Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 8 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டாடா அல்ட்ராஸுக்கு போட்டியாக சிட்ரோன் நிறுவனத்தின் க்ராஸ்ஓவர்... சிசி21, தமிழகத்தில் சோதனை ஓட்டம்!!
சிறிய அளவு கொண்ட சிட்ரோன் சிசி21 கார் இந்திய சாலையில் முதன்முறையாக சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பிரெஞ்சு நாட்டை சேர்ந்த சிட்ரோன் பிராண்ட் இந்தியாவில் சி5 ஏர்க்ராஸ் காரின் மூலமாக நுழைய ஆயத்தமாகி வருகிறது. சி5, இந்திய சந்தைக்கென தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

சி5 மட்டுமின்றி இதனை தொடர்ந்து வெளிவரும் கார்களையும் இந்திய வாடிக்கையாளர்களை மனதில் வைத்து தயாரிக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த வகையில் அடுத்ததாக வெளிவரவுள்ள சிசி21 என்ற குறியீட்டு பெயரை கொண்ட மைக்ரோ க்ராஸ்ஓவர் கார் தற்சமயம் தயாரிப்பு பணிகளில் மிகவும் அட்வான்ஸான நிலைகளில் உள்ளது.

மாருதி இக்னிஸ், மஹிந்திரா கேயூவி100 மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள டாடா எச்பிஎக்ஸ் கார்கள் மட்டுமின்றி அல்ட்ராஸ், ஐ20 போன்ற ப்ரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் கார்களுக்கும் போட்டியாக வெளிவரும் இந்த சிட்ரோன் கார் மாதிரி ஒன்று தமிழ்நாட்டில் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது.

ரஷ்லேன் செய்திதளம் மூலம் கிடைத்துள்ள இது தொடர்பான படங்களில் உயரம் அதிகமாக கொண்டுள்ள இந்த சிட்ரோன் கார் கிட்டத்தட்ட எஸ்யூவி கார்களுக்கு இணையான பரிணாம அளவுகளை கொண்டுள்ளது. மற்றப்படி கார் முழுவதும் மறைக்கப்பட்டுள்ளதால், காரின் டிசைன்களை பற்றி ஆராய முடியவில்லை.

தொழிற்நுட்ப அம்சங்களில் டாடா அல்ட்ராஸ் மற்றும் மாருதி பலேனோ ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களுக்கு இணையாக இந்த சிட்ரோன் கார் இருக்கும் என்பது உறுதி. சிட்ரோனின் காமன் மாடுலர் ப்ளாட்ஃபாரத்தில் சிசி21 ஏர்க்ராஸ் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ப்ளாட்ஃபாரத்தில்தான் நடுத்தர அளவு கொண்ட பியுஜியோட் மற்றும் சிட்ரோன் தயாரிப்புகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்படுவதால் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் சிசி21 காரில் பொருத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

மேலும் இந்த என்ஜின் நெகிழ்வு-எரிபொருள் என்ஜின் ஆகவும் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறப்படுவதால், இத்தகைய என்ஜினை பெற்றுவரும் முதல் இந்திய காராகவும் சிட்ரோன் சிசி21 விளங்கவுள்ளது.

இந்த என்ஜின் உடன் மேனுவல், ஆட்டோமேட்டிக் என இரு விதமான ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளும் வழங்கப்படலாம். வெளிப்புறத்தில் சிசி21, சிட்ரோனின் அடையாளங்களான இரு பகுதிகளாக விளக்கு அமைப்புகள், நேர்த்தியான க்ரில் அமைப்பை எளிமையான தோற்றத்தில் கொண்டிருக்கும்.

இந்த காரின் உட்புறத்தில் ஒற்றை தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மைய கன்சோலில் வழங்கப்பட்டுள்ளதை இந்த ஸ்பை படங்களில் பார்க்க முடிகிறது. ரூ.5 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் சிட்ரோன் சிசி21-யின் இந்திய அறிமுகம் இந்த 2021ன் மத்தியில் இருக்கலாம் என கூறப்படுகிறது.