Just In
- 2 hrs ago
மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!
- 3 hrs ago
இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா
- 4 hrs ago
ஆரம்பமே அதிரடி... 1 லட்சம் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஓலா திட்டம்... கலக்கத்தில் போட்டியாளர்கள்!
- 4 hrs ago
சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்! வியந்து நிற்கும் இந்திய மின்வாகன சந்தை!
Don't Miss!
- News
'கவலைப்படதீங்க.. கொரோனாவை கட்டுப்படுத்த எல்லா உதவிகளையும் நாங்க செய்கிறோம்'..சீனா அசத்தல் அறிவிப்பு
- Sports
அப்படியே நான் ஷாக்காயிட்டேன்... சாரி கேட்ட விராட் கோலி... என்ன இப்படி பண்ணிட்டாரு கிங் கோலி?
- Finance
ஓலாவின் பிரம்மாண்ட E-scooter திட்டம்.. 1 லட்சம் சார்ஜிங் பாயிண்ட்டுகள்.. ஜூலையில் அறிமுகம்..!
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Lifestyle
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஐரோப்பிய சி3 ஏர்க்ராஸ் காரை இந்தியாவில் சோதித்து பார்க்கும் சிட்ரோன்!! அடுத்து சப்-4 மீட்டரில் ஒரு எஸ்யூவியா?
டாடா நெக்ஸான் போன்ற சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக சிட்ரோன் பிராண்டில் இருந்து வெளிவரவுள்ள சி3 ஏர்க்ராஸ் இந்தியாவில் சாலை சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள ஸ்பை படங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சிட்ரோன் மிக விரைவில் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் மூலம் அதன் விற்பனையை இந்தியாவில் துவங்கவுள்ளது. இதற்கு அடுத்து சிசி21 என்ற குறியீட்டு பெயரை கொண்ட மினி எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அதேநேரம் இவற்றை தொடர்ந்து அடுத்தடுத்ததாக அறிமுகப்படுத்தவுள்ள கார்களின் மீதும் இப்போதே சிட்ரோன் கவனத்தை செலுத்த ஆரம்பித்துவிட்டது. இதன்படி ஐரோப்பிய சந்தைகளில் விற்பனையில் உள்ள சி3 ஏர்க்ராஸ் கார் ஒன்று இந்திய சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியன் ஆட்டோஸ் ப்ளாக் செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள இதுதொடர்பான ஸ்பை படங்களில் சி3 ஏர்க்ராஸ் சோதனை கார் எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்தியாவிற்கான சி3 ஏர்க்ராஸ் காரை வடிவமைப்பதற்கு தேவையான ஆரம்ப கட்ட விபரங்களை சேகரிக்க இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.

அதேநேரம் சிட்ரோனின் இந்திய வணிகத்திற்கு முக்கிய பங்காற்றவுள்ள ப்ளாட்ஃபாரத்தை சோதிப்பதற்காகவும் இந்த சோதனை நடைபெற்றிருக்கலாம். ஐரோப்பாவில் சி3 ஏர்க்ராஸின் நீளம் 4,154மிமீ ஆக உள்ளது. ஆனால் இந்தியாவில் 4 மீட்டருக்கு குறைவான நீளத்தில் தான் இந்த கார் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் இதே 4,154மிமீ நீளத்தில் ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் கார்களுக்கு போட்டியாகவும் இந்த சிட்ரோன் கார் அறிமுகப்படுத்தப்படலாம். ஆனால் இவ்வாறு கொண்டு வரப்பட்டால், உட்புறத்தில் அதிகளவில் ப்ரீமியம் தரத்திலான வசதிகள் கொண்டுவர வேண்டி இருக்கும்.

சிட்ரோன் கார்கள் பொதுவாகவே அதிக விலை கொண்ட கார்களாக பார்க்கப்படுகின்றன. விரைவில் விற்பனையை துவங்கவுள்ள சி5 ஏர்க்ராஸின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை கூட ரூ.33 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது உங்களுக்கு நினைவிருக்கலாம். இதனால் விலைகளை குறைவாக நிர்ணயிக்க வேண்டி சி3 ஏர்க்ராஸ் 4மீ-க்கும் குறைவான நீளத்தில் வடிவமைக்கப்படவே வாய்ப்புள்ளது.

மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக விளங்க கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டுவரும் சிட்ரோன் நிறுவனம், அதற்காக அதன் கார்களை முழுக்க முழுக்க 100% இந்தியாவிலேயே தயாரித்து விற்பனைக்கு கொண்டுவர பணியாற்றி வருகிறது. இவ்வாறான நடவடிக்கைகளினால் சிட்ரோனின் சிறிய ரக கார்கள் ரெனால்ட், நிஸான் போன்றவற்றின் கார்களுக்கு போட்டியாக கொண்டுவரப்படலாம்.

இந்தியாவில் விற்பனைக்கு செய்வதற்காக மட்டுமின்றி தயாரிப்பு கார்களை மற்ற நாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவும் சிட்ரோன் இந்திய சந்தையில் நுழைக்கிறது. ஏனெனில் இந்தியாவில் வாகன தயாரிப்பு பணிகளை எளிதாகவும், குறைந்த முதலீட்டிலும் மேற்கொள்ளலாம் என்பது பரவலான கருத்து.