வேற லெவல் ஸ்டைலு... இந்திய சாலையில் காட்சித்தந்த சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ்!! ஆனா விலையை பார்த்தா ஆசையே போயிரும்

விற்பனையில் இல்லாத சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் கார் எந்தவொரு மறைப்புமின்றி இந்தியாவில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

வேற லெவல் ஸ்டைலு... இந்திய சாலையில் காட்சித்தந்த சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ்!! ஆனா விலையை பார்த்தா ஆசையே போயிரும்

இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக நுழையவுள்ளதாக பிஎஸ்ஏ க்ரூப்பை சேர்ந்த பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோன் சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.

வேற லெவல் ஸ்டைலு... இந்திய சாலையில் காட்சித்தந்த சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ்!! ஆனா விலையை பார்த்தா ஆசையே போயிரும்

இந்த வகையில் சிட்ரோன் பிராண்டில் இருந்து முதலாவதாக வெளிவரவுள்ள சி5 ஏர்க்ராஸ் கடந்த 2020ஆம் ஆண்டே அறிமுகமாக வேண்டியது. ஆனால் தாமதமாக வருகிற பிப்ரவரி மாதத்தில் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.

வேற லெவல் ஸ்டைலு... இந்திய சாலையில் காட்சித்தந்த சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ்!! ஆனா விலையை பார்த்தா ஆசையே போயிரும்

இதற்கிடையில் இந்த ஏர்க்ராஸ் காரின் சோதனை ஓட்டங்கள் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து ரஷ்லேன் செய்திதளம் மூலம் கிடைத்துள்ள படங்களில் முதன்முறையாக சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் கார் இரட்டை-நிறத்தில் காட்சியளிக்கிறது.

வேற லெவல் ஸ்டைலு... இந்திய சாலையில் காட்சித்தந்த சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ்!! ஆனா விலையை பார்த்தா ஆசையே போயிரும்

காரின் கீழ்பகுதிகளுக்கு சில்வர் நிறமும், காரின் மேல் பகுதிகளுக்கு கருப்பு நிறமும் வழங்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகே உள்ள சிகே பிர்லாவின் தொழிற்சாலையில் இந்த சிட்ரோன் கார்கள் அசெம்பிள் செய்யப்படுவதால், இந்த சோதனை ஓட்டம் நமது சென்னையில்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேற லெவல் ஸ்டைலு... இந்திய சாலையில் காட்சித்தந்த சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ்!! ஆனா விலையை பார்த்தா ஆசையே போயிரும்

முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ள சி5 ஏர்கார்ஸ் காரின் இந்த சோதனை ஓட்டத்தின் இரு ஸ்பை படங்கள் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளன. இவை இரண்டிலும் காரின் பக்கவாட்டு பகுதியை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது.

வேற லெவல் ஸ்டைலு... இந்திய சாலையில் காட்சித்தந்த சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ்!! ஆனா விலையை பார்த்தா ஆசையே போயிரும்

இருப்பினும் காரின் அழகை பற்றி, நமக்கு காட்சிதரும் இரட்டை-நிற அலாய் சக்கரங்களே கூறிவிடுகின்றன. இந்த 17 இன்ச் அலாய் சக்கரங்களுடன் இந்த ஸ்பை படங்களில் கார் மேற்கூரைக்கு மேலே ரூஃப் ஸ்பாய்லரையும் கொண்டுள்ளது.

வேற லெவல் ஸ்டைலு... இந்திய சாலையில் காட்சித்தந்த சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ்!! ஆனா விலையை பார்த்தா ஆசையே போயிரும்

1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகளில் வழங்கப்படவுள்ள சி5 ஏர்க்ராஸ் காரில் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் என்ற இரு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படவுள்ளன.

பிஎஸ்ஏ க்ரூப் சிட்ரோன் சி5 கார்களை அதன் லா மைசன் சிட்ரோன் ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யவுள்ளது. சிகேடி முறையில் சந்தைப்படுத்தப்பட உள்ளதால் இந்த ஏர்க்ராஸ் காரின் விலை ரூ.30 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles

மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen C5 Aircross New Dual Tone Colour Spotted
Story first published: Wednesday, January 20, 2021, 23:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X