சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிக்கு முன்பதிவு குவிகிறது... அதுக்குள்ள இவ்ளோ பேர் புக் பண்ணீட்டாங்களா?

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிக்கு முன்பதிவு குவிந்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிக்கு முன்பதிவு குவிகிறது... அதுக்குள்ள இவ்ளோ பேர் புக் பண்ணீட்டாங்களா?

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி நேற்று (ஏப்ரல் 7) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பிரான்ஸை சேர்ந்த முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சிட்ரோன், இந்திய விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள முதல் தயாரிப்புதான் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிக்கு முன்பதிவு குவிகிறது... அதுக்குள்ள இவ்ளோ பேர் புக் பண்ணீட்டாங்களா?

29.90 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் (எக்ஸ் ஷோரூம்) சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு, 1,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளதாக சிட்ரோன் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் பிரீமியம் எஸ்யூவி என்னும் நிலையில், இது சிறப்பான முன்பதிவு எண்ணிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிக்கு முன்பதிவு குவிகிறது... அதுக்குள்ள இவ்ளோ பேர் புக் பண்ணீட்டாங்களா?

ஆன்லைன் மூலமாகவும் மற்றும் இந்தியாவில் உள்ள சிட்ரோன் நிறுவனத்தின் டீலர்ஷிப்கள் மூலமாகவும், சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு தற்போது விறுவிறுப்பாக முன்பதிவு நடைபெற்று வருகிறது. நீங்கள் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரை வாங்குவதாக இருந்தால், 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிக்கு முன்பதிவு குவிகிறது... அதுக்குள்ள இவ்ளோ பேர் புக் பண்ணீட்டாங்களா?

தற்போதைய நிலையில் இந்தியாவில் 10 ஷோரூம்கள் மற்றும் ஆன்லைன் மூலமாக மட்டுமே சிட்ரோன் நிறுவனம் தனது வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. எனினும் சிட்ரோன் நிறுவனம் அடுத்த ஆண்டு தனது இரண்டாவது காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும்போது, அதிகமான ஷோரூம்கள் திறக்கப்படும்.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிக்கு முன்பதிவு குவிகிறது... அதுக்குள்ள இவ்ளோ பேர் புக் பண்ணீட்டாங்களா?

நீங்கள் ஆன்லைன் மூலமாக சிட்ரோன் காரை வாங்கினால், தொழிற்சாலையில் இருந்து உங்கள் வீட்டிற்கே கார் நேரடியாக கொண்டு வரப்பட்டு ஒப்படைக்கப்பட்டு விடும் என சிட்ரோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த 4-5 ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு வருடமும் ஒரு காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு சிட்ரோன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிக்கு முன்பதிவு குவிகிறது... அதுக்குள்ள இவ்ளோ பேர் புக் பண்ணீட்டாங்களா?

முதல் தயாரிப்பான சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி, முக்கிய பாகங்கள் தருவிக்கப்பட்டு, இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும். சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் விலை, பிரீமியம் மற்றும் லக்ஸரி செக்மெண்ட்களுக்கு இடையே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் சிட்ரோன் நிறுவனம் அடுத்ததாக அறிமுகம் செய்யும் மாடல்களின் விலை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிக்கு முன்பதிவு குவிகிறது... அதுக்குள்ள இவ்ளோ பேர் புக் பண்ணீட்டாங்களா?

சிட்ரோன் நிறுவனம் சென்னைக்கு அருகே தொழிற்சாலையை அமைத்துள்ளது. இங்கு ஒரு ஆண்டுக்கு 1 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். இதுதவிர சிட்ரோன் நிறுவனத்திற்கு ஓசூரிலும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் ஒரு ஆண்டுக்கு 3 லட்சம் பவர்டிரெயின்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிக்கு முன்பதிவு குவிகிறது... அதுக்குள்ள இவ்ளோ பேர் புக் பண்ணீட்டாங்களா?

கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகின்றன. இதில், கியா, எம்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுள்ளன. இந்த வரிசையில் இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்துள்ள சிட்ரோன் நிறுவனம் இங்கு வெற்றிக்கொடி நாட்டுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen C5 Aircross SUV Receives Over 1,000 Bookings: Here Are All The Details. Read in Tamil
Story first published: Thursday, April 8, 2021, 11:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X