ஹேட்ச்பேக் vs காம்பேக்ட் எஸ்யூவி - எந்த ரக கார் பெஸ்ட்?.. ஆச்சரியமளிக்கும் பதில்கள் உள்ளே!!

ஹேட்ச்பேக் vs காம்பேக்ட் எஸ்யூவி எந்த ரக காரை வாங்குவது சிறந்தது என்பது பற்றிய தகவலை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் இதுகுறித்த சுவாரஷ்ய பதிலைக் காணலாம்.

ஹேட்ச்பேக் vs காம்பேக்ட் எஸ்யூவி - எந்த ரக கார் பெஸ்ட்?.. ஆச்சரியமளிக்கும் பதில்கள் உள்ளே!!

இந்தியாவில் ஹேட்ச்பேக் மற்றும் காம்பேக்ட் எஸ்யூவி ஆகிய இரு ரக கார்களும் ஒன்றிற்கு ஒன்று சளைத்தவை அல்ல எனும் கூறுமளவிற்கு சரிசமமான விற்பனையைப் பெற்று வருகின்றன. இதில் லேசான ஏற்றத்தாழ்வுகளை மட்டுமே காண முடியும். ஹேட்ச்பேக் கார்களைக் காட்டிலும் காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் சற்று கூடுதல் விலையில் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

ஹேட்ச்பேக் vs காம்பேக்ட் எஸ்யூவி - எந்த ரக கார் பெஸ்ட்?.. ஆச்சரியமளிக்கும் பதில்கள் உள்ளே!!

இதுவும் பலர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களை தவிர்ப்பதற்கான காரணங்களில் ஒன்றாகும். இந்த நிலையிலேயே இவ்விரு ரக கார்களில் எது பெஸ்டான கார்?, எதை தேர்வு செய்வது நல்லது என்பது பற்றிய தகவலை தனது ஆய்வின் அடிப்படையில் கார்ஸ் 24 தளம் வெளியிட்டிருக்கின்றது. இதுகுறித்த சுவாரஷ்ய தகவலை இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

ஹேட்ச்பேக் vs காம்பேக்ட் எஸ்யூவி - எந்த ரக கார் பெஸ்ட்?.. ஆச்சரியமளிக்கும் பதில்கள் உள்ளே!!

ஹேட்ச்பேக் vs காம்பேக்ட் எஸ்யூவி - எது பெஸ்ட்? என்ற போட்டியில் முதலில் காம்பேக்ட் எஸ்யூவி காரின் நன்மைகளைப் பற்றி பார்க்கலாம்.

கூடுதல் கட்டுமஸ்தானது (முரட்டுத்தனமான தோற்றம்) :

பெரும்பாலான காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்கள் ஆஃப்-ரோடு பயணத்திற்கு ஏற்ற உருவம் மற்றும் அம்சங்களைப் பெற்றிருக்கின்றன. இவையே இக்கார்களை முரடனைப் போன்று தோற்றுவிக்கின்றன. எந்த மாதிரியான சாலையையும் சமாளிக்கக்கூடிய அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் இக்கார்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இதனை ஆஃப்-ரோடு வாகனங்களைப் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹேட்ச்பேக் vs காம்பேக்ட் எஸ்யூவி - எந்த ரக கார் பெஸ்ட்?.. ஆச்சரியமளிக்கும் பதில்கள் உள்ளே!!

லேசான கரடு, முரடான பாதைகளைச் சமாளிக்கும் வகையில் இந்த உருவ அமைப்பு காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு கொடுக்கப்படுகின்றது. ஹேட்ச்பேக் மற்றும் செடான் ரக கார்களில் பள்ளம், மேடுகள் நிறைந்த சாலையில் செல்லும்போது வயிறு குலுங்களை நம்மால் உணர முடியும்.

ஹேட்ச்பேக் vs காம்பேக்ட் எஸ்யூவி - எந்த ரக கார் பெஸ்ட்?.. ஆச்சரியமளிக்கும் பதில்கள் உள்ளே!!

ஆனால், இந்த சிக்கலை காம்பேக்ட் எஸ்யூவிக்கள் வழங்காது. இதுபோன்ற ஒரு சில காரணங்களுக்காகவும் இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தேவையற்ற சிராய்ப்புகளை தவிர்க்கும் வகையில் காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் முன், பின் மற்றும் பக்கவாட்டு பிளாஸ்டிக் கிளாடிங்குகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

ஹேட்ச்பேக் vs காம்பேக்ட் எஸ்யூவி - எந்த ரக கார் பெஸ்ட்?.. ஆச்சரியமளிக்கும் பதில்கள் உள்ளே!!

