சிட்ரோன் சி3 எஸ்யூவி காரின் உட்புற டேஸ்போர்டின் தோற்றம் வெளியீடு!! இந்திய அறிமுகம் விரைவில்...!

சிட்ரோன் சி3 எஸ்யூவி காரின் உட்புற கேபினை பற்றிய விபரங்கள் புதிய படம் ஒன்றின் மூலமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சிட்ரோன் சி3 எஸ்யூவி காரின் உட்புற டேஸ்போர்டின் தோற்றம் வெளியீடு!! இந்திய அறிமுகம் விரைவில்...!

சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி மாடலின் மூலம் இந்திய சந்தையில் நுழைந்த பிரெஞ்சு நாட்டை சேர்ந்த சிட்ரோன் பிராண்ட்டில் இருந்த அடுத்ததாக அடுத்த 2022ஆம் ஆண்டில் சி3 எஸ்யூவி கார் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தொடர் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வரும் சிட்ரோன் சி3 எஸ்யூவி காரை பற்றிய விபரங்கள் ஒவ்வொன்றாக தெரியவந்த வண்ணம் உள்ளன.

சிட்ரோன் சி3 எஸ்யூவி காரின் உட்புற டேஸ்போர்டின் தோற்றம் வெளியீடு!! இந்திய அறிமுகம் விரைவில்...!

இதன் சோதனை ஓட்ட ஸ்பை படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த எஸ்யூவி காரின் டேஸ்போர்டின் தோற்றம் புதிய படங்களின் மூலமாக வெளிவந்துள்ளது. இந்திய சந்தைக்காக, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ள சிட்ரோன் சி3 சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார் அதிகாரப்பூர்வமாக கடந்த செப்டம்பர் மாதத்தில் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டது.

சிட்ரோன் சி3 எஸ்யூவி காரின் உட்புற டேஸ்போர்டின் தோற்றம் வெளியீடு!! இந்திய அறிமுகம் விரைவில்...!

எஸ்யூவி கார் என்பதால் சி3 மாடலின் உட்புற கேபினை நன்கு விசாலமானதாக எதிர்பார்க்கலாம். இந்த சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரின் வீல்பேஸ் அளவு 2,540மிமீ ஆகும். இதன் மூலமாக இந்த காரில் பின் இருக்கை வரிசை பயணிகளுக்கும் சிறப்பான இடவசதியினை இருக்கைக்கு அடியிலும் சிட்ரோன் உறுதியளிக்கிறது. பிரிவிலேயே அதிகளவிலான லெக்ரூம் அளவை கொண்ட காராக சி3 மாடல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சிட்ரோன் சி3 எஸ்யூவி காரின் உட்புற டேஸ்போர்டின் தோற்றம் வெளியீடு!! இந்திய அறிமுகம் விரைவில்...!

அதேபோல் உயரமான டிரைவிங் பொஷிஷன், பிரீமியம் தரத்திலான டேஸ்போர்டு, அதன் இரு முனைகளில் செங்குத்தான வடிவிலும், மையத்தில் கிடைமட்ட வடிவிலும் ஏசி காற்றுத்துளைகள், முன் பாதி கேபினிலிலும் போதுமான இடவசதி போன்றவற்றிற்கும் தயாரிப்பு நிறுவனம் உறுதியளிக்கிறது. இவற்றுடன் டேஸ்போர்டின் மத்தியில் 10-இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இந்த காரில் வழங்கப்பட உள்ளதை இந்த படங்களின் மூலம் அறிய முடிகிறது.

சிட்ரோன் சி3 எஸ்யூவி காரின் உட்புற டேஸ்போர்டின் தோற்றம் வெளியீடு!! இந்திய அறிமுகம் விரைவில்...!

இந்த திரையின் மூலமாக மொபைல் போன் செயல்பாடுகளை வயர் எதையும் இணைக்காமல் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திலேயே மேற்கொள்ளலாம் என கூறப்படுகிறது. இதனை குரல் மூலமாகவும் கட்டுப்படுத்தலாம் எனவும், இந்த வாய்ஸ் கண்ட்ரோல் வசதியினை ஸ்டேரிங் சக்கரத்தில் உள்ள ஸ்விட்ச்சினால் ஆக்டிவேட் செய்யலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிட்ரோன் சி3 எஸ்யூவி காரின் உட்புற டேஸ்போர்டின் தோற்றம் வெளியீடு!! இந்திய அறிமுகம் விரைவில்...!

