Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 2 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 3 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 4 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2020 இறுதி மாதத்தில் இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனம் எது தெரியுமா? டாப்-5 லிஸ்ட் இதோ...
கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் அதிகளவில் விற்பனையான கார் தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்கள் அவற்றின் விற்பனை எண்ணிக்கையுடன் தெரியவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனாவினால் 2020ன் மத்தியில் தடுமாறிய இந்திய ஆட்டோமொபைல் துறை 2020ன் பிற்பகுதியில் ஓரளவிற்கு சமாளித்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். இதனால் என்ன செய்வது என விழி பிதுங்கி இருந்த வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விற்பனையில் ஒரு நிலைத்தன்மையை பெற்றன.

என்னதான் கொரோனாவினால் ஊரடங்குகள் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் இந்தியாவில் கார்களின் விற்பனையில் மாருதி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இது கடந்த 2020 டிசம்பர் மாதத்திலும் தொடர்ந்துள்ளது.

கடந்த மாதத்தில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான கார்களை மாருதி இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் 2020 டிசம்பர் மாத விற்பனை எண்ணிக்கை மொத்தம் 1,40,754 ஆகும். இது மாருதியின் 2019 டிசம்பர் மாதத்தை காட்டிலும் 15 சதவீதம் அதிகமாகும்.

அதேபோல் இதற்கு முந்தைய 2020 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 3.67 சதவீதம் அதிகமாகும். மாருதிக்கு அடுத்து இந்தியாவில் கார்கள் விற்பனையில் தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் கடந்த சில வருடங்களாக பின்தொடர்ந்து வருவது உங்களுக்கு தெரிந்த விஷயம்தான்.

கடந்த டிசம்பர் மாதத்தில் ஹூண்டாய் விற்பனை செய்த மொத்த கார்களின் எண்ணிக்கை 47,400 ஆகும். இந்த எண்ணிக்கை 2019 டிசம்பர் மாதத்தை (37,953) காட்டிலும் 25 சதவீதம் அதிகம்தான் என்றாலும், 2020 நவம்பரை (48,800) விட 3 சதவீதம் குறைவாகும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த வரிசையில் மூன்றவது இடத்தை தொடர்கிறது. கடந்த மாதத்தில் இந்த இந்திய வாகன தயாரிப்பு நிறுவனம் விற்பனை செய்த 23,456 கார்கள் என்ற எண்ணிக்கை 2019 டிசம்பர் மற்றும் 2020 நவம்பர் மாதங்களுடன் ஒப்பிடுகையில் முறையே 84 சதவீதம் மற்றும் 9 சதவீதம் அதிகமாகும்.

No | OEM Wholesales | Dec'20 | Nov'20 | Difference | Growth (%) | Share (%) November 2020 |
1 | Maruti | 1,40,754 | 1,35,775 | 4,979 | 3.67 | 47.40 |
2 | Hyundai | 47,400 | 48,800 | -1,400 | -2.87 | 17.04 |
3 | Tata | 23,546 | 21,641 | 1,905 | 8.80 | 7.56 |
4 | Mahindra | 16,182 | 18,212 | -2,030 | -11.15 | 6.36 |
5 | Kia | 11,818 | 21,022 | -9,204 | -43.78 | 7.34 |
6 | Renault | 9,800 | 10,181 | -381 | -3.74 | 3.55 |
7 | Honda | 8,638 | 9,990 | -1,352 | -13.53 | 3.49 |
8 | Toyota | 7,487 | 8,508 | -1,021 | -12.00 | 2.97 |
9 | MG Motors | 4,010 | 4,163 | -153 | -3.68 | 1.45 |
10 | Volkswagen | 2,401 | 1,412 | 989 | 70.04 | 0.49 |
11 | Ford | 1,662 | 3,991 | -2,329 | -58.36 | 1.39 |
12 | Skoda | 1,303 | 1,056 | 247 | 23.39 | 0.37 |
13 | Nissan | 1,159 | 1,017 | 142 | 13.96 | 0.36 |
14 | Jeep | 384 | 709 | -325 | -45.84 | 0.25 |
Total | 2,76,544 | 2,86,436 | -9,892 | -3.45 | 100.00 |
நான்காவது இடத்திற்கு பெரும்பாலும் மஹிந்திரா மற்றும் கியா மோட்டார்ஸ் நிறுவனங்களுக்கு இடையேதான் போட்டி நிலவும். இம்முறை மஹிந்திராவின் கை ஓங்கியுள்ளது. 2020 டிசம்பரில் மஹிந்திரா நிறுவனம் 16,182 கார்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் 2020 நவம்பரில் இந்த நிறுவனம் 18 ஆயிரத்துக்கும் அதிகமாக கார்களை விற்பனை செய்திருந்தது. 2019 டிசம்பரில் செல்டோஸ் என்ற ஒற்றை மாடலின் விற்பனையினால் வெறும் 4,645 யூனிட் கார்களை மட்டுமே விற்றிருந்த கியா நிறுவனம் கடந்த டிசம்பரில் புதிய சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி மாடலின் உதவியினால் 11,818 கார்களை விற்பனை செய்துள்ளது.

இந்த வகையில் இந்த மற்றொரு தென் கொரிய ஆட்டோமொபைல் நிறுவனம் சுமார் 154 சதவீத வளர்ச்சியை விற்பனையில் கண்டுள்ளது. இதற்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் உள்ள நிறுவனங்கள் அனைத்தும் 10,000க்கும் குறைவான விற்பனை எண்ணிக்கையை இந்திய சந்தையில் பதிவு செய்துள்ளன.

மொத்தமாக கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் 2,76,544 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே 2019 டிசம்பரில் 17.78 சதவீதம் குறைவாக 2,34,805 கார்களும், 2020 நவம்பரில் 3.45 சதவீதம் அதிகமாக 2,86,436 கார்களும் விற்கப்பட்டிருந்தன. 2020 நவம்பரில் பெரும்பாலான நிறுவனங்களின் விற்பனை அதிகமாக இருந்ததற்கு தீபாவளி மிக முக்கிய காரணம்.