சிறந்த பார்வை திறன்

செடான் மற்றும் ஹேட்ச்பேக் ரக கார்களைக் காட்டிலும் காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் சற்று உயரமானவை என்பதால் பரந்த பார்வை திறனை நமக்கு வழங்குகின்றது. குறிப்பாக, அதிக கூட்ட நெரிசல் உள்ள சாலையில் பள்ளம் மற்றும் மேடுகள் போன்ற தடைகளை எளிதில் காண இதன் உயரமான இருக்கை அமைப்பு உதவுகின்றது. ஆனால், செடான் மற்றும் ஹேட்ச்பேக் கார்களில் இந்த எளிமையான உணர்வு கிடைக்காது.

ஹேட்ச்பேக் vs காம்பேக்ட் எஸ்யூவி - எந்த ரக கார் பெஸ்ட்?.. ஆச்சரியமளிக்கும் பதில்கள் உள்ளே!!

நடைமுறை பயன்

ஹேட்ச்பேக் மற்றும் காம்பேக்ட் கார்களுக்கு இடையே பெரியளவில் இட வசதி வித்தியாசம் தென்படவில்லை. அதாவது, இரு ரக கார்களும் ஒரே மாதிரியான கேபின் அளவையேக் கொண்டிருக்கின்றன. ஆனால், காம்பேக்ட் எஸ்யூவிக்களைப் பொருத்தவரை பின்பக்கத்தில் இருக்கைகளை மடித்து வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுகின்றது. ஆகையால், பொருட்களை ஏற்றி செல்வது சற்று சுலபம்.

ஹேட்ச்பேக் vs காம்பேக்ட் எஸ்யூவி - எந்த ரக கார் பெஸ்ட்?.. ஆச்சரியமளிக்கும் பதில்கள் உள்ளே!!

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் கூடுதலாகவே பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும். இதன் உயரம் கூடுதல் என்பதால் சற்று நீளமான பொருட்களைக் கூட காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் ஏற்றிச் செல்ல முடியும். ஆனால், இந்த வசதியை ஹேட்ச்பேக் கார்களில் பெற முடியாது. தனியாக ரேக் போன்று கூரை மேல் பொருத்தி அதன் பின்னர் வேண்டுமானால் கூடுதல் லக்கேஜ்களை ஹேட்ச்பேக் கார்களில் ஏற்றிச் செல்லலாம்.

ஹேட்ச்பேக் vs காம்பேக்ட் எஸ்யூவி - எந்த ரக கார் பெஸ்ட்?.. ஆச்சரியமளிக்கும் பதில்கள் உள்ளே!!

ஹேட்ச்பேக் vs காம்பேக்ட் எஸ்யூவி - எது பெஸ்ட்? என்ற போட்டியில் ஹேட்ச்பேக் கார்களின் நன்மைகள்குறித்த தகவலை இப்போது பார்க்கலாம்.

குறைந்த விலை

விலை குறைவு, இதன் காரணத்தினாலயே மக்கள் பலர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களைக் காட்டிலும் அதிகளவில் ஹேட்ச்பேக் கார்களை வாங்கி குவித்து வருகின்றனர். உதாரணமாக மக்கள் மத்தியில் ஸ்விஃப்ட் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இதற்கு இந்த வாகனம் விலை குறைந்தது ஆகும். இதுமட்டுமின்றி, காம்பேக்ட் எஸ்யூவி கார்களைக் காட்டிலும் அதிக தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டவையாகவும் காட்சியளிக்கின்றன.

ஹேட்ச்பேக் vs காம்பேக்ட் எஸ்யூவி - எந்த ரக கார் பெஸ்ட்?.. ஆச்சரியமளிக்கும் பதில்கள் உள்ளே!!

ஸ்விஃப்ட் (ஹேட்ச்பேக்) மற்றும் விட்டாரா ப்ரெஸ்ஸா (காம்பேக்ட் எஸ்யூவி) கார்களின் வசதிகளை ஒப்பிட்டு பார்த்தாலே நமக்கான விடை கிடைத்துவிடும். இதில், விட்டாரா ப்ரெஸ்ஸா காரைக் காட்டிலும் ஸ்விஃப்ட் ஏறத்தாழ ரூ.2 லட்சம் வரை குறைந்த விலையில் கிடைத்தாலும், ப்ரெஸ்ஸாவை விட அதிக வசதிகளைக் கொண்ட காராக இருக்கின்றது. இதுவே, மக்கள் ஹேட்ச்பேக் கார்களை அதிகம் விரும்ப காரணமாக இருக்கின்றது.

ஹேட்ச்பேக் vs காம்பேக்ட் எஸ்யூவி - எந்த ரக கார் பெஸ்ட்?.. ஆச்சரியமளிக்கும் பதில்கள் உள்ளே!!

