மலிவான விலையில் கிடைக்கும் டர்போ-பெட்ரோல் இன்ஜின் கார்கள்... எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க தோணும்...

இந்திய சந்தையில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் டாப்-5 டர்போ-பெட்ரோல் இன்ஜின் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மலிவான விலையில் கிடைக்கும் டர்போ-பெட்ரோல் இன்ஜின் கார்கள்... எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க தோணும்...

இந்தியாவில் காம்பேக்ட் கார்களில் கூட தற்போது டர்போ-பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளை, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வழங்க தொடங்கியுள்ளன. ஆனால் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மாடல்கள் விலை உயர்ந்தவையா? என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. அவர்களுக்காக, 8 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலைக்குள் கிடைக்கும் டர்போ-பெட்ரோல் கார்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

மலிவான விலையில் கிடைக்கும் டர்போ-பெட்ரோல் இன்ஜின் கார்கள்... எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க தோணும்...

ஃபோக்ஸ்வேகன் போலோ டர்போ எடிசன் (Volkswagen Polo Turbo Edition)

ஃபோக்ஸ்வேகன் போலோ பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் டர்போ எடிசன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு 6.99 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற மிக சவாலான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் மலிவான டர்போ-பெட்ரோல் மாடல் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

மலிவான விலையில் கிடைக்கும் டர்போ-பெட்ரோல் இன்ஜின் கார்கள்... எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க தோணும்...

தற்போதைய நிலையில் 8 லட்ச ரூபாய் விலைக்குள் கிடைக்கும் போலோ பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் ஒரே ஒரு டர்போ-பெட்ரோல் வேரியண்ட் இது மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பலேனோ, ஹூண்டாய் ஐ20 மற்றும் டாடா அல்ட்ராஸ் உள்ளிட்ட பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களுடன், ஃபோக்ஸ்வேகன் போலோ போட்டியிட்டு வருகிறது.

மலிவான விலையில் கிடைக்கும் டர்போ-பெட்ரோல் இன்ஜின் கார்கள்... எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க தோணும்...

நிஸான் மேக்னைட் டர்போ (Nissan Magnite Turbo)

ஃபோக்ஸ்வேகன் போலோ டர்போ எடிசன் வருவதற்கு முன்பாக நிஸான் மேக்னைட்தான் இந்தியாவின் மிகவும் விலை குறைவான டர்போ-பெட்ரோல் கார் என்ற பெருமையை தன்வசம் வைத்திருந்தது. ஆனால் தற்போது ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் நிஸான் மேக்னைட் ஆகிய இரண்டு கார்களும், இந்த பெருமையை பகிர்ந்து கொள்கின்றன.

மலிவான விலையில் கிடைக்கும் டர்போ-பெட்ரோல் இன்ஜின் கார்கள்... எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க தோணும்...

ஏனெனில் மேக்னைட் டர்போ எக்ஸ்எல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்டின் விலை 6.99 லட்ச ரூபாய் மட்டும்தான். இதுதவிர நிஸான் மேக்னைட் காரின் எக்ஸ்வி டர்போ மேனுவல் டிரான்ஸ்மிஷன் (7.68 லட்ச ரூபாய்) மற்றும் எக்ஸ்எல் டர்போ சிவிடி (7.89 லட்ச ரூபாய்) ஆகியவையும் 8 லட்ச ரூபாய் விலைக்குள் கிடைக்கின்றன.

மலிவான விலையில் கிடைக்கும் டர்போ-பெட்ரோல் இன்ஜின் கார்கள்... எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க தோணும்...

ரெனால்ட் கைகர் (Renault Kiger)

காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் புதிதாக நுழைந்திருக்கும் கார் ரெனால்ட் கைகர். ரெனால்ட் கைகர் காரின் 2 டர்போ-பெட்ரோல் வேரியண்ட்கள் 8 லட்ச ரூபாய்க்குள் கிடைக்கின்றன. ஆர்எக்ஸ்எல் டர்போ மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆர்எக்ஸ்டி டர்போ மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆகிய அந்த 2 டர்போ பெட்ரோல் வேரியண்ட்கள் முறையே 7.14 லட்ச ரூபாய் மற்றும் 7.60 லட்ச ரூபாய் விலையில் கிடைக்கின்றன.

மலிவான விலையில் கிடைக்கும் டர்போ-பெட்ரோல் இன்ஜின் கார்கள்... எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க தோணும்...

டாடா அல்ட்ராஸ் ஐடர்போ (Tata Altroz iTurbo)

அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் டர்போ-பெட்ரோல் வெர்ஷனை, ஐடர்போ என்ற பெயரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. டாடா அல்ட்ராஸ் ஐடர்போ எக்ஸ்டி வேரியண்ட் 7.73 லட்ச ரூபாய் என்ற விலையில் கிடைக்கிறது. தற்போதைய நிலையில் 8 லட்ச ரூபாய் விலைக்குள் கிடைக்கும் அல்ட்ராஸ் ஐடர்போ மாடலின் ஒரே ஒரு வேரியண்ட் இது மட்டும்தான்.

மலிவான விலையில் கிடைக்கும் டர்போ-பெட்ரோல் இன்ஜின் கார்கள்... எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க தோணும்...

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் டர்போ (Hyundai Grand i10 Nios Turbo)

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் டர்போ மாடலில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 100 பிஎஸ் பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 8 லட்ச ரூபாய்க்குள் என்றால், இந்த காரின் ஸ்போர்ட்ஸ் டர்போ வேரியண்ட்டை நீங்கள் வாங்கலாம். இதன் விலை 7.81 லட்ச ரூபாய் மட்டும்தான்.

Most Read Articles

English summary
Cheapest Turbo-Petrol Cars In India Under Rs 8 Lakh - Volkswagen Polo, Nissan Magnite, Renault Kiger. Read in Tamil
Story first published: Friday, February 19, 2021, 10:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X