ஃபேக்டரிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் உடன் விற்பனைக்கு கிடைக்கும் கார்கள்! இது எல்லாமே இந்தியாவுல கிடைக்குது

இந்தியாவில், ஃபேக்டரிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி கருவி உடன் விற்பனைக்குக் கிடைக்கும் மிக சிறந்த சிஎன்ஜி கார்களின் பட்டியலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவை குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஃபேக்டரிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் உடன் விற்பனைக்கு கிடைக்கும் கார்கள்! இது எல்லாமே இந்தியாவுல கிடைக்குது!

ராக்கெட் வேகத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை உயர்ந்துக் கொண்டிருக்கின்றது. சமீப சில காலமாக விலை உயர்வு ஓட்டத்தில் இருந்து லேசாக ஓய்வெடுத்து வருகின்றது. அதாவது, கடந்த சில தினங்களாக இவற்றின் விலை எந்தவொரு மாற்றமும் இன்றி காணப்படுகின்றது.

ஃபேக்டரிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் உடன் விற்பனைக்கு கிடைக்கும் கார்கள்! இது எல்லாமே இந்தியாவுல கிடைக்குது!

இருப்பினும் பெட்ரோல், டீசல் பல மடங்கு அதிக விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. சென்னை நிலவரப்படி பெட்ரோல் லிட்டர் ஒன்று ரூ. 101.40 விலைக்கும், டீசல் லிட்டர் ஒன்று ரூ. 91.43க்கும் விற்பனைச் செய்யப்படுகின்றது. இத்தகைய அதிகபட்ச விலை உயர்வில் இருந்து நம்மை விடுவிக்கும் வகையில் சிஎன்ஜி நாட்டில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

ஃபேக்டரிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் உடன் விற்பனைக்கு கிடைக்கும் கார்கள்! இது எல்லாமே இந்தியாவுல கிடைக்குது!

இந்த தேர்வில் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களின் பட்டியலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, ஃபேக்டரியிலேயே சிஎன்ஜி எஞ்ஜின் தேர்வுடன் விற்பனைக்குக் கிடைக்கும் கார்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஃபேக்டரிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் உடன் விற்பனைக்கு கிடைக்கும் கார்கள்! இது எல்லாமே இந்தியாவுல கிடைக்குது!

மாருதி சுசுகி வேகன்ஆர் எல்எக்ஸ்ஐ (Maruti Suzuki Wagon R LXi)

மாருதி சுசுகி நிறுவனத்தின் புகழ்வாய்ந்த தயாரிப்புகளில் ஒன்றாக வேகன்ஆர் இருக்கின்றது. உயரமான தோற்றம் கொண்ட இந்த ஹேட்ச்பேக் காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இதன் விளைவாகவே இக்கார் நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக இருந்து வருகின்றது.

ஃபேக்டரிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் உடன் விற்பனைக்கு கிடைக்கும் கார்கள்! இது எல்லாமே இந்தியாவுல கிடைக்குது!

இதற்கு இக்காரில் மாருதி சுசுகி நிறுவனம் வழங்கும் பன்முக சிறப்பு வசதிகளும் ஓர் காரணமாக இருக்கின்றது. அந்தவகையில், நிறுவனம் வழங்கும் மிக சிறப்பான வசதிகளில் ஒன்றாக சிஎன்ஜி தேர்வு இருக்கின்றது. இந்த தேர்வில் கிடைக்கும் வேகன்ஆர் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 32.52 கிமீ தூரம் வரை செல்லும். எல்எக்ஸ்ஐ தேர்விலேயே சிஎன்ஜி வசதி வழங்கப்படுகின்றது.

ஃபேக்டரிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் உடன் விற்பனைக்கு கிடைக்கும் கார்கள்! இது எல்லாமே இந்தியாவுல கிடைக்குது!

