Just In
- 5 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 6 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 7 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
- 7 hrs ago
சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
Don't Miss!
- News
ஒட்டுமொத்த நாடும் தேடும் 'அந்த' ஒற்றை நபர்... பிரிட்டனில் பரபரப்பு... காரணம் இதுதான்
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Lifestyle
உங்க திருமண வாழ்க்கை சூப்பராக இருக்கிறது என்பதை உணர்த்தும் உடல் மொழிகள் இதுதானாம்...!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மத்திய அரசின் புதிய திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு... ஆதங்கத்தை கடிதமாக அனுப்பிய விண்டேஜ் கார் உரிமையாளர்கள்!!
விண்டேஜ் வாகன சங்கம் நாக்பூர், மத்திய அரசின் புதிய வாகன அழிப்பு கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கின்றனர். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்த கடிதம் பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

பழைய வாகனங்களை முற்றிலுமாக ஒழித்துவிட்டு புதிய வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக புதிய விதிகளை உருவாக்கியிருக்கின்றது மத்திய அரசு. இதுகுறித்த தகவலை ஏற்கனவே மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற மத்திய பட்ஜெட் 2021இல் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பழைய வாகன அழிப்பு கொள்கை பற்றி அறிவித்தார்.

இதுகுறித்த விரிவான தகவலை விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் அவர் கூறினார். ஆகையால், இன்னும் ஓரிரு வாரங்களில் பழைய வாகன அழிப்பு கொள்கை பற்றிய விரிவான தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இம்மாதிரியான சூழ்நிலையில் மத்திய அரசின் இந்த புதிய திட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் இருக்கின்றன.

குறிப்பாக, சரக்கு வாகன உரிமையாளர்கள் மற்றும் விண்டேஜ் கார்களைப் பயன்படுத்தி (பராமரித்து) வரும் உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையில், சென்ட்ரல் இந்தியா விண்டேஜ் ஆட்டோமோட்டிவ் அசோஷியேஷன் நாக்பூர் (Civaan) மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்திற்கு தங்களின் எதிர்ப்பு கடிதத்தை அனுப்பி வைத்திருக்கின்றது.

அந்த கடிதத்தில், "பெரும்பாலான பழைய வாகனங்கள் கீழ் மற்றும் நடுத்தர மக்கள், ஓய்வு பெற்ற நபர்கள் மற்றும் வாகன ஆர்வலர்கள் ஆகியோராலே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் நிதி நெருக்கடி வாட்டி வதைத்து வருகின்றது. இந்த நேரத்தில் புதிய வாகன அழிப்பு கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு அவர்களுக்கு மேலும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தலாம். குறிப்பாக புதிய வாகனத்தை வாங்க முடியாத சூழ்நிலையிலேயே பலர் இருக்கின்றனர். கொள்கைகள் மக்களை மையமாகக் கொண்டே இருக்க வேண்டும். சொந்த நலன்களை மையமாகக் கொண்டதாக இருக்கக் கூடாது.

நாக்பூர் மாவட்டத்தில் மூன்று ஆர்டிஓ-க்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் கணக்கின்படி 42,145 வாகனங்கள் புதிய ஸ்கிராப்பேஜ் கொள்கையினால் கழிவாக வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் 10 வயதுக்கு மேற்பட்ட டீசல் மற்றும் 15 வயதுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்கள் பயன்பாட்டில் இல்லாதவாறு அகற்றப்பட்டுவிட்டன. இருப்பினும், அங்கு காற்று மாசு குறைந்ததாக தெரியவில்லை. மேலும், பனியும் மிக தீவிரமாகவே காணப்படுகின்றது" என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, "பழைய வாகனங்கள் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலையையும், வருமானத்தையும் ஈட்டி வருகின்றன. இதுமட்டுமின்றி, பழைய வாகனங்களை நம்பியே பல லட்சம் பணியாளர்கள் இயங்கி வருகின்றனர். சில நிறுவனங்கள் இவற்றிற்கான உதிரிபாகங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த நிலையில் வாகன பழைய வாகனங்களே இல்லாத நிலையை உருவாக்கினால் அநேகரின் வாழ்வாதாரம் முழுமையாக ஒடுங்கிவிடும். குறிப்பாக, பழைய வாகனங்களுக்கு பழுது நீக்கும் சேவையை செய்து வருவோரின் தொழில் முழுவதுமாக நசுங்கிவிடும்" எனவும் கடிதத்தில் கூறப்பட்டிருக்கின்றது.

ஜெர்மன், ஃபிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சிலவற்றில் 30 ஆண்டுகளுக்கும் அதிகமான பழைய கார்களைக் கணக்கெடுத்து வரலாற்று சின்னங்களாக அங்கீகரித்து வருகின்றன. இம்மாதிரியான சூழ்நிலையில் இந்தியாவில் 15 ஆண்டுகள் பழைய வர்த்தக வாகனங்களையும், 20 ஆண்டுகள் பழைய தனி நபர் வாகனங்களையும் அழிக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

உண்மையில் மாசை ஏற்படுத்தும் வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கக் கூடாது என்பதே எங்களின் எண்ணமும்கூட. ஆனால், இதனை கட்டாயப்படுத்தி செய்ய வேண்டாம். தன்னார்வலர்களாக செய்யவதற்கே அழைப்பு விடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை என்றும் இந்த கடிதத்தில் கூறப்பட்டிருக்கின்றது.