சூப்பர்... இந்தியாவில் விலை குறைவான எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது சிட்ரோன்...

சிட்ரோன் நிறுவனம் இந்திய சந்தையில் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பர்... இந்தியாவில் விலை குறைவான எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது சிட்ரோன்...

சிட்ரோன் நிறுவனம் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரை இந்திய சந்தையில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. பிரான்ஸை சேர்ந்த சிட்ரோன் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ள முதல் கார் இதுதான். இதற்கு அடுத்தபடியாக சி21 எஸ்யூவி காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு சிட்ரோன் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

சூப்பர்... இந்தியாவில் விலை குறைவான எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது சிட்ரோன்...

இது கியா சொனெட் மற்றும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய கார்களுக்கு போட்டியாக வரவுள்ள காம்பேக்ட் எஸ்யூவி கார் ஆகும். இதுதவிர ஓரளவிற்கு குறைவான விலையில் எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு சிட்ரோன் நிறுவனம் திட்டமிட்டு வருவதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூப்பர்... இந்தியாவில் விலை குறைவான எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது சிட்ரோன்...

இந்த புதிய எலெக்ட்ரிக் கார் 2022ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் இந்த புதிய சிட்ரோன் எலெக்ட்ரிக் கார், சிசி21 மினி எஸ்யூவி காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சிசி21 மினி எஸ்யூவியும் நடப்பாண்டு இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர்... இந்தியாவில் விலை குறைவான எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது சிட்ரோன்...

சிட்ரோன் சிசி21 எலெக்ட்ரிக் கார், e-CMP பிளாட்பார்ம் அடிப்படையில் கட்டமைக்கப்படலாம். இந்த பிளாட்பார்மில் 50 kWh வரையிலான திறன் கொண்ட பேட்டரியையும், 100 kW வரையிலான திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரையும் பயன்படுத்த முடியும். இது 310 முதல் 340 கிலோ மீட்டர் டிரைவிங் ரேஞ்ச் வழங்க கூடியது.

சூப்பர்... இந்தியாவில் விலை குறைவான எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது சிட்ரோன்...

ஆனால் விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள எலெக்ட்ரிக் காரில், சிறிய பேட்டரி-மோட்டார் காம்போவை பயன்படுத்துவதற்கு சிட்ரோன் முடிவு செய்யலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக 30kWh பேட்டரி தொகுப்புடன் இந்த கார் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

சூப்பர்... இந்தியாவில் விலை குறைவான எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது சிட்ரோன்...

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள சிட்ரோன் சிசி21 எலெக்ட்ரிக் காருக்கு, 8 லட்ச ரூபாய் என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் இந்திய சந்தையில் கிடைக்கும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக இது இருப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. எனவே இந்த எலெக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர்... இந்தியாவில் விலை குறைவான எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது சிட்ரோன்...

இந்தியாவில் தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி, ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி, எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி என சில எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே கிடைக்கின்றன. அவற்றின் விலை சற்று அதிகம் என்பதுடன், சார்ஜிங் ஸ்டேஷன் போன்ற கட்டமைப்பு வசதிகளும் பெரிதாக இல்லை.

சூப்பர்... இந்தியாவில் விலை குறைவான எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது சிட்ரோன்...

ஆனால் சிட்ரோன் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் குறைவான விலையில் வரப்போகிறது. அத்துடன் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவதற்குள், இந்தியாவில் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை ஓரளவிற்கு உயர்ந்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே எலெக்ட்ரிக் காரை சொந்தமாக வைத்திருப்பதும் எளிமையாக இருக்கும். இதுகுறித்து காடிவாடி செய்தி வெளியிட்டுள்ளது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen To Launch Affordable Electric Car In India: Here Are All The Details. Read in Tamil
Story first published: Monday, April 12, 2021, 23:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X