இவற்றுடன் சி3 காரின் கேபினில் விரைவான சார்ஜிங் யுஎஸ்பி துளைகள் மற்றும் 12 வோல்ட் சாக்கெட் போன்றவற்றையும் எதிர்பார்க்கிறோம். முன்னதாக, ஒரு லிட்டர் க்ளோவ்பாக்ஸ் மற்றும் 315 லிட்டர்கள் கொள்ளளவில் பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதி போன்றவற்றையும் சி3 பெற்றுவர உள்ளதாக சிட்ரோன் அறிவித்திருந்தது.

சிட்ரோன் சி3 எஸ்யூவி காரின் உட்புற டேஸ்போர்டின் தோற்றம் வெளியீடு!! இந்திய அறிமுகம் விரைவில்...!

ஹேட்ச்பேக் போன்றும் காட்சியளிக்கும் இந்த எஸ்யூவி கார் காமன் மாடுலர் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளாட்ஃபாரம் எலக்ட்ரிக் கார்களை உருவாக்குவதற்கும் வழிவகை செய்வதாக சிட்ரோன் தெரிவிக்கிறது. இதனால் சி3 மாடலினை எதிர்காலத்தில் இவி வெர்சனிலும் எதிர்பார்க்கலாம்.

சிட்ரோன் சி3 எஸ்யூவி காரின் உட்புற டேஸ்போர்டின் தோற்றம் வெளியீடு!! இந்திய அறிமுகம் விரைவில்...!

வெளிப்பக்கத்தில் இந்த புதிய சிட்ரோன் கார் டிஆர்எல்-கள் உடன் எல்இடி ஹெட்லைட், இரு டிஆர்எல்களை இணைக்கும் இரு க்ரோம் பார்கள், ஸ்போர்டியான பொனெட் டிசைன், செதுக்கப்பட்டது போன்றதான டிசைனில் அலாய் சக்கரங்கள் மற்றும் பின்பக்கத்தில் எல்இடி டெயில்லைட்கள் முதலியவற்றை பெற்று வரவுள்ளது. சிட்ரோன் சி3 மாடலின் க்ரவுண்ட் க்ளியெரென்ஸ் அளவு 180மிமீ ஆகும்.

சிட்ரோன் சி3 எஸ்யூவி காரின் உட்புற டேஸ்போர்டின் தோற்றம் வெளியீடு!! இந்திய அறிமுகம் விரைவில்...!

இது இந்திய சாலைகளுக்கு ஏற்றதாக இருக்கும் என்கிறது தயாரிப்பு நிறுவனம். இந்தியாவில் சி3 காரினை மொத்தம் நான்கு விதமான நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யும் என தெரிகிறது. இதன்படி, இந்த படங்களில் உள்ள ஆரஞ்சு- வெள்ளை பெயிண்ட் தேர்வு மட்டுமின்றி, ஆரஞ்சு- கருப்பு, நீலம்- வெள்ளை மற்றும் க்ரே- கருப்பு என்ற ட்யூல்-டோன் நிறத்தேர்வுகளிலும் சிட்ரோன் சி3 அறிமுகம் செய்யப்படலாம்.

சிட்ரோன் சி3 எஸ்யூவி காரின் உட்புற டேஸ்போர்டின் தோற்றம் வெளியீடு!! இந்திய அறிமுகம் விரைவில்...!

சி5 ஏர்க்ராஸ் கார்களுடன் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சி3 கார்களையும் சென்னைக்கு அருகே உள்ள திருவள்ளூர் தொழிற்சாலையில் தயாரிக்க இந்த பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் சி5 மாடலை போல் இந்த சப்காம்பெக்ட் எஸ்யூவி மாடலும் கிட்டத்தட்ட 90% இந்தியாவிலேயே கிடைக்கும் பாகங்களை கொண்டு தயாரிக்கப்பட உள்ளன.

சிட்ரோன் சி3 எஸ்யூவி காரின் உட்புற டேஸ்போர்டின் தோற்றம் வெளியீடு!! இந்திய அறிமுகம் விரைவில்...!

இந்தியாவில் போட்டி மிகுந்த சப்காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் நிலைநிறுத்தப்பட உள்ள சிட்ரோன் சி3 மாடலுக்கு விற்பனையில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், நிஸான் மேக்னைட், ரெனால்ட் கிகர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்ட மற்ற காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் போட்டியாக விளங்கவுள்ளன.

Most Read Articles
மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen C3 SUV interior details revealed ahead of India launch next year.
Story first published: Friday, December 24, 2021, 23:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X