சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள்!

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகவும் பிரிமீயம் மாடலாக சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி நிலைநிறுத்தப்பட இருக்கிறது. அட்டகாசமான டிசைன், ஆர்ப்பாட்டமான வசதிகளுடன் வாடிக்கையாளர்களின் மனதை கொள்ளை கொள்ள வருகிறது. இந்த நிலையில், இந்த எஸ்யூவியில் வழங்கப்பட உள்ள வேரியண்ட்டுகள் மற்றும் அதில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள்!

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி Feel மற்றும் Shine என இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இரண்டு வேரியண்ட்டுகளிலும் பெரும்பாலான வசதிகள் நிரந்தரமாக இருக்கிறது. டாப் வேரியண்ட்டில் சில வசதிகள் மட்டுமே கூடுதலாக இடம்பெற்றிருக்கிறது.

 சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள்!

ஃபீல் வேரியண்ட்

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் விலை குறைவான ஃபீல் வேரியண்ட்டில் ஹாலஜன் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், 18 அங்குல அலாய் வீல்கள், 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிகள் கொடுக்கப்பட உள்ளன.

 சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள்!

இந்த வேரியண்ட்டில் டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஹேண்டஸ் ஃப்ரீ பார்க்கிங், படூல் விளக்குகள், உட்புறத்தில் ஆட்டோ டிம் வசதி கொண்ட ரியர் வியூ மிரர், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டர், டிராக்ஷன் கன்ட்ரோல், முன்புற, பின்புற பார்க்கிங் சென்சார்கள், கீ லெஸ் என்ட்ரி, ஹேண்ட்ஸ் ஃப்ரீ பார்க்கிங், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி வசதிகள், ஹில் டிசென்ட் கன்ட்ரோல் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரியர் வியூ கேமரா மற்றும் டிரைவிங் மோடுகள் உள்ளிட்ட வசதிகள் கொடுக்கப்பட உள்ளன.

 சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள்!

ஷைன் வேரியண்ட்

ஃபீல் வேரியண்ட்டில் ஏராளமான வசதிகள் நிரந்தரமாக கொடுக்கப்படுகின்றன. இவற்றுடன் கூடுதலாக எல்இடி ஹெட்லைட்டுகள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில் கேட் ஓபன் வசதிகள் இடம்பெற இருக்கின்றன.

 சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள்!

பரிமாணம்

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியில் 4,500 மிமீ நீளமும், 1,969 மிமீ அகலமும், 1,710 உயரமும் பெற்றிருக்கிறது. 2,730 மிமீ வீல்பேஸ் நீளம் கொண்டது. இந்த எஸ்யூவியில் 580 லிட்டர்கள் பூட் ரூம் இடவசதி இருக்கிறது. இருக்கைகளை மடக்கினால் 1,630 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியை பெற முடியும்.

 சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள்!

இருக்கை வசதி

இந்த எஸ்யூவியில் மிக முக்கிய வசதியாக பின்வரிசையில் மூன்று பேர் வசதியாக அமரும் வகையில், தனித்தனி இருக்கைகளாக கொடுக்கப்பட்டுள்ளன. மூன்று இருக்கைகளுக்கும் ஹெட்ரெஸ்ட்டும் தனித்தனியாக உள்ளது மிக குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.

 சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள்!

எஞ்சின்

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 177 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். லிட்டருக்கு 18.6 கிமீ மைலேஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள்!

எதிர்பார்க்கும் விலை

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ரூ.28 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. பியர்ல் ஒயிட், குமுலஸ் க்ரே, டிஜுகா புளூ மற்றும் பெர்லா நேரா பிளாக் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். முதல் மூன்று வண்ணத் தேர்வுகளில் கருப்பு வண்ண கூரையுடன் கூடிய இரட்டை வண்ணத் தேர்வும் வழங்கப்படும். ஹூண்டாய் டூஸான், ஜீப் காம்பஸ் ட்ரெயில்ஹாக் உள்ளிட்ட மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் பிரிமீயம் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Here are the variant wise features list of Citroen C5 Aircross SUV.
Story first published: Wednesday, February 3, 2021, 11:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X