தொழிற்சாலையில் இருந்து நேரடியாக வாடிக்கையாளரின் வீட்டிற்கு!! இரு சி5 கார்களை ஹோம்-டெலிவிரி செய்தது சிட்ரோன்!

சிட்ரோன் இந்தியா நிறுவனம் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட சி5 ஏர்க்ராஸ் காரினை ஹோம்-டெலிவிரி கொடுக்கும் பணிகளை துவங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

தொழிற்சாலையில் நேரடியாக வாடிக்கையாளரின் வீட்டிற்கு!! இரு சி5 கார்களை ஹோம்-டெலிவிரி செய்தது சிட்ரோன்!

சிட்ரோன் பிராண்டில் இருந்து சமீபத்தில் தான் அதன் முதல் இந்திய மாடலாக சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கார் அறிமுகப்படுத்தப்பட்டது. சிட்ரோனிற்கு இந்தியாவில் மிகவும் சில நகரங்களில் மட்டுமே டீலர்ஷிப் ஷோரூம் மையங்கள் உள்ளன. சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில் ஒன்று உள்ளது.

தொழிற்சாலையில் நேரடியாக வாடிக்கையாளரின் வீட்டிற்கு!! இரு சி5 கார்களை ஹோம்-டெலிவிரி செய்தது சிட்ரோன்!

இதனால் ஆன்லைன் முன்பதிவுகளை ஊக்கப்படுத்தவே சிட்ரோன் விரும்புகிறது. இந்த வகையில் குஜராத் மற்றும் சண்டிகரில் சி5 ஏர்க்ராஸை இணையத்தில் முன்பதிவு செய்த இரு வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்கான கார்கள் ஹோம்-டெலிவிரி செய்யப்பட்டுள்ளன.

தொழிற்சாலையில் நேரடியாக வாடிக்கையாளரின் வீட்டிற்கு!! இரு சி5 கார்களை ஹோம்-டெலிவிரி செய்தது சிட்ரோன்!

சிட்ரோனின் இணையத்தள பக்கத்தில், டீலருடன் எந்தவொரு நேரடி தொடர்பு உள்ளாமல், டிஜிட்டலில் காரினையும், அதன் சிறப்பம்சங்களையும் அறிந்துகொண்டு வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யலாம். தற்சமயம் இந்த முன்பதிவு வசதி இந்தியாவின் 50 நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது.

தொழிற்சாலையில் நேரடியாக வாடிக்கையாளரின் வீட்டிற்கு!! இரு சி5 கார்களை ஹோம்-டெலிவிரி செய்தது சிட்ரோன்!

இதில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, குஜராத், கேரளா, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்கள் அடங்குகின்றன.

தொழிற்சாலையில் நேரடியாக வாடிக்கையாளரின் வீட்டிற்கு!! இரு சி5 கார்களை ஹோம்-டெலிவிரி செய்தது சிட்ரோன்!

ஆன்லைனின் முன்பதிவு செய்யும்போதே காரினை தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ள ஆக்ஸஸரீகளுடன் கஸ்டமைஸ்ட் செய்தும் வாடிக்கையாளர்கள் பார்க்க முடியும். ஹோம்-டெலிவிரி செய்யப்படும் சி5 ஏர்க்ராஸ் கார்கள் நேரடியாக நமது திருவள்ளூவர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்து கொண்டு செல்லப்படுகின்றன.

தொழிற்சாலையில் நேரடியாக வாடிக்கையாளரின் வீட்டிற்கு!! இரு சி5 கார்களை ஹோம்-டெலிவிரி செய்தது சிட்ரோன்!

காரை முன்பதிவு செய்தல், கஸ்டமைஸ்ட் செய்தல் மட்டுமின்றி இ-விற்பனை ஆலோசனையாளரின் ஆலோசனைகளை பெறுதல், (நிதி, வருடாந்திர பராமரிப்பு) தொகுப்புகள், உத்தரவாதத்தை நீட்டித்தல் உள்ளிட்டவற்றையும் சிட்ரோன் ஆன்லைன் தளத்தில் மேற்கொள்ளலாம்.

தொழிற்சாலையில் நேரடியாக வாடிக்கையாளரின் வீட்டிற்கு!! இரு சி5 கார்களை ஹோம்-டெலிவிரி செய்தது சிட்ரோன்!

இந்த ஹோம்-டெலிவிரி குறித்து ஸ்டெல்லாண்டிஸ் இந்தியா நிறுவனத்தின் துணை தலைவர் ஜோயல் வெரானி கருத்து தெரிவிக்கையில், தொழிற்சாலையில் இருந்து நேரடியாக ஒரு காரை வாடிக்கையாளரின் வீட்டில் டெலிவிரி செய்வதற்கான கான்செப்ட்டை உருவாக்கிய முதல் ஆட்டோமொபைல் நிறுவனம் சிட்ரோன்.

தொழிற்சாலையில் நேரடியாக வாடிக்கையாளரின் வீட்டிற்கு!! இரு சி5 கார்களை ஹோம்-டெலிவிரி செய்தது சிட்ரோன்!

டிஜிட்டல்மயமாக்கல் என்பது சிட்ரோன் பிராண்டிற்கு மட்டுமல்ல, ஸ்டெல்லாண்டிஸ் குழுவிற்கும் ஒரு முக்கிய கவனம் செலுத்தும் பகுதியாகும். ஏனெனில் இந்த 100 சதவீத நேரடி-ஆன்லைன் மாடல் எதிர்காலத்தில் இந்தியாவில் விரைவாக ஏற்றுக்கொள்ளப்படும் என நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தார்.

தொழிற்சாலையில் நேரடியாக வாடிக்கையாளரின் வீட்டிற்கு!! இரு சி5 கார்களை ஹோம்-டெலிவிரி செய்தது சிட்ரோன்!

சிட்ரோன் பிராண்ட் இந்தியாவில் கடந்த 2021 ஏப்ரல் மாதத்தில் சி5 ஏர்க்ராஸின் மூலம் கால் பதித்தது. இந்த பிரீமியம் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.29.90 லட்சமாக உள்ளது. கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப ஏராளமான வசதிகளை கொண்டிருப்பினும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸின் விற்பனை இந்தியாவில் சிறப்பாக இல்லை.

தொழிற்சாலையில் நேரடியாக வாடிக்கையாளரின் வீட்டிற்கு!! இரு சி5 கார்களை ஹோம்-டெலிவிரி செய்தது சிட்ரோன்!

இதற்கு இந்த எஸ்யூவி மாடலின் கடந்த ஜூன் மாத விற்பனையே உதாரணம். கொரோனா இரண்டாவது அலை பரவலிற்கு பிறகு கடந்த ஜூன் மாதத்தில் தான் பெரும்பான்மையான கார்கள் விற்பனையில் வளர்ச்சியினை கண்டிருந்தன. இருப்பினும் கடந்த மாதத்தில் வெறும் 41 சி5 ஏர்க்ராஸ் கார்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Most Read Articles

மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen India begins home-delivery of online-booked C5 Aircross.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X