புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்... விலையை தவிர மொத்த விபரமும் வெளியானது!

எஸ்யூவி பிரியர்களுக்கு ஒரு புதிய தேர்வாகவும், அதிக ஆவலையும் ஏற்படுத்தியிருக்கும் புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் கார் இன்று இந்திய சந்தையில் முறைப்படி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் சிறப்பம்சங்கள், தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளிட்ட விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அனைத்து விபரங்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடு

பரிமாணம்

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி 4,500 மிமீ நீளமும், 2,099 மிமீ அகலமும், 1,710 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 2,730 மிமீ வீல் பேஸ் நீளத்தை பெற்றுள்ளது. இதன் டர்னிங் ரேடியஸ் 4.25 மீட்டர்கள் என்பது கவனிக்கத்தக்க விஷயமாக இருக்கிறது. இந்த எஸ்யூவியின் பரிமாணத்தின்படி, சிறப்பான இடவசதியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடு

வெளிப்புற அம்சங்கள்

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியில் ஸ்பிளிட் வகை ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், பாடி கிளாடிங் சட்டங்கள், ரூஃப் ரெயில்களுடன் ஒரு பிரிமீயமான எஸ்யூவி தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் வெள்ளை, நீலம், சாம்பல் மற்றும் கருப்பு ஆகிய ஒற்றை வண்ணத் தேர்வுகளிலும், கருப்பு வண்ண கூரையுடன் வெள்ளை, சாம்பல் மற்றும் நீல வண்ணத் தேர்வுகளிலும் வழங்கப்படும்.

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடு

இன்டீரியர்

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் இன்டீரியர் மிக பிரிமீயமாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. இந்த காரில் 12.3 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய பெரிய அளவிலான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 8 அங்குல திரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெறுகின்றன. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். 6 ஸ்பீக்கர்களுடன் கூடிய மியூசிக் சிஸ்டம், கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம் ஆிகயவையும் கொடுக்கப்பட உள்ளன.

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடு

சிறப்பான இருக்கை அமைப்பு

இந்த எஸ்யூவி 5 சீட்டர் மாடலாக வருகிறது. போதுமான இடவசதியுடன் வர இருக்கிறது. இந்த எஸ்யூவியின் பின் வரிசையில் மூன்று பேர் அமர்வதற்காக தனித் தனி இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டு இருப்பது மிக முக்கிய அம்சமாக இருக்கும். பின் வரிசை இருக்கைகளை முற்றிலுமாக மடக்கி வைக்க முடியும். உடைமைகளை வைப்பதற்காக இந்த எஸ்யூவியில் 580 லிட்டர்கள் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. பின் இருக்கைகளை மடக்கினால் 1,630 லிட்டர்கள் வரை பூட்ரூம் இடவசதியை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடு

பாதுகாப்பு அம்சங்கள்

புதிய டாடா சஃபாரி எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் உள்பட ஏராளமான வசதிகள் உள்ளன. தானியங்கி முறையில் இயங்கும் ஹை பீம் கொண்ட ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் பார்க்கிங் தொழில்நுட்பம், கண்ணுக்கு புலப்படாத இடத்தில் இருந்து வரும் வாகனங்கள், பாதசாரிகள், விலங்குகள் ஆகியவற்றை கண்டறிந்து தெரிவிக்கும் தொழில்நுட்பம், சாலை சந்திப்புகளில் வரும் வாகனங்கள் குறித்த எச்சரிக்கை, அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்களுடன் வர இருக்கிறது.

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடு

எஞ்சின் விபரம்

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியில் 20 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 175 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடன் வர இருக்கிறது. அராய் சான்றுபடி, இந்த கார் லிட்டருக்கு 18.6 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடு

முக்கிய விஷயங்கள்

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிக்கு 3 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கான வாரண்டி வழங்கப்பட உள்ளது. கூடுதல் கால வாரணஅடி மற்றும் சிறப்பு பராமரிப்புத் திட்டங்களும் விற்பனைக்கு வரும் வேளையில் வெளியிடப்படும். மேலும், அதிக அளவிலான கூடுதல் ஆக்சஸெரீகளும் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஏப்ரல் மாதம் இந்த புதிய எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles
மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
French car maker, Citroen has revealed C5 Aircross SUV In India. Here are the complete details of the all new premium mid size SUV. Read in Tamil.
Story first published: Monday, February 1, 2021, 18:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X