காம்பெக்ட் எஸ்யூவி காரை களமிறக்க தயாராகும் சிட்ரோன்!! சிசி21 எஸ்யூவி சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

சிட்ரோன் சிசி21 எஸ்யூவி காரின் பிரத்யேக சோதனை ஓட்ட ஸ்பை படங்கள் நமக்கு கிடைத்துள்ளன. அவற்றின் மூலம் நமக்கு தெரியவந்துள்ள விஷயங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

காம்பெக்ட் எஸ்யூவி காரை களமிறக்க தயாராகும் சிட்ரோன்!! சிசி21 எஸ்யூவி சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

சி5 ஏர்க்ராஸின் மூலம் இந்திய சந்தையில் பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோன் கடந்த ஆண்டில் நுழைந்தது. சி5 மாடலை தொடர்ந்து அடுத்ததாக அறிமுகப்படுத்த பலத்தரப்பட்ட மாடல்களை சோதனை ஓட்டங்களில் சிட்ரோன் உட்படுத்தி வருகிறது. இதில் சிசி21 எஸ்யூவியும் ஒன்றாகும்.

காம்பெக்ட் எஸ்யூவி காரை களமிறக்க தயாராகும் சிட்ரோன்!! சிசி21 எஸ்யூவி சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

ஏனெனில் இந்த சிட்ரோன் எஸ்யூவி காரும் சமீப காலமாக இந்திய சாலைகளில் தொடர் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது மீண்டும் இந்த எஸ்யூவி கார் இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூருவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்டத்தில் சிட்ரோன் சிசி21 எஸ்யூவி கார் முழுவதும் மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளது.

காம்பெக்ட் எஸ்யூவி காரை களமிறக்க தயாராகும் சிட்ரோன்!! சிசி21 எஸ்யூவி சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

இதனால் காரை பற்றிய பெரியதாக எந்த தகவலையும் இவற்றில் இருந்து பெற முடியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இவ்வாறு சோதனை ஓட்டங்கள் அதிகரித்து வருவதால், இந்த சிட்ரோன் காரின் அறிமுகத்தை விரைவில் எதிர்பார்க்கிறோம். இந்திய சந்தைக்கும், இந்திய வாடிக்கையாளர்களுக்கும் என்றே பிரத்யேகமாக உருவாக்கப்படும் இந்த சிட்ரோன் காரில் சிசி21 என்பது குறியீட்டு பெயரே ஆகும்.

காம்பெக்ட் எஸ்யூவி காரை களமிறக்க தயாராகும் சிட்ரோன்!! சிசி21 எஸ்யூவி சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

அதாவது இந்த எஸ்யூவி காரினை வேறொரு பெயரில் சிட்ரோன் நிறுவனம் அறிமுகப்படுத்தலாம். எங்களுக்கு தெரிந்தவரையில், இதன் பெயர் சிட்ரோன் சி3 என நிர்ணயிக்கப்படலாம். சி5 ஏர்க்ராஸை காட்டிலும் அளவில் சிறியதாக விளங்கவுள்ள இந்த மாடல், சி5-க்கு கீழே நிலைநிறுத்தப்பட உள்ளது. சிசி21 என அழைக்கப்படும் சி3 மாடலின் இந்திய அறிமுகம் குறித்து தற்போது வரையில் சிட்ரோன் மூச்சுக்கூட விடாமல் உள்ளது.

காம்பெக்ட் எஸ்யூவி காரை களமிறக்க தயாராகும் சிட்ரோன்!! சிசி21 எஸ்யூவி சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

காமன் மாடுலர் ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்படும் சி3 எஸ்யூவி கார் இந்திய சந்தைக்கேற்ப மலிவானதாக உருவாக்கப்படுவதாகவும், இதனால் இதன் விலையினை மற்ற போட்டி மாடல்களுக்கு சவாலானதாக இருக்கும் எனவும் சிட்ரோன் தெரிவிக்கிறது. இந்தியாவில் கடந்த சில வருடங்களில் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவு எந்த அளவிற்கு போட்டி மிகுந்ததாக மாறியுள்ளது என்பதை நீங்களும் பார்த்து கொண்டுதான் வருகிறீர்கள்.

