Just In
- 1 hr ago
இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!
- 1 hr ago
நிஜ வாழ்க்கை ஹீரோ மயூர் ஷெல்கேவை விலையுயர்ந்த பைக்கால் கவுரவித்த ஜாவா... இதோட விலை எவ்ளோ தெரியுமா?
- 1 hr ago
சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...
- 2 hrs ago
மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!
Don't Miss!
- Finance
கையை நீட்டினால் போதும்.. அமேசானின் புதிய பேமெண்ட் முறை..!
- News
இப்போது இந்தியா பெயரை கேட்டாலே.. பதறியடித்து ஓடும் உலக நாடுகள்.. என்ன காரணம் தெரியுமா?
- Lifestyle
சமையலுக்கு பயன்படுத்தும் இந்த பருப்பு வகைகள் நம்மை கொரோனாவிலிருந்து பாதுகாக்குமாம் தெரியுமா?
- Movies
ரம்ஜான் நாளில் சிம்பு ரசிகர்களுக்கு ட்ரீட்.. ஸ்பெஷல் அப்டேட்டை வெளியிட்டது படக்குழு!
- Education
ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் NIT-யில் பேராசிரியர் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Sports
ஹர்பஜன் காலில் விழுந்த சுரேஷ் ரெய்னா. களத்திலேயே நடந்த சம்பவம்.. சக வீரர்கள் திகைப்பு..காரணம் என்ன?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அதிகம் விற்பனையாகும் காரை பயன்படுத்த சீனாவில் தடை... காரணம் தெரிஞ்சா ஒரு நிமிஷம் தூக்கி போடும்...
உலக புகழ்பெற்ற டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்களை பயன்படுத்த தடை சீன அரசு அதிரடி உத்தரவு போட்டுள்ளது. யாருக்கு இந்த உத்தரவு பொருந்தும், எதற்காக இத்திடீர் உத்தரவு என்பது பற்றிய தகவலை இப்பதிவில் காணலாம்.

உலக புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக, வெறும் மின்சார வாகன தயாரிப்பில் மட்டுமே ஈடுபட்டு வரும் டெஸ்லா நிறுவனம் வளர்ந்து நிற்கின்றது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளைப் பயன்படுத்தவே சீன அரசு அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த தடையுத்தரவு அந்நாட்டின் ராணுவத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அரசின் முக்கியத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. டெஸ்லா மின்சார கார்கள் அதி-நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட வாகனமாகும். இதில், தானியங்கி தொழில்நுட்பம் வசதி இணைக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி இன்னும் பல சிறப்பு தொழில்நுட்ப வசதிகளை டெஸ்லா மின்சார கார் பெற்றிருக்கின்றது. இருப்பினும், இதன் விலை பிற சொகுசு கார்களைக் காட்டிலும் மிக குறைவானதாக இருக்கின்றது. எனவேதான் உலகப் புகழ்பெற்ற பிஎம்டபிள்யூ நிறுவனத்தை டெஸ்லா விற்பனையில் தொடர்ச்சியாக வீழ்த்தி வருகின்றது.

குறைந்த விலை, அதிக தொழில்நுட்ப வசதியின் காரணத்தினால் உலகளவில் புகழ்பெற்ற வாகனமாக டெஸ்லா உயர்ந்திருக்கின்றது. கடந்த 2020ம் ஆண்டில் வெறும் 12.41 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மட்டுமே இருந்த இந்நிறுவனத்தின் மதிப்பு தற்போது 2021ம் ஆண்டில் 31.98 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

இந்த அபரீதமான வளர்ச்சியால் இந்நிறுவனம் உலகின் அதிக மதிப்புமிக்க கார் உற்பத்தி நிறுவனங்களின் பட்டியலில் 6ஆம் இடத்தைப் பிடித்திருக்கின்றது. இத்தகைய நிறுவனத்தின் தயாரிப்புகளையே மிலிட்டரி மற்றும் அரசின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகள் பயன்படுத்த வேண்டாம் என சீனா அறிவித்துள்ளது.

டெஸ்லா கார்கள் பல முக்கிய தகவல்களை அதன் வாடிக்கையாளரிடத்தில் இருந்து பெறுவதானலேயே இந்த தடையை சீன அரசு விதித்துள்ளது. குறிப்பிட்ட சில செக்யூரிட்டி காரணங்களுக்காக டெஸ்லா மின்சார கார் அதன் பயனர்களின் தகவலைக் கோருகின்றது.

திருட்டு, உரிமையாளர் அல்லாத நபரின் அணுகலை தவிர்த்தல் மற்றும் தானியங்கி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு என பல முக்கியமான செயல்களுக்காக தகவல்கள் பெறப்படுகின்றன. இந்த தகவல்களைக் கொண்டு முறைகேடுகள் அரங்கேறலாம் என்ற அச்சத்தின் வெளிப்பாடகவே சீன அரசு இந்த அதிரடி தடையுத்தரவை அறிவித்துள்ளது.

தொடர்ந்து, டெஸ்லா மின்சார கார்களை ராணுவ சொத்துக்கள் இருக்கும் பகுதிகளில் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கார்கள் தானாக இயங்கக்கூடியவை என்பதால் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கேமிராக்கள் வாயிலாக ராணுவத்தின் ரகசிய இடங்கள் கண்கானிக்கப்படலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் இந்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தானாக இயங்குதல், பார்க் செய்யும் போது உதவி செய்வதற்கு, சாலையில் வரும் வாகனங்களை கண்டறிய மற்றும் தானியங்கி பிரேக்கை செயல்படுத்த என எக்கசக்க காரணங்களுக்காக டெஸ்லாவின் மின்சார கார்களில் பல கேமிராக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை பெரும்பாலும் தன்னிச்சையாக செயல்படக் கூடியவை.

இந்த நிலை தங்களின் ரகசியங்களை உளவு பார்க்க அமெரிக்கா அல்லது பிற சமூக விரோதிகளுக்கு உதவலாம் என கூறி ராணுவ பகுதிகளில் டெஸ்லா கார்களை பயன்படுத்த அரசு தடை விதித்திருக்கின்றது. அப்படியே பயன்படுத்தினாலும் குறிப்பிட்ட எல்லைக்கு அப்பாலேயே வாகனத்தை நிறுத்திவிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சீனாவின் அதிரடி நடவடிக்கைக்கு பதிலளித்த டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலன் மஸ்க், "எங்கள் நிறுவன கார் ஒருபோதும் சீனாவில் உளவு பார்க்க பயன்படுத்தப்பட மாட்டாது" என்ற நம்பிக்கை வார்த்தையை கூறியுள்ளார்.

டெஸ்லா நிறுவனம் தனது மிகப்பெரிய வாகன உற்பத்தி ஆலையை சீனாவிலேயே நிறுவி வருகின்றது. உலகின் மிக முக்கியமான மின்வாகன சந்தையாக சீனா விளங்குவதால் இந்த உற்பத்தி ஆலையை நிறுவனம் அங்கு செயல்படுத்தி வருகின்றது. மாடல் ஒய் மற்றும் மாடல் 3 ஆகிய மிக முக்கியமான மின்சார கார் மாடல்கள் பெருமளவில் சீனாவின் ஜிகாஃபேக்டரிலேயே உருவாக்கப்பட்டு வருகின்றது.

இம்மாதிரியான சூழ்நிலையிலேயே டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்களை ராணுவ அதிகாரிகள் பயன்படுத்த வேண்டாம் என சீன அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் கார்களின் விற்பனை சீனாவில் பாதிக்குமோ என்ற அச்சத்தில் டெஸ்லா உறைந்திருக்கின்றது.