2வது இந்திய ஷோரூமை நமது சென்னையில் திறந்தது சிட்ரோன்!! டெல்லி, மும்பையில் கூட இல்லை...

சமீபத்தில் இந்திய சந்தையில் நுழைந்த சிட்ரோன் நிறுவனம் நமது சென்னையில் புதிய டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றை திறந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2வது இந்திய ஷோரூமை நமது சென்னையில் திறந்தது சிட்ரோன்!! டெல்லி, மும்பையில் கூட இல்லை...

உலகளவில் பிரபலமான ஆட்டோமொபைல் க்ரூப்பான பிஎஸ்ஏ-வில் ஒரு அங்கமாக வகிக்கும் சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் மிக சமீபத்தில்தான் அதன் சி5 ஏர்க்ராஸ் காரின் மூலமாக அடியெடுத்து வைத்தது.

2வது இந்திய ஷோரூமை நமது சென்னையில் திறந்தது சிட்ரோன்!! டெல்லி, மும்பையில் கூட இல்லை...

மிக வேகமாகவே நம் நாட்டில் சந்தையை விரிவுப்படுத்தி வரும் இந்த பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் டீலர்ஷிப் ஷோரூம் அகமதாபாத்தில் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது டீலர்ஷிப் மையம் நமது தமிழகத்தின் தலைநகர் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.

2வது இந்திய ஷோரூமை நமது சென்னையில் திறந்தது சிட்ரோன்!! டெல்லி, மும்பையில் கூட இல்லை...

சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஷோரூமிற்கு சிட்ரோன் ரமணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த இரு டீலர்ஷிப் மையங்களை சேர்த்து இந்த 2021ஆம் ஆண்டிற்குள் மொத்தம் 10 ஷோரூம்களை இந்தியாவில் கொண்டிருக்க இந்த கார் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

2வது இந்திய ஷோரூமை நமது சென்னையில் திறந்தது சிட்ரோன்!! டெல்லி, மும்பையில் கூட இல்லை...

இதன்படி அடுத்த 8 டீலர்ஷிப் மையங்கள் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், புனே, கொச்சி மற்றும் குருக்ராம் உள்ளிட்ட நகரங்களில் திறக்கப்படவுள்ளன. இந்த டீலர்ஷிப் மையங்களில் ஏற்கனவே கூறியதுபோல் முதலாவதாக சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் விற்பனை மற்றும் சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

2வது இந்திய ஷோரூமை நமது சென்னையில் திறந்தது சிட்ரோன்!! டெல்லி, மும்பையில் கூட இல்லை...

இந்த வருட மத்தியில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சி5 ஏர்க்ராஸ் காரின் எக்ஸ்ஷோரூம் விலை தவிர்த்து மற்ற அனைத்து விஷயங்களுக்கும் வெளியிடப்பட்டு விட்டன.

2வது இந்திய ஷோரூமை நமது சென்னையில் திறந்தது சிட்ரோன்!! டெல்லி, மும்பையில் கூட இல்லை...

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் டீசல் என்ஜினை சிட்ரோன் நிறுவனம் வழங்கியுள்ளது. அதிகப்பட்சமாக 175 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

2வது இந்திய ஷோரூமை நமது சென்னையில் திறந்தது சிட்ரோன்!! டெல்லி, மும்பையில் கூட இல்லை...

விற்பனைக்கு முன்பாக சி5 ஏர்க்ராஸ் காரை ஓட்டும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அதன் மூலம் இந்த காரை பற்றி நாங்கள் அறிந்து கொண்ட விஷயங்களை விமர்சனமாக பதிவிட்டுள்ளோம். அவற்றை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Most Read Articles

மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen India inaugurates a new dealership in Chennai
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X