அதிகப்படியான விலையினால் இந்தியாவில் தோல்வியடைந்த கார்கள்!! இதுக்குதான் மக்களை பொறுத்து வணிகம் செய்யணும்றது!

வாடிக்கையாளர்களின் மனதை படிக்க முடிந்த ஆட்டோமொபைல் நிறுவனங்களால் மட்டுமே இந்த உலகத்தில் எந்தவொரு நாட்டு சந்தையிலும் நிலைத்து நிற்க முடியும். இந்தியர்களை பொறுத்தவரையில், வளர்ந்துவரும் நாட்டின் மக்கள் என்பதால் காரின் விலைகளை எப்போதும் கவனமாக கண்காணிப்பர்.

அதிகப்படியான விலையினால் இந்தியாவில் தோல்வியடைந்த கார்கள்!! இதுக்குதான் மக்களை பொறுத்து வணிகம் செய்யணும்றது!

அதேநேரம் அதே விலையில் காருக்குள் ஏகப்பட்ட தொழிற்நுட்ப அம்சங்கள் இருக்க வேண்டும் என்றும் நினைப்பர். இருப்பினும், இவ்வாறான அம்சங்கள் அனைத்தையும் பெற்றுவந்த கார்களும் நம் நாட்டு சந்தையில் தோல்வியினை சந்தித்துள்ளன. அவ்வாறு இந்தியாவில் இருந்து விற்பனையில் விடைப்பெற்று சென்ற கார்கள் ஒவ்வொன்றிற்கு ஒரு காரணம் உள்ளது.

அதிகப்படியான விலையினால் இந்தியாவில் தோல்வியடைந்த கார்கள்!! இதுக்குதான் மக்களை பொறுத்து வணிகம் செய்யணும்றது!

இவ்வாறு வாடிக்கையாளர்களால் கண்டுக்கொள்ளப்படாமல் போன சிறப்பான, அதேநேரம் மற்ற போட்டி மாடல்களுக்கு சவாலான விலையினை பெற்றிருந்த சில கார் மாடல்களை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். வாருங்கள் செய்திக்குள் போவோம்.

அதிகப்படியான விலையினால் இந்தியாவில் தோல்வியடைந்த கார்கள்!! இதுக்குதான் மக்களை பொறுத்து வணிகம் செய்யணும்றது!

ஹோண்டா அக்கார்ட்

2000ஆம் காலக்கட்டத்தில் ஹோண்டா பிராண்டில் இருந்து இந்திய சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட லக்சரி செடான் கார் தான், அக்கார்ட் ஆகும். சில வசதிகளை பிரிவிலேயே முதல் மாடலாக பெற்றுவந்த அக்கார்ட் சிபியூ முறையில் விற்பனை செய்யப்பட்டதால் இதன் விலைகள் அதன் போட்டி செடான் கார்களை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டன.

அதிகப்படியான விலையினால் இந்தியாவில் தோல்வியடைந்த கார்கள்!! இதுக்குதான் மக்களை பொறுத்து வணிகம் செய்யணும்றது!

இதன் காரணமாக, இந்திய வாடிக்கையாளர்களை இந்த ஹோண்டா செடான் கார் கவரவில்லை. இத்தனைக்கும், முதல் தலைமுறை ஹோண்டா அக்கார்டில் ஆற்றல்மிக்க 3.2 லிட்டர் வி6 & 2.4 லிட்டர் ஐ-விடிஇசி இன்லைன் 4-சிலிண்டர் என்ஜின் தான் வழங்கப்பட்டது. என்றாலும், பல வெளிநாட்டு சந்தைகளில் இப்போதும் அக்கார்ட்டிற்கு வாடிக்கையாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

அதிகப்படியான விலையினால் இந்தியாவில் தோல்வியடைந்த கார்கள்!! இதுக்குதான் மக்களை பொறுத்து வணிகம் செய்யணும்றது!

மாருதி சுஸுகி கிசாஷி

இந்தியாவில் தற்சமயம் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக மாருதி சுஸுகி விளங்கினாலும், இந்த இந்திய-ஜப்பானிய கூட்டணி நிறுவனத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே இந்திய டி-செடான் கார்கள் பிரிவு ராசி இல்லாததாகவே இருந்து வந்துள்ளது. இந்த பிரிவில் மாருதி சுஸுகி அறிமுகப்படுத்திய முதல் செடான் காரும், கடைசி செடான் காரும் கிசாஷி தான். கிசாஷி என்ற பெயரை பார்த்தவுடனே இது ஜப்பானிய கார் என்பதை கண்டுப்பிடித்திருப்பீர்கள்.

அதிகப்படியான விலையினால் இந்தியாவில் தோல்வியடைந்த கார்கள்!! இதுக்குதான் மக்களை பொறுத்து வணிகம் செய்யணும்றது!

இந்த காரை மாருதி சுஸுகி நிறுவனம் சிகேடி முறையில் இந்தியாவில் விற்பனை செய்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறது. சிகேடி முறை என்பது, வெளிநாட்டு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட பாகங்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு, இங்குள்ள தொழிற்சாலையில் அசெம்பில் செய்யப்பட்டு முழு காராக விற்பனை செய்யப்படுவதாகும். இருப்பினும் கிசாஷி செடான் காரின் விலையினை மாருதி நிறுவனத்தால் இந்திய சந்தைக்கு ஏற்ப நிர்ணயிக்க முடிந்தது.

