அடுத்த 6 மாதங்களில் விற்பனைக்கு வரும் சிட்ரோன் சி3 எஸ்யூவி!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த சிட்ரோன் காராக எதிர்பார்க்கப்படும் சி3 காம்பெக்ட் எஸ்யூவி காரின் இந்திய அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதனை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அடுத்த 6 மாதங்களில் விற்பனைக்கு வரும் சிட்ரோன் சி3 எஸ்யூவி!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோன் உலகளவில் அதன் சி3 எஸ்யூவி காரை கடந்த செப்டம்பர் மாதத்தில் உலகளவில் வெளியீடு செய்தது. இந்திய சந்தைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் இந்தியாவில் இருந்துதான் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டது.

அடுத்த 6 மாதங்களில் விற்பனைக்கு வரும் சிட்ரோன் சி3 எஸ்யூவி!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மேலும், இந்தியாவிலேயே உருவாக்கப்பட உள்ள சிட்ரோன் சி3 மாடலின் இந்திய அறிமுகம் எப்போது இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிட்ரோன் இந்தியா நிறுவனம் அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த காரின் அறிமுகம் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. சி3 காரின் படத்துடன் சிட்ரோன் பதிவிட்ட பதிவு ஒன்றில் நெட்டிசன் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலாக இதன் இந்திய அறிமுகம் தொடர்பான தகவல்களை சிட்ரோன் தெரிவித்துள்ளது.

அடுத்த 6 மாதங்களில் விற்பனைக்கு வரும் சிட்ரோன் சி3 எஸ்யூவி!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அந்த பதில் பதிவில், சி3 இந்தியாவில் 2022ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சிட்ரோன் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது. சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி மாடலுக்கு அடுத்து இரண்டாவது சிட்ரோன் காராக கொண்டுவரப்படும் சி3 கிட்டத்தட்ட 4 மீட்டர் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளதாலும், அளவில் சற்று சிறியதாக வடிவமைக்கப்பட உள்ளதாலும் சி3 காம்பெக்ட் எஸ்யூவியின் விலையினை இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப குறைவாக எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

அடுத்த 6 மாதங்களில் விற்பனைக்கு வரும் சிட்ரோன் சி3 எஸ்யூவி!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

எந்த அளவிற்கு என்றால், சிட்ரோன் சி3-இன் விலையினை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சங்கள் வரையில் எதிர்பார்க்கிறோம். இத்தகைய சவாலான விலைகளில் பல கார்கள் நம் நாட்டில் விற்பனை செய்யப்பட்டு கொண்டு இருந்தாலும், தனது ஸ்போர்டியான தோற்றத்தினால் வாடிக்கையாளர்களை சி3 வெகுவாக கவரும் என இப்போதே கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 6 மாதங்களில் விற்பனைக்கு வரும் சிட்ரோன் சி3 எஸ்யூவி!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சமீபத்தில் வெளியீடு செய்யப்பட்ட புதிய சி3 காரின் முன்பக்கத்தில் ட்ரெப்சாய்டல் ஹெட்லேம்ப்கள், நேர்த்தியான தோற்றத்தில் டிஆர்எல்கள், மெஷ் க்ரில் மற்றும் நேர்த்தியான வடிவில் காற்று ஏற்பான் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் முன்பக்க ஃபாக் விளக்குகளை சுற்றிலும் மாறுப்பட்ட நிறம் கொடுக்கப்பட்டிருந்தது. வெளிப்பக்கத்தில் சிட்ரோன் சி3 சுற்றிலும் கருப்பு நிற பிளாஸ்டிக் கிளாடிங்குகளை கொண்டுள்ளது.

அடுத்த 6 மாதங்களில் விற்பனைக்கு வரும் சிட்ரோன் சி3 எஸ்யூவி!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இதனுடன் காரின் பக்கவாட்டின் அடிப்பகுதியில் வழங்கப்பட்டுள்ள மாற்று நிறத்தில் பார்டரை கொண்ட துளைகள் இந்தியர்களை வெகுவாக கவரும் என சிட்ரோன் நம்பிக்கை கொண்டுள்ளது. இதன் மெஷின் கட் அலாய் சக்கரங்கள் இரட்டை நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் மோதலால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் அடித்தட்டு மெட்டாலிக் ஷேடில் பொருத்தப்பட்டிருக்க, பின்கதவில் லோகோ கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டிருந்தது.

அடுத்த 6 மாதங்களில் விற்பனைக்கு வரும் சிட்ரோன் சி3 எஸ்யூவி!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

காரின் பக்கவாட்டிற்கு சற்று வளைக்கப்பட்டுள்ள டெயில்லேம்ப் அமைப்பில் சில மடிப்புகளை பார்க்க முடிகிறது. ஒற்றை மற்றும் ட்யூல்-டோன் நிறத்தேர்வில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படும் சி3 எஸ்யூவி மாடலின் ட்யூல்-டோன் நிறத்தேர்வில் A,B மற்றும் C பில்லர்கள் கருப்பு நிறத்தில் வழங்கப்படவுள்ளன.

அடுத்த 6 மாதங்களில் விற்பனைக்கு வரும் சிட்ரோன் சி3 எஸ்யூவி!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அதேநேரம் சிட்ரோன் சி3 காரை இரட்டை-நிற பெயிண்ட்டில் நீங்கள் வாங்கும்போது, மேற்கூரை, பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் மற்றும் பக்கவாட்டின் கீழ்பகுதியில் காற்று துளைகள் உள்ளிட்டவை காரின் உடல் நிறத்தில் இல்லாமல், பளிச்சிடும் நிறத்தில் கொடுக்கப்படும். இவற்றுடன் சி3 காரை தங்களது விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ்ட் செய்து கொள்ளும் வாய்ப்பையும் வாடிக்கையாளர்களுக்கு சிட்ரோன் வழங்கவுள்ளது.

அடுத்த 6 மாதங்களில் விற்பனைக்கு வரும் சிட்ரோன் சி3 எஸ்யூவி!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இதற்காக பிராண்டின் சில அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் அறிவிக்கப்பட உள்ளன. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு சி3 காம்பெக்ட் எஸ்யூவியில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. இதனுடன் 5-ஸ்பீடு மேனுவல் & ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. சி3 எஸ்யூவி காரில் டீசல் என்ஜின் தேர்வு வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. ஆனால், நெகிழ்வு-எரிபொருள் என்ஜினை முதல்முறையாக இந்திய சந்தையில் பெறவுள்ள கார் சிட்ரோன் சி3 என்பது தெரியும்.

அடுத்த 6 மாதங்களில் விற்பனைக்கு வரும் சிட்ரோன் சி3 எஸ்யூவி!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்த வகையில் இந்த சிட்ரோன் காரில் பெட்ரோல் மட்டுமின்றி, பெட்ரோல் உடன் எத்தனாலையும் கலந்து பயன்படுத்தலாம். பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டிருப்பதால், இந்த நெகிழ்வு-எரிபொருள் என்ஜின் தேர்வு இந்தியர்கள் பலரை வெகுவாக கவர்ந்திழுக்கும் என்பது மட்டும் உறுதி. ஏனெனில் இத்தகைய என்ஜினை கொண்டுவரவே ஒன்றிய அரசும் முயற்சித்து வருகிறது.

Most Read Articles

மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen C3 Set To Launch In First Half Of 2022.
Story first published: Wednesday, December 15, 2021, 23:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X