போர்டின் போலி மாடல் - எலக்ட்ரிக் காராக சீனாவில் அறிமுகம்

இதற்கு எலக்ட்ரிக் கார் என்பது காரணமாக இருக்கலாம். ஏனெனில் எலக்ட்ரிக் காருக்கு க்ரில் பகுதி தேவையில்லையே. ஆனால் முன்பக்கத்தை தவிர்த்து யுவான் ப்ரோ காரின் மற்ற வெளிப்பக்க பகுதிகள் அனைத்தும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் ஜெராக்ஸ் தான். இருப்பினும் உட்புறம் ஈக்கோஸ்போர்ட் காரில் இருந்து சற்று வேறுப்படுகிறது.

இதையும் விட்டு வைக்கலயா!! ஃபோர்டு ஈக்கோஸ்போர்டின் போலி மாடல் - எலக்ட்ரிக் காராக சீனாவில் அறிமுகம்

குறிப்பாக தொழிற்நுட்ப அம்சங்களில் யுவான் ப்ரோ மிகவும் நவீன தரத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஈக்கோஸ்போர்டின் போலி மாடலாக இருப்பினும், இந்த சீன எலக்ட்ரிக் காரின் உட்புற டேஸ்போர்டில் 10.1 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 8-இன்ச்சில் ஓட்டுனருக்கு தகவல்களை வழங்கக்கூடிய டிஜிட்டல் திரை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இதையும் விட்டு வைக்கலயா!! ஃபோர்டு ஈக்கோஸ்போர்டின் போலி மாடல் - எலக்ட்ரிக் காராக சீனாவில் அறிமுகம்

அதுவே ஈக்கோஸ்போர்டின் டேஸ்போர்டில் பல-தகவல்களை வழங்கக்கூடிய திரை உடன் அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 8-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்படுகின்றன. யுவான் ப்ரோவின் கேபின் பிரகாசமான நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இதையும் விட்டு வைக்கலயா!! ஃபோர்டு ஈக்கோஸ்போர்டின் போலி மாடல் - எலக்ட்ரிக் காராக சீனாவில் அறிமுகம்

இதன் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் ஏசி துளைகளின் வடிவமும் ஈக்கோஸ்போர்ட் உடன் ஒப்பிடுகையில் வித்தியாசப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, யுவான் ப்ரோவின் உட்புற கேபின் ஈக்கோஸ்போர்ட்டை காட்டிலும் பிரீமியம் தரத்தில் காட்சியளிக்கிறது. அதேபோல் இந்த சீன எலக்ட்ரிக் கார், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டை காட்டிலும் நீளமானதாகவும், நீண்ட வீல்பேஸை கொண்டதாகவும் விளங்குகிறது.

இதையும் விட்டு வைக்கலயா!! ஃபோர்டு ஈக்கோஸ்போர்டின் போலி மாடல் - எலக்ட்ரிக் காராக சீனாவில் அறிமுகம்

மொத்த 4.37 மீட்டர் நீளத்தில், 2,535மிமீ நீளத்தை யுவான் ப்ரோ கார் வீல்பேஸாக கொண்டுள்ளது. இதனால் இந்த சீன காரில் ஈக்கோஸ்போர்ட் காம்பெக்ட் எஸ்யூவி காரை காட்டிலும் அதிக கேபின் வசதி கிடைக்கும். இவை இரண்டிற்கும் இடையேயான வித்தியாசங்களில் மிக முக்கியமானது பவர்ட்ரெயின் தான்.

இதையும் விட்டு வைக்கலயா!! ஃபோர்டு ஈக்கோஸ்போர்டின் போலி மாடல் - எலக்ட்ரிக் காராக சீனாவில் அறிமுகம்

மூன்று விதமான வேரியண்ட்களில் யுவான் ப்ரோ எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தி இருக்கும் தயாரிப்பு நிறுவனம் இந்த காரில் 2 விதமான திறன் தேர்வுகளில் பேட்டரியை வழங்கியுள்ளது. இதன்படி இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ள 38.9 kWh பேட்டரி தொகுப்பானது 300 கிமீ ரேஞ்ச்சையும், பெரிய 50.1 kWh பேட்டரி ஆனது சுமார் 400 கிமீ ரேஞ்ச்சையும் வழங்கக்கூடியதாக உள்ளன.

Most Read Articles

English summary
Chinese clone Ford Ecosport into an electric SUV.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X