அதிகப்படியான விலையினால் இந்தியாவில் தோல்வியடைந்த கார்கள்!! இதுக்குதான் மக்களை பொறுத்து வணிகம் செய்யணும்றது!

நிஸான் கிக்ஸ்

ஜப்பானிய நிஸான் நிறுவனம் ஆரம்பத்தில் இருந்தே நம் இந்திய சந்தையில் தடுமாறி வருகிறது. இந்த வகையில் 2019ல் அறிமுகப்படுத்த கிக்ஸ் எஸ்யூவி மாடலும் இந்தியா வாடிக்கையாளர்களை கவர்வதில் பெரியதாக கோட்டைவிட்டது. ரெனால்ட் டஸ்டர் எஸ்யூவி காரின் ஆற்றல்மிக்க 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் உடன் நிஸான் கிக்ஸ் கொண்டுவரப்பட்டாலும், அதிகப்படியான விலையால் இந்த ஜப்பானிய எஸ்யூவி காரினை வாடிக்கையாளர்கள் கண்டுக்கொள்ளவில்லை.

அதிகப்படியான விலையினால் இந்தியாவில் தோல்வியடைந்த கார்கள்!! இதுக்குதான் மக்களை பொறுத்து வணிகம் செய்யணும்றது!

இருப்பினும் கிக்ஸ் மாடலை இந்தியாவில் விற்பனை செய்வதில் முனைப்புடன் இருந்த நிஸான் நிறுவனம் அதன்பின் கடந்த 2020ஆம் ஆண்டில் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் மீண்டும் அறிமுகப்படுத்தியது. ஆனால் முக்கிய பிரச்சனை சரிச்செய்யப்படவில்லை, அதுதான் இந்த காரின் விலைகள். இதனால் வழக்கம்போல் கிக்ஸை வாங்கும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது.

அதிகப்படியான விலையினால் இந்தியாவில் தோல்வியடைந்த கார்கள்!! இதுக்குதான் மக்களை பொறுத்து வணிகம் செய்யணும்றது!

டொயோட்டா யாரிஸ்

இந்த வரிசையில் நம் பார்க்க போகும் மற்றொரு ஜப்பானிய செடான் கார் தான் டொயோட்டா யாரிஸ் ஆகும். டொயோட்டா நிறுவனம் யாரிஸ் செடான் காரின் விற்பனையை இந்தியாவில் சமீபத்தில் தான் நிறுத்தி இருந்தது. இதற்கு மாற்றாக பெல்டா என்ற பெயரில் புதிய செடான் மாடலை கொண்டுவர டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

அதிகப்படியான விலையினால் இந்தியாவில் தோல்வியடைந்த கார்கள்!! இதுக்குதான் மக்களை பொறுத்து வணிகம் செய்யணும்றது!

டொயோட்டா பெல்டா, மாருதி சுஸுகியின் சியாஸ் செடான் மாடலில் இருந்து தான் கொண்டுவரப்பட உள்ளது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் யாரிஸ் டொயோட்டாவின் உண்மையான டிஎன்ஏ-வை கொண்ட காராகும். விலை அதிகம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இந்திய செடான் பிரிவில் ஹூண்டாய் வெர்னா மற்றும் ஹோண்டா சிட்டி கார்களின் ஆதிக்கத்தில் யாரிஸ் தாக்குப்பிடிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதிகப்படியான விலையினால் இந்தியாவில் தோல்வியடைந்த கார்கள்!! இதுக்குதான் மக்களை பொறுத்து வணிகம் செய்யணும்றது!

ஹோண்டா ஜாஸ் (முதல் தலைமுறை)

ஹோண்டா நிறுவனம் 2000களில் சி-பிரிவு செடான் காரான சிட்டி மூலமாக இந்திய சந்தையில் நுழைந்தது. அதனை தொடர்ந்து இந்த ஜப்பானிய கார் பிராண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட பிரீமியம் ஹேட்ச்பேக் கார் தான், ஜாஸ் ஆகும். இதற்கு விற்பனையில் ஹூண்டாய் ஐ20 முக்கிய போட்டியாக அப்போது விளங்கியது. ஆனால் ஜாஸின் விற்பனை நிறுத்தப்பட்டாலும், ஐ20 கார்கள் இன்னமும் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன.

அதிகப்படியான விலையினால் இந்தியாவில் தோல்வியடைந்த கார்கள்!! இதுக்குதான் மக்களை பொறுத்து வணிகம் செய்யணும்றது!

ஹூண்டாய் ஐ20-ஐ காட்டிலும் ஹோண்டா ஜாஸின் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல் வசதிகளும் கொரிய காரை காட்டிலும் இந்த ஜப்பானிய காரில் சற்று குறைவாகவே வழங்கப்பட்டன. அதேபோல் சேவை கட்டணங்களும் இந்த ஹோண்டா காரில் அதிகமாகவே இருந்தன. இவை எல்லாமும் தான் ஜாஸ் மாடலை பெரிய அளவில் இந்தியாவில் வளர விடாமல் செய்துவிட்டன.

Most Read Articles

English summary
Cars In India That Were Killed By Bad Pricing.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X