யம்மாடியோவ்... ஒரே மாதத்தில் 13 ஆயிரம் Creta கார்கள் விற்பனையாம்!! Kushaq-இன் முதல் மாத விற்பனை இதுவே!

கடந்த 2021 ஜூலை மாதத்தில் இந்திய சந்தையில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட C-பிரிவு காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

யம்மாடியோவ்... ஒரே மாதத்தில் 13 ஆயிரம் Creta கார்கள் விற்பனையாம்!! Kushaq-இன் முதல் மாத விற்பனை இதுவே!

இந்திய சந்தையில் தற்சமயம் வேகமாக வளர்ச்சி கண்டுவரும் கார் பிரிவு என்று பார்த்தால், அது C-பிரிவு காம்பெக்ட் எஸ்யூவி பிரிவு தான். அதனால் தான் இந்த பிரிவில் ஒரு காம்பெக்ட் எஸ்யூவி மாடலையாவது களமிறக்கி விற்பனை செய்ய வேண்டும் என பல தயாரிப்பு நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன.

யம்மாடியோவ்... ஒரே மாதத்தில் 13 ஆயிரம் Creta கார்கள் விற்பனையாம்!! Kushaq-இன் முதல் மாத விற்பனை இதுவே!

தற்போதைக்கு 7 காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் அடங்கும் இந்த பிரிவில் கடந்த 2021 ஜூலை மாதத்தில் மட்டும் மொத்தம் 27,895 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை இதற்கு முந்தைய 2021 ஜூன் மாதத்துடனான ஒப்பிடுகையிலும் சரி, கடந்த 2020 ஜூலை மாதத்துடனான ஒப்பிடுகையில் சரி சில ஆயிரங்கள் அதிகமாகும்.

யம்மாடியோவ்... ஒரே மாதத்தில் 13 ஆயிரம் Creta கார்கள் விற்பனையாம்!! Kushaq-இன் முதல் மாத விற்பனை இதுவே!

இந்த விற்பனை முன்னேற்றத்திற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. இதில் முக்கியமானது, Skoda Kushaq என்ற புது சி-பிரிவு காம்பெக்ட் எஸ்யூவி காரின் வருகையாகும். ஏனெனில் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து விற்பனையை துவங்கிய இந்த Skoda தயாரிப்பு வாகனத்திற்கு முதல் மாதத்திலேயே சுமார் 1,822 வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர்.

யம்மாடியோவ்... ஒரே மாதத்தில் 13 ஆயிரம் Creta கார்கள் விற்பனையாம்!! Kushaq-இன் முதல் மாத விற்பனை இதுவே!

இது உண்மையில் ஆச்சிரியமான விஷயமாகும். ஏனெனில் பெட்ரோல் தேர்வில் மட்டுமே கிடைக்கும் Kushaq-இல் 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டரில் இரு டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்பட்டாலும், இதில் 1.0 லிட்டர் என்ஜின் உடன் மட்டுமே கடந்த மாதத்தில் Kushaq முன்பதிவு செய்பவர்களுக்கு டெலிவிரி செய்யப்பட்டது.

யம்மாடியோவ்... ஒரே மாதத்தில் 13 ஆயிரம் Creta கார்கள் விற்பனையாம்!! Kushaq-இன் முதல் மாத விற்பனை இதுவே!

அளவில் பெரிய 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் Kushaq-ஐ முன்பதிவு செய்பவர்களுக்கு கார் டெலிவிரி செய்யப்படுவது ஆகஸ்ட் மாத துவக்கத்தில் இருந்தே துவங்கும் (சில தினங்களுக்கு முன் துவங்கியது) என காரின் அறிமுகத்தின் போதே Skoda நிறுவனம் தெரிவித்துவிட்டது.

யம்மாடியோவ்... ஒரே மாதத்தில் 13 ஆயிரம் Creta கார்கள் விற்பனையாம்!! Kushaq-இன் முதல் மாத விற்பனை இதுவே!

இருப்பினும் டீசல் என்ஜின் தேர்வு இல்லாமல், ஒரே ஒரு பெட்ரோல் என்ஜின் தேர்விலேயே இத்தனை பேர் Kushaq-ஐ கடந்த ஜூலையில் வாங்கியுள்ளனர். இதனால் தான் இது ஆச்சிரியமான விஷயம் என்கிறோம். மேலும், Kushaq 1.5 லி வேரியண்ட்களும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்படுவது துவங்கப்பட்டுள்ளதால், இந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து Kushaq-இன் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.

யம்மாடியோவ்... ஒரே மாதத்தில் 13 ஆயிரம் Creta கார்கள் விற்பனையாம்!! Kushaq-இன் முதல் மாத விற்பனை இதுவே!

தற்சமயம் Skoda Kushaq-இன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.51 லட்சத்தில் இருந்து ரூ.17.62 லட்சம் வரையில் உள்ளன. என்னதான் இந்த Skoda கார் முதல் மாதத்திலேயே வாடிக்கையாளர்கள் பலரை கவர்ந்திருந்தாலும், இந்தியாவில் தற்சமயம் அதிகளவில் விற்பனையாகும் காம்பெக்ட் எஸ்யூவி காராக Hyundai Creta உள்ளது.

Rank Model Jul-21 Jul-20 Growth (%)
1 Hyundai Creta 13,000 11,549 12.56
2 Kia Seltos 6,983 8,270 -15.56
3 Mahindra Scorpio 3,855 3,135 22.97
4 Maruti S-Cross 1,972 451 337.25
5 Skoda Kushaq 1,822 0 -
6 Nissan Kicks 135 88 53.41
7 Renault Duster 128 339 -62.24
யம்மாடியோவ்... ஒரே மாதத்தில் 13 ஆயிரம் Creta கார்கள் விற்பனையாம்!! Kushaq-இன் முதல் மாத விற்பனை இதுவே!

2020 ஜூலையில் 11.5k யூனிட்களும், 2021 ஜூன் மாதத்தில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் யூனிட்களும் விற்பனையாகி இருந்த இந்த Hyundai காம்பெக்ட் எஸ்யூவி கார் கடந்த 2021 ஜூலை மாதத்தில் இவற்றையெல்லாம் விட அதிகமாக, விற்பனையில் புதிய மைல்கல்லாக 13 ஆயிரம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

யம்மாடியோவ்... ஒரே மாதத்தில் 13 ஆயிரம் Creta கார்கள் விற்பனையாம்!! Kushaq-இன் முதல் மாத விற்பனை இதுவே!

இந்த லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தில் மற்றொரு தென்கொரிய நிறுவனமான Kia Seltos மாடல் உள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் 6,983 Seltos கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2020 ஜூலையிலும், 2021 ஜூன் மாதத்தில் Seltos எஸ்யூவி கார்களின் விற்பனை எளிதாக 8 ஆயிரத்தை கடந்திருந்தது.

யம்மாடியோவ்... ஒரே மாதத்தில் 13 ஆயிரம் Creta கார்கள் விற்பனையாம்!! Kushaq-இன் முதல் மாத விற்பனை இதுவே!

மூன்றாவது இடத்தை Mahindra-வின் நீண்ட கால விற்பனை மாடலான Scorpio 3,855 யூனிட்களின் விற்பனை உடன் பிடித்துள்ளது. ஆனால் இதற்கு முந்தைய ஜூன் மாதத்தில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான Scorpio கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

Most Read Articles

மேலும்... #விற்பனை #sales
English summary
Compact SUV Sales July 2021, Skoda Kushaq 1st Month Sales At 1,822.
Story first published: Friday, August 20, 2021, 17:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X