சோதனை ஓட்டத்தில் சிட்ரோனின் இந்தியாவிற்கான இரண்டாவது கார்!! அறிமுகம் எப்போது?

இந்தியாவில் விற்பனையில் இல்லாத சிட்ரோன் சி3 காம்பெக்ட் எஸ்யூவி காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

சோதனை ஓட்டத்தில் சிட்ரோனின் இந்தியாவிற்கான இரண்டாவது கார்!! அறிமுகம் எப்போது?

பிஎஸ்ஏ க்ரூப் இந்திய சந்தையில் சிட்ரோன் பிராண்டின் மூலம் மீண்டும் கடந்த 2021 ஏப்ரல் மாதத்தில் நுழைந்துள்ளது. சிட்ரோன் பிராண்டில் இருந்து முதலாவதாக வெளிவந்துள்ள சி5 ஏர்க்ராஸ் ப்ரீமியம் எஸ்யூவி கார் லா மைசன் கான்செப்ட் அடிப்படையிலான இந்த பிராண்டின் இந்திய டீலர்ஷிப் மையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சோதனை ஓட்டத்தில் சிட்ரோனின் இந்தியாவிற்கான இரண்டாவது கார்!! அறிமுகம் எப்போது?

சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில் சிட்ரோன் டீலர்ஷிப் மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சி5 ஏர்க்ராஸை தொடர்ந்து இரண்டாவது காரை இந்திய சந்தைக்கு கொண்டுவரும் பணியில் சிட்ரோன் நிறுவனம் ஏற்கனவே இறங்கிவிட்டது.

சோதனை ஓட்டத்தில் சிட்ரோனின் இந்தியாவிற்கான இரண்டாவது கார்!! அறிமுகம் எப்போது?

அடுத்ததாகவும் சி வரிசை காரையே சிட்ரோன் கொண்டுவரவுள்ளது. இந்த வகையில் அடுத்ததாக சிட்ரோன் பிராண்டில் இருந்து வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படும் மாடல்களுள் சி3 காம்பெக்ட் எஸ்யூவியும் ஒன்று. இந்த சப்-4மீ எஸ்யூவி காரின் விலை ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சத்திற்குள் நிர்ணயிக்கப்படலாம்.

சோதனை ஓட்டத்தில் சிட்ரோனின் இந்தியாவிற்கான இரண்டாவது கார்!! அறிமுகம் எப்போது?

இத்தகைய வாங்கத்தக்க விலையினாலும், தோற்றத்திலும் தற்சமயம் அதிகளவில் விற்பனையாகி கொண்டிருக்கும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், கியா சொனெட், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், நிஸான் மேக்னைட் கார்களுக்கு சிட்ரோன் சி3 முக்கிய போட்டி மாடலாக விளங்கும்.

சோதனை ஓட்டத்தில் சிட்ரோனின் இந்தியாவிற்கான இரண்டாவது கார்!! அறிமுகம் எப்போது?

இந்தியாவில் அடுத்த 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த கார் உலகளவில் அதற்கு முன்னதாகவே அறிமுகமாகவுள்ளது. இந்த நிலையில் தான் தற்போது இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் இந்தியாவில் சோதனையின் போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

சோதனை ஓட்டத்தில் சிட்ரோனின் இந்தியாவிற்கான இரண்டாவது கார்!! அறிமுகம் எப்போது?

இதுதொடர்பான ஸ்பை படங்கள் காடிவாடி செய்திதளம் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன. இந்த சோதனை ஓட்டத்தில் கார் எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்படவில்லை. ஏனெனில் இந்த சிட்ரோன் காம்பெக்ட் கார் தோற்றத்தில் எப்படி இருக்கும் என்பது ஏற்கனவே சிறிய அளவில் வெளியிடப்பட்டுவிட்டது.

சோதனை ஓட்டத்தில் சிட்ரோனின் இந்தியாவிற்கான இரண்டாவது கார்!! அறிமுகம் எப்போது?

இதன்படி பார்க்கும்போது, எல்இடி டிஆர்எல்-கள் உடன் பிளவுப்பட்ட வடிவிலான ஹெட்லேம்ப், வித்தியாசமான வடிவில் முன் மற்றும் பின்பக்கத்தில் சறுக்கு தட்டுகள், தடிமனான கருப்பு நிற சக்கர வளைவுகள், C-வடிவில் எல்இடி டெயில்லேம்ப்கள், இரட்டை நிறத்தில் மேற்கூரை, 16 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவற்றை சிட்ரோன் சி3-இல் எதிர்பார்க்கலாம்.

சோதனை ஓட்டத்தில் சிட்ரோனின் இந்தியாவிற்கான இரண்டாவது கார்!! அறிமுகம் எப்போது?

1.2 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினை பெறவுள்ள இந்த காரில் ட்ரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ட்யுல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளாக வழங்கப்பட உள்ளன. இதன் சிஎம்பி இயக்குத்தளத்தில் தான் எதிர் காலத்தில் ஜீப் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் வெளிவரவுள்ளன.

Most Read Articles
மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen C3 Aircross Sub 4M Spied. Read All Details In Tamil.
Story first published: Sunday, June 6, 2021, 3:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X