பராமரிப்பு செலவு

ஹேட்ச்பேக் கார்கள் பெரும்பாலானவை சிறிய எஞ்ஜின்களைக் கொண்டவை. ஆகையால், இதன் பயன்பாட்டு செலவு மிகக் குறைவு. மேலும், அதிக மைலேஜையும் பெற முடியும். தொடர்ந்து, காம்பேக்ட் எஸ்யூவி கார்களைக் காட்டிலும் அதிக திறனை வெளிப்படுத்தக் கூடியவையாகவும் இருக்கின்றன. இதுபோன்ற எக்கசக்க காரணங்களுக்காகவே மக்கள் தங்களின் பேராதரவை ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு வழங்கி வருகின்றனர்.

ஹேட்ச்பேக் vs காம்பேக்ட் எஸ்யூவி - எந்த ரக கார் பெஸ்ட்?.. ஆச்சரியமளிக்கும் பதில்கள் உள்ளே!!

குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் ஹேட்ச்பேக் கார்களுக்கு அதிக வரவேற்பு நிலவி வருகின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் ஹேட்ச்பேக் கார்களின் விலையும் குறைவு, பராமரிப்பு செலவும் குறைவும், அதிக தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டிருக்கின்றன, இதுபோன்ற பல்வேறு காரணங்களால் இந்த ரக கார்களை நம்மால் அதிகம் காண முடிகின்றது.

ஹேட்ச்பேக் vs காம்பேக்ட் எஸ்யூவி - எந்த ரக கார் பெஸ்ட்?.. ஆச்சரியமளிக்கும் பதில்கள் உள்ளே!!

ஸ்போர்ட்ஸ் கார் போன்ற தோற்றம்:

காம்பேக்ட் எஸ்யூவிக்களைக் காட்டிலும் ஹேட்ச்பேக் கார்களே அதிக கவர்ச்சியான உருவம் கொண்ட வாகனமாக இருக்கின்றன. இதற்கு மிக சிறந்த உதாரணங்களாக ஃபியட் புன்டோ, ஃபோர்டு ஃபிகோ மற்றும் ஸ்விஃப்ட் கார்களாகும். இவை ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையான கவர்ச்சியான உருவம் கொண்டவையாக இருக்கின்றன.

ஹேட்ச்பேக் vs காம்பேக்ட் எஸ்யூவி - எந்த ரக கார் பெஸ்ட்?.. ஆச்சரியமளிக்கும் பதில்கள் உள்ளே!!

ஹேட்ச்பேக் கார்களின் ஈர்ப்பு மையம் குறைவு என்பதால் இதன் தோற்றம் மட்டுமின்றி செயல்பாடும் ஸ்போர்ட்ஸ் கார்களைப் போலவே இருக்கும். இதற்கு மிகவும் எளிமையான உருவமே காரணம். தொடர்ந்து, மிக சிறந்த கட்டுப்பாட்டையும் இக்கார்கள் வழங்குகின்றன.

ஹேட்ச்பேக் vs காம்பேக்ட் எஸ்யூவி - எந்த ரக கார் பெஸ்ட்?.. ஆச்சரியமளிக்கும் பதில்கள் உள்ளே!!

ஹேட்ச்பேக் vs காம்பேக்ட் எஸ்யூவி - எது பெஸ்ட்?

இரு ரக கார்களுக்கும் இடையேயான அனைத்து வித்தியாசங்கள் மற்றும் நன்மைகள் பற்றிய தகவைலையும் தொகுத்து வழங்கிவிட்டோம். இதில், எந்த ரக காரை தேர்வு செய்ய வேண்டும் என்பது உங்களின் தனிப்பட்ட விருப்பமே. பட்ஜெட் விலையில் வாகனத்தை தேடுபவரானால், ஹேட்ச்பேக் கார்களே மிக சிறந்தது. இதனைப் பயன்படுத்துவதன்மூலம் கணிசமான வீண் செலவீணத்தைக் குறைக்க முடியும்.

ஹேட்ச்பேக் vs காம்பேக்ட் எஸ்யூவி - எந்த ரக கார் பெஸ்ட்?.. ஆச்சரியமளிக்கும் பதில்கள் உள்ளே!!

அதேசமயம், சில ஹேட்ச்பேக் கார்கள் காம்பேக்ட் எஸ்யூவிக்கு இணையான திறன்களுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அதேசமயம், காம்பேக்ட் எஸ்யூவி காரும் அதிக நற்பண்புகளைக் கொண்டிருக்கின்றது. சற்று கூடுதல் தொகையை செலவழிப்பதன்மூலம் இந்த பயன்களை நம்மால் பெற முடியும். அதேசமயம், எந்த ரக காரை தேர்வு செய்வது என்பது உங்களுடைய விருப்பமாகவே இருக்க வேண்டும்.

Most Read Articles

English summary
Compact SUV Car vs Hatchback Car – Advantages & Which One Should You Choose?.. Read In Tamil.
Story first published: Saturday, March 6, 2021, 11:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X