இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி... விலை எவ்ளோனு தெரியுமா?

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி... விலை எவ்ளோனு தெரியுமா?

பிரான்ஸை சேர்ந்த சிட்ரோன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் தயாரிப்பான சி5 ஏர்க்ராஸ் (Citroen C5 Aircross) எஸ்யூவி காரை இன்று (ஏப்ரல் 7) விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு வந்துள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டி-ராக் உள்ளிட்ட கார்களுடன், சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி போட்டியிடும். ஃபீல் மற்றும் ஷைன் என மொத்தம் 2 வேரியண்ட்களில், சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு கிடைக்கும். இந்த செக்மெண்ட்டில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் பெரும்பாலான வசதிகளை, இந்த 2 வேரியண்ட்களிலும் சிட்ரோன் வழங்கியுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி... விலை எவ்ளோனு தெரியுமா?

சிட்ரோன் நிறுவனம் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை இந்திய சந்தைக்கு CKD வழியில் கொண்டு வருகிறது. அதாவது முக்கிய பாகங்கள் தருவிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள ஆலையில் அசெம்பிள் செய்யப்படும். அதே நேரத்தில் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ஒரே ஒரு டீசல் இன்ஜின் தேர்வுடன் மட்டுமே விற்பனை செய்யப்படும்.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி... விலை எவ்ளோனு தெரியுமா?

இது 2.0 லிட்டர் யூனிட் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 176 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ஒரு லிட்டருக்கு 18.6 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி... விலை எவ்ளோனு தெரியுமா?

ஆன்லைன் மூலமாகவும் மற்றும் சிட்ரோன் நிறுவனத்தின் டீலர்ஷிப்கள் வாயிலாகவும் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு ஏற்கனவே முன்பதிவு தொடங்கப்பட்டு விட்டது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் உற்பத்தியும் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி... விலை எவ்ளோனு தெரியுமா?

சாலையில் உடனடியாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் ஷைன் வேரியண்ட்டில், எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில்லைட்கள், பனரோமிக் சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் ஃபீல் வேரியண்ட்டில் இந்த வசதிகள் இல்லை.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி... விலை எவ்ளோனு தெரியுமா?

அதே சமயம் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் இன்டீரியர் சௌகரியமான பயணத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் மற்றும் பயணிகளுக்கு சௌகரியமான பயணம் கிடைப்பதில், சிட்ரோன் நிறுவனம் தனிக்கவனம் செலுத்தியுள்ளது. அத்துடன் நாங்கள் ஏற்கனவே கூறியபடி ஏராளமான வசதிகளையும் இந்த கார் பெற்றுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி... விலை எவ்ளோனு தெரியுமா?

இதில், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் உடன் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை. மேலும் க்ரூஸ் கண்ட்ரோல், கீலெஸ் எண்ட்ரி ஆகிய வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி... விலை எவ்ளோனு தெரியுமா?

அத்துடன் இந்த காரின் பின் பகுதியில் மூன்று தனித்தனி இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பை பொறுத்தவரை, 6 ஏர்பேக்குகள், இஎஸ்சி, டிராக்ஸன் கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், ஹில் டெசண்ட் கண்ட்ரோல், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், ரியர் வியூ கேமரா, இபிடி உடன் ஏபிஎஸ், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி... விலை எவ்ளோனு தெரியுமா?

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் ஃபீல் வேரியண்ட்டின் சிங்கிள்-டோன் மாடலுக்கு 29.90 லட்ச ரூபாய் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த வேரியண்ட்டின் ட்யூயல்-டோன் மாடலுக்கு 30.40 லட்ச ரூபாய் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஷைன் வேரியண்ட்டின் சிங்கிள் மற்றும் ட்யூயல்-டோன் மாடல்கள் 31.90 லட்ச ரூபாய் என்ற விலையில் கிடைக்கும்.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி... விலை எவ்ளோனு தெரியுமா?

இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். அத்துடன் இவை அறிமுக சலுகை விலை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் விலை குறிப்பிட்ட காலத்திற்கு பின் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை நாங்கள் ஏற்கனவே டெஸ்ட் டிரைவ் செய்துள்ளோம். அப்போது இந்த காரின் பல்வேறு அம்சங்கள் எங்களை கவர்ந்தன.

Most Read Articles

மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen C5 Aircross SUV Launched In India: Here Are All The Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X