காம்பெக்ட் எஸ்யூவி காரை களமிறக்க தயாராகும் சிட்ரோன்!! சிசி21 எஸ்யூவி சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

இந்திய சந்தையில் சிட்ரோன் சிசி21 எஸ்யூவி காருக்கு விற்பனையில் நிஸான் மேக்னைட், ரெனால்ட் கிகர், டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்டவை போட்டியாக விளங்கவுள்ளன. இவற்றில் இருந்து வேறுப்பட்டு தெரிவதற்காக இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி காரை சற்று வித்தியாசமான தோற்றத்தில் சிட்ரோன் வழங்கும் என தெரிகிறது.

காம்பெக்ட் எஸ்யூவி காரை களமிறக்க தயாராகும் சிட்ரோன்!! சிசி21 எஸ்யூவி சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

ஏனெனில் இந்த சோதனை ஓட்ட ஸ்பை படங்களிலும் சிட்ரோன் சிசி21 காம்பெக்ட் எஸ்யூவி கார் சற்று புதுமையான வடிவில் மறைப்புகளை தாண்டி காட்சி தருகிறது. அதுமட்டுமின்றி, தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக, இந்தியாவிலேயே முதல் எஸ்யூவி காராக நெகிழ்வு-எரிபொருள் என்ஜினை சிசி21 மாடல் பெற்றுவரவுள்ளது. நெகிழ்வு-எரிபொருள் என்ஜின் கொண்ட வாகனங்களில் பெட்ரோல் மட்டுமின்றி, எத்தனால்-சார்ந்த எரிபொருளையும் பயன்படுத்தலாம்.

காம்பெக்ட் எஸ்யூவி காரை களமிறக்க தயாராகும் சிட்ரோன்!! சிசி21 எஸ்யூவி சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, சிட்ரோன் சி3 எஸ்யூவி காரில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு நெகிழ்வு-எரிபொருள் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. இது அதிகப்பட்சமாக 130 பிஎச்பி வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கலாம். அதேநேரம் இந்த எஸ்யூவி காரில் 1.6 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் தேர்வும் வழங்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.

காம்பெக்ட் எஸ்யூவி காரை களமிறக்க தயாராகும் சிட்ரோன்!! சிசி21 எஸ்யூவி சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

இந்த NA பெட்ரோல் என்ஜின் சி3 மாடலின் விலை குறைவான வேரியண்ட்களில் தேர்வாக கொடுக்கப்படலாம். அதேநேரம் நம் இந்திய அரசு வரி சலுகைகளை பெற வேண்டி, 1.6 லி நேச்சுரலி அஸ்பிரேட்டட் என்ஜினிற்கு பதிலாக, 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் என்ஜின் தேர்வு வழங்கப்படலாம். டிரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையான தேர்வாகவும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூடுதல் தேர்வாகவும் கொடுக்கப்படலாம்.

காம்பெக்ட் எஸ்யூவி காரை களமிறக்க தயாராகும் சிட்ரோன்!! சிசி21 எஸ்யூவி சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

முன்னதாக சி3 எஸ்யூவி கார் குறித்த டீசர் படம் ஒன்றினை சிட்ரோன் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. இந்த படத்தின் மூலம் விற்பனையில் உள்ள சி5 ஏர்க்ராஸை காட்டிலும் இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி அளவில் சற்று சிறியது என்பதை மீண்டும் அறிந்திருந்தோம். அந்த படத்தில், காரின் முன்பக்கத்தில் க்ரில் அமைப்புடன் பிளவுப்பட்ட எல்இடி டிஆர்எல்கள் மிகவும் நேர்த்தியாக இணைக்கப்பட்டிருந்தன.

காம்பெக்ட் எஸ்யூவி காரை களமிறக்க தயாராகும் சிட்ரோன்!! சிசி21 எஸ்யூவி சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

இது தாமதமான நுழைவுதான் என்றாலும், சிசி21 என்ற குறியீட்டு பெயரை கொண்ட இந்த மாடலின் மூலம் இந்திய காம்பெக்ட் எஸ்யூவி கார் பிரிவில் இந்த பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனம் ஒரு கவனிக்கத்தக்க இடத்தை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் சிட்ரோன் பிராண்டில் இருந்து விற்பனையில் உள்ள சி5 ஏர்க்ராஸ் அளவில் பெரியதாக இருப்பது மட்டுமின்றி, அதற்கேற்ப விலையினையும் சற்று அதிகமாக கொண்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen CC21 Spy Pictures Spotted Testing India
Story first published: Tuesday, December 7, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X