ஹூண்டாய் அவுரா (Hyundai Aura)

இந்தியாவில் ஃபேக்டரியிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி கருவி உடன் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களில் ஒன்றாக ஹூண்டாய் நிறுவனத்தின் அவுரா இருக்கின்றது. இது ஓர் மிக சிறந்த செடான் ரக சிஎன்ஜி வாகனமாகும். பை-ஃப்யூவல் சிஎன்ஜி தேர்விலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆகையால், இந்த கார் மாடலில் முழு சிஎன்ஜி தேர்வு விற்பனைக்குக் கிடைக்காத நிலை தென்படுகின்றது.

ஃபேக்டரிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் உடன் விற்பனைக்கு கிடைக்கும் கார்கள்! இது எல்லாமே இந்தியாவுல கிடைக்குது!

ஹூண்டாய் அவுரா எஸ் எனும் தேர்விலேயே இந்த தேர்வு வழங்கப்படுகின்றது. 1.2 லிட்டர் எஞ்ஜினிலேயே இந்த வசதி வழங்கப்படுகின்றது. இந்த எஞ்ஜின் 68 பிஎச்பி பவரையும், 95 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் வசதியைக் கொண்டிருக்கின்றது. இந்த ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 28 கிமீ தூரம் வரை மைலேஜ் தரும். இதன் விலை ரூ. 7.28 லட்சம் ஆகும்.

ஃபேக்டரிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் உடன் விற்பனைக்கு கிடைக்கும் கார்கள்! இது எல்லாமே இந்தியாவுல கிடைக்குது!

மாருதி ஆல்டோ 800 (Maruti Alto 800)

மாருதி சுசுகி நிறுவனம் விற்பனைக்கு வழங்கும் ஃபேக்டரி ஃபிட்டட் சிஎன்ஜி வாகனமாகக ஆல்டோ 800 இருக்கின்றது. இதன் எல்எக்ஸ்ஐ எஸ் தேர்விலேயே சின்ஜி வசதி வழங்கப்படுகின்றது. இதன் விலை ரூ. 5.38 லட்சம் ஆகும். ஒரு கிலோ சிஎன்ஜிக்கு இந்த கார் 31.59 கிமீ வரை மைலேஜ் தரும். இது மிக சிறப்பான மைலேஜ் திறன் ஆகும்.

ஃபேக்டரிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் உடன் விற்பனைக்கு கிடைக்கும் கார்கள்! இது எல்லாமே இந்தியாவுல கிடைக்குது!

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் மக்னா (Hyundai Grand i10 Nios Magna)

ஹூண்டாய் நிறுவனத்தின் மற்றுமொரு ஃபேக்டரி ஃபிட்டட் சிஎன்ஜி வாகனமாக கிராண்ட் ஐ10 நியாஸ் இருக்கின்றது. இதன் மக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய இரு தேர்வுகளில் சிஎன்ஜி வசதி வழங்கப்படுகின்றது. நிறுவனம் கிராண்ட் ஐ10 நியாஸ் கார் மாடலை இந்தியாவில் 2020 ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் அறிமுகத்தின் சில தினங்களுக்கு பின்னரே புதிய சிஎன்ஜி தேர்வு மக்னா 1.2 கப்பா விடிவிடி எனும் தேர்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஃபேக்டரிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் உடன் விற்பனைக்கு கிடைக்கும் கார்கள்! இது எல்லாமே இந்தியாவுல கிடைக்குது!

இது ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 18.9 கிமீ மைலேஜை வழங்கும். தொடர்ந்து, 6000 ஆர்பிஎம்மில் 68 பிஎச்பி பவரையும், 4000 ஆர்பிஎம்மில் 95 என்எம் டார்க்கையும் இந்த சிஎன்ஜி வசதிக் கொண்ட எஞ்ஜின் வெளியேற்றும். ரூ. 6,99,710 மற்றும் ரூ. 7,53,450 என்ற விலையிலேயே சிஎன்ஜி தேர்வு கிராண்ட் ஐ10 நியாஸ் கார்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles

English summary
Cars in india sales with factory fitted cng kit
Story first published: Friday, December 31, 2021, 19:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X