உரிமையாளர்களே திகைக்கும் வகையில் டெலிவரி செய்த டீலர்கள்... சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் கார் டெலிவரி பணி தொடக்கம்!

உரிமையாளர்களே திகைத்து போகும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கார்களை டீலர்கள் டெலிவரி கொடுத்திருக்கின்றனர். பிறந்த நாள் கொண்டாட்டத்தைபோல் நிகழ்ந்த டெலிவரி பணிகள். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கார் டெலிவரி தொடக்கம்... உரிமையாளர்களே திகைக்கும் வகையில் கார்களை டெலிவரி செய்த டீலர்கள்...

சிட்ரோன் நிறுவனம் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் டெலிவரி பணிகளை இந்தியாவில் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கால் தடம் பதித்து இந்நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்த முதல் தயாரிப்பே இந்த சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கார். ஏப்ரல் 7ம் தேதி அன்றே இதனை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது, சிட்ரோன்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கார் டெலிவரி தொடக்கம்... உரிமையாளர்களே திகைக்கும் வகையில் கார்களை டெலிவரி செய்த டீலர்கள்...

இந்த நிலையிலேயே இக்காரின் டெலிவரி பணிகள் நாட்டில் தொடங்கப்பட்டுள்ளன. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட அன்றைய தினமே சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கான புக்கிங் பணிகளும் தொடங்கப்பட்டன. இது தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே ஆயிரத்துக்கும் அதிகமானோர் சி5 ஏர்க்ராஸ் காரை முன் பதிவு செய்தனர். இது மிக சிறப்பான முன்பதிவு எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தகுந்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கார் டெலிவரி தொடக்கம்... உரிமையாளர்களே திகைக்கும் வகையில் கார்களை டெலிவரி செய்த டீலர்கள்...

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ஓர் பிரீமியம் தர காராகும். எனவேதான் இதன் விலை சற்று உயர்வானதாக காட்சியளிக்கின்றது. ரூ. 29.90 லட்சம் என்ற விலையில் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கார் டெலிவரி தொடக்கம்... உரிமையாளர்களே திகைக்கும் வகையில் கார்களை டெலிவரி செய்த டீலர்கள்...

இந்தியாவில் இதுவரை 10 ஷோரூம்களை மட்டுமே சிட்ரோன் நிறுவனம் திறந்திருக்கின்றது. இதன் மூலம் மற்றும் ஆன்லைன் வழியாக மட்டுமே புக்கிங்கினை சிட்ரோன் ஏற்று வருகின்றது. விரைவில் நாடு முழுவதும் தன்னுடைய விற்பனை நிலையங்களை நிறுவ நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கார் டெலிவரி தொடக்கம்... உரிமையாளர்களே திகைக்கும் வகையில் கார்களை டெலிவரி செய்த டீலர்கள்...

இதுமட்டுமின்றி, இன்னும் ஒரு சில மாதங்களில் நாட்டிற்கான இரண்டாவது மாடல் காரை களமிறக்கவும் சிட்ரோன் திட்டமிட்டுள்ளது. ஆனால், இவை சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரைப் போன்றில்லாமல் சற்று குறைந்த விலையிலேயே விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கார் டெலிவரி தொடக்கம்... உரிமையாளர்களே திகைக்கும் வகையில் கார்களை டெலிவரி செய்த டீலர்கள்...

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ஃபீல் மற்றும் ஷைன் என 2 வேரியண்ட்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். அதேவேலையில் இந்த எஸ்யூவி ஒரே ஒரு டீசல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றது. இது சற்று கவலையான விஷயமாக இருந்தாலும் தொழில்நுட்பம் சொகுசு வசதிகளின் வாயிலாக இந்த குறையை நிறுவனம் போக்கியிருக்கின்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கார் டெலிவரி தொடக்கம்... உரிமையாளர்களே திகைக்கும் வகையில் கார்களை டெலிவரி செய்த டீலர்கள்...

சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் யூனிட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 176 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜினில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கார் டெலிவரி தொடக்கம்... உரிமையாளர்களே திகைக்கும் வகையில் கார்களை டெலிவரி செய்த டீலர்கள்...

பனரோமிக் சன்ரூஃப், 12.3 இன்சிலான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதி கொண்ட 8 இன்சிலான தொடுதிரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், எலெக்ட்ரிக் முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை சிட்ரோன் இக்காரில் வழங்குகின்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கார் டெலிவரி தொடக்கம்... உரிமையாளர்களே திகைக்கும் வகையில் கார்களை டெலிவரி செய்த டீலர்கள்...

இதுதவிர, க்ரூஸ் கன்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, 6 ஏர்பேக்குகள், இஎஸ்சி, டிராக்சன் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டெசண்ட் கன்ட்ரோல், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், ரியர் வியூ கேமிரா, இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான வசதிகளும் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles

மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroën C5 Aircross SUV Deliveries Commence In India. Read In Tamil.
Story first published: Saturday, April 24, 2021, 10:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X