Just In
- 2 hrs ago
மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!
- 3 hrs ago
இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா
- 4 hrs ago
ஆரம்பமே அதிரடி... 1 லட்சம் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஓலா திட்டம்... கலக்கத்தில் போட்டியாளர்கள்!
- 4 hrs ago
சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்! வியந்து நிற்கும் இந்திய மின்வாகன சந்தை!
Don't Miss!
- News
'கவலைப்படதீங்க.. கொரோனாவை கட்டுப்படுத்த எல்லா உதவிகளையும் நாங்க செய்கிறோம்'..சீனா அசத்தல் அறிவிப்பு
- Sports
அப்படியே நான் ஷாக்காயிட்டேன்... சாரி கேட்ட விராட் கோலி... என்ன இப்படி பண்ணிட்டாரு கிங் கோலி?
- Finance
ஓலாவின் பிரம்மாண்ட E-scooter திட்டம்.. 1 லட்சம் சார்ஜிங் பாயிண்ட்டுகள்.. ஜூலையில் அறிமுகம்..!
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Lifestyle
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தீபாவளிக்கு ரிலீசாகிறது புதிய சிட்ரோன் சப்-காம்பேக்ட் எஸ்யூவி... கியா சொனெட் போட்டியாளர்
தீபாவளியையொட்டிய பண்டிகை காலத்தில் சிட்ரோன் நிறுவனத்தின் புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் சிட்ரோன் நிறுவனம் விரைவில் இந்தியாவில் கார் வர்த்தகத்தை துவங்க இருக்கிறது. இந்த மாத துவக்கத்தில் தனது முதல் மாடலான சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெளியிட்டது. அடுத்த மாதம் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது.

இந்த புதிய மாடல் ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் இடையிலான விலையில் பிரிமீயம் மிட்சைஸ் எஸ்யூவி மாடலாக வர இருக்கிறது. இந்த நிலையில், சிட்ரோன் நிறுவனத்தின் இரண்டாவது கார் மாடல் குறித்த விபரம் வெளியாகி இருக்கிறது.

அதாவது, இந்திய கார் சந்தையில் அதிக வர்த்தக வளம் மிக்க சப்-காம்பேக்ட் ரக எஸ்யூவி மார்க்கெட்டில் தனது புதிய காரை களமிறக்க சிட்ரோன் திட்டமிட்டுள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் ஆட்டோ தள செய்தி தெரிவிக்கிறது.

வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் இந்த புதிய சிட்ரோன் சப்-காம்பேக்ட் எஸ்யூவியின் உற்பத்தி இந்தியாவில் துவங்கப்படும். இதைத்தொடர்ந்து, வரும் பண்டிகை காலத்தில் இந்த புதிய மாடலை களமிறக்க சிட்ரோன் திட்டமிட்டுள்ளது.

வெளிநாடுகளில் சி3 ஏர்க்ராஸ் என்ற பெயரில் இந்த புதிய கார் விற்பனையில் இருக்கிறது. இந்தியாவில் சி21 என்ற குறியீட்டுப் பெயரில் தற்போது சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பிஎஸ்ஏ குழுமத்தின் சிஎம்பி என்ற கட்டமைப்புக் கொள்கையின் கீழ் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டது. பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே இந்த கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், இரண்டு பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும்.

இந்த காரில் வழங்கப்பட உள்ள பெட்ரோல் எஞ்சின்களுடன் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து மூன்றாவது மாடலாக ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் கார்களுக்கு போட்டியான ரகத்தில் புதிய மாடலை களமிறக்க சிட்ரோன் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மாடலானது சிசி24 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.