புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் இந்திய வெளியீட்டு தேதி வெளியீடு... சென்னையில் உற்பத்தி!

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்தகூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் இந்திய வெளியீட்டு தேதி வெளியீடு... சென்னையில் உற்பத்தி!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ குழுமம் இந்தியாவில் இரண்டாவது இன்னிங்சை துவங்குவதற்கு ஆயத்தமாகி வருகிறது. தனது சிட்ரோன் பிராண்டு கார்களுடன் இந்தியாவில் களம் காண உள்ளது.

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் இந்திய வெளியீட்டு தேதி வெளியீடு... சென்னையில் உற்பத்தி!

கடந்த ஆண்டு கொரோனாவால் இந்திய பிரவேசத்தை தவிர்த்த, பிஎஸ்ஏ குழுமம் இந்த ஆண்டு துவக்கத்திலேயே வர்த்தகத்தை துவங்குவதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறது.

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் இந்திய வெளியீட்டு தேதி வெளியீடு... சென்னையில் உற்பத்தி!

அதன்படி, வரும் பிப்ரவரி 1ந் தேதி சிட்ரோன் பிராண்டில் முதல் மாடலாக வர இருக்கும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை இந்தியாவில் முறைப்படி வெளியிட உள்ளது. ஏற்கனவே சென்னையில் வைத்து இந்த கார் இந்தியர்களின் பொது பார்வைக்கு வெளியிடப்பட்டாலும், விற்பனைக்கு முந்தைய வெளியீட்டு நிகழ்வாக இது அமையும்.

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் இந்திய வெளியீட்டு தேதி வெளியீடு... சென்னையில் உற்பத்தி!

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி பிஎஸ்ஏ குழுமத்தின் EMP2 என்ற கட்டமைப்புக் கொள்கையின் கீழ் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பிரெஞ்ச் கார் வடிவமைப்பு நிபுணர்களின் கைவணத்தில் பல பிரத்யேக வடிவமைப்பு தாத்பரியங்களுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் இந்திய வெளியீட்டு தேதி வெளியீடு... சென்னையில் உற்பத்தி!

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியில் சிட்ரோன் கார்களுக்கு உரிய பிரத்யேக அம்சங்களுடன் மிக அழகாக இருக்கிறது. வலிமையான பம்பர், பெரிய சக்கரங்கள், பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்கள், அலங்கார பாகங்கள் மற்றும் அழகிய டெயில் லைட் க்ளஸ்ட்டர்களுடன் இந்தியர்களை கவர வருகிறது.

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் இந்திய வெளியீட்டு தேதி வெளியீடு... சென்னையில் உற்பத்தி!

இந்த காரில் 8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் முக்கிய அம்சங்களாக உல்ளன. இந்த காரில் பனோரமிக் சன்ரூஃப், கெஸ்ச்சர் கன்ட்ரோல் மூலமாக டெயில் கேட் திறப்பு வசதி, டியூவல் டோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் ஓட்டுனர் இருக்கை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் இந்திய வெளியீட்டு தேதி வெளியீடு... சென்னையில் உற்பத்தி!

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 178 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் இந்திய வெளியீட்டு தேதி வெளியீடு... சென்னையில் உற்பத்தி!

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியானது சென்னை அருகே திருவள்ளூரில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில்தான் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. எனவே, போட்டியாளர்களுக்கு மிக சவாலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #சிட்ரோவன் #citroen
English summary
French carmaker Citroen is all set to enter the Indian market with the C5 Aircross SUV.The company has announced that the C5 Aircross to be unveiled in India on February 1, 2021.
Story first published: Tuesday, January 5, 2021, 13:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X