மாருதி எக்ஸ்.எல்6 காரை காட்டிலும் சிறந்ததா கியா கேரன்ஸ்? ஓர் முழுமையான ஒப்பீடுகை!

கியா இந்தியா நிறுவனம் சமீபத்தில் அதன் புதிய எம்பிவி காராக கேரன்ஸை வெளியீடு செய்தது. சொகுசு கார்னிவல் எம்பிவி காருக்கு கீழ் நிலைநிறுத்தப்பட்டுள்ள கேரன்ஸ் காருக்கான முன்பதிவுகளும் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டன. இதனால் இந்திய சந்தையில் இந்த புதிய எம்பிவி மாடல் வருகிற 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி எக்ஸ்.எல்6 காரை காட்டிலும் சிறந்ததா கியா கேரன்ஸ்? ஓர் முழுமையான ஒப்பீடுகை!

இந்தியாவில் கியாவின் நான்காவது மாடலாக விளங்கவுள்ள கேரன்ஸிற்கு மிக முக்கிய போட்டி எம்பிவி மாடல்களுள் ஒன்றாக மாருதி எக்ஸ்.எல்6 விளங்கவுள்ளது. இதனால் நாம் இந்த செய்தியில் கியா கேரன்ஸிற்கும், மாருதி எக்ஸ்.எல்6 காருக்கும் உள்ள ஒப்பீடுகையை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மாருதி எக்ஸ்.எல்6 காரை காட்டிலும் சிறந்ததா கியா கேரன்ஸ்? ஓர் முழுமையான ஒப்பீடுகை!

வெளிப்புற தோற்றம்

சமீபத்திய தயாரிப்பு என்பதால், கியா கேரன்ஸ் மிகவும் மாடர்ன் தரத்தில் தோற்றத்தை கொண்டுள்ளது. அதாவது இதன் வடிவமைப்பை இன்னும் சில வருடங்களுக்கு தாராளமாக கியா பயன்படுத்தலாம், அந்த அளவிற்கு எதிர்காலத்திற்குமான தோற்றத்தை கேரன்ஸ் பெற்றுள்ளது. முன்பக்கத்தில் இந்த புதிய கியா காரானது பிளவுப்பட்ட வடிவில் எல்இடி ஹெட்லேம்ப்பையும், பின்பக்கத்தில் வ்ராப்-ஆல் சூழப்பட்ட டெயில்லைட்களையும் கொண்டுள்ளது.

மாருதி எக்ஸ்.எல்6 காரை காட்டிலும் சிறந்ததா கியா கேரன்ஸ்? ஓர் முழுமையான ஒப்பீடுகை!

இந்த காரை சுற்றிலும் கருப்பு நிற க்ளாடிங்குகள் வழங்கப்பட்டிருக்க, 16-இன்ச் சக்கரங்கள் இரட்டை நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. எஸ்யூவி போன்றதான தோற்றத்தையும் பெற்றுவந்துள்ள கேரன்ஸ் அதன் பிரிவிலேயே நீண்ட வீல்பேஸை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி எக்ஸ்.எல்6 எம்பிவி காரை பொறுத்தவரையில், இது பிரபலமான எர்டிகாவில் இருந்து கொண்டுவரப்பட்டது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.

மாருதி எக்ஸ்.எல்6 காரை காட்டிலும் சிறந்ததா கியா கேரன்ஸ்? ஓர் முழுமையான ஒப்பீடுகை!

ஆனால் எர்டிகாவை காட்டிலும் ப்ரீமியம் தோற்றம் எக்ஸ்.எல்6க்கு வழங்கப்படுகிறது. முன்பக்கத்தில் எர்டிகாவில் இருந்து மாறுப்படும் விதமாக எக்ஸ்.எல்6 கார் கூர்மையான வடிவில் ஹெட்லேம்ப்கள் மற்றும் அகலமான முன்பக்க க்ரில்லை பெறுகிறது. ஆனால் பக்கவாட்டு & பின்பகுதி பெரியளவில் எர்டிகாவையே ஒத்து காணப்படுகிறது.

மாருதி எக்ஸ்.எல்6 காரை காட்டிலும் சிறந்ததா கியா கேரன்ஸ்? ஓர் முழுமையான ஒப்பீடுகை!

உட்புற கேபின்

கியா கேரன்ஸின் உட்புற கேபின் இண்டிகோ மற்றும் பழுப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலமாக ப்ரீமியம் தோற்றத்தில் காட்சியளிக்கும் கேரன்ஸின் உட்புறத்தை 6-இருக்கை அல்லது 7-இருக்கை தேர்வில் பெறலாமாம். இதில் 6-இருக்கை தேர்வில் கேப்டன் இருக்கைகள் இரண்டாவது இருக்கை வரிசையிலும், 7-இருக்கை தேர்வில் இதற்கு பதிலாக மேசை இருக்கைகளும் வழங்கப்பட உள்ளன.

மாருதி எக்ஸ்.எல்6 காரை காட்டிலும் சிறந்ததா கியா கேரன்ஸ்? ஓர் முழுமையான ஒப்பீடுகை!

இதனுடன் 64 விதமான நிறங்களில் உட்புற கேபின் விளக்கு அமைப்பை இந்த கார் கொண்டுள்ளதால், கேரன்ஸின் உட்புறம் உண்மையில் சொகுசு கார் போன்றதான உணர்வை தருகிறது. ஆனால் எக்ஸ்.எல்6 மாடலில் இத்தகைய பிரீமியம் தர உணர்வை எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் எர்டிகாவின் ப்ரீமியம் வெர்சனான இதன் உட்புற கேபினும் முழுவதும் கருப்பு நிறத்தில் எந்தவொரு குறையும் சொல்ல முடியாத அளவிற்கு உள்ளது.

மாருதி எக்ஸ்.எல்6 காரை காட்டிலும் சிறந்ததா கியா கேரன்ஸ்? ஓர் முழுமையான ஒப்பீடுகை!

இந்த மாருதி கார் 6-இருக்கை தேர்விவில் மட்டுமே கிடைக்கிறது. 7-இருக்கை வெர்சன் வேண்டுமென்றால், நீங்கள் எர்டிகாவிற்குதான் செல்ல வேண்டும். ஆனால் உண்மையில், எக்ஸ்.எல்6 காரின் உட்புற கேபினின் இடவசதியை பற்றி கூறியே ஆக வேண்டும். 3-இருக்கை வரிசை உடன் மிகவும் விசாலாமானதாக விளங்குகின்ற இதன் கேபினில் கேரன்ஸில் வழங்கப்பட்டுள்ளது போன்ற எந்தவொரு சன்ரூஃப் அமைப்பும் கொடுக்கப்படுவதில்லை.

மாருதி எக்ஸ்.எல்6 காரை காட்டிலும் சிறந்ததா கியா கேரன்ஸ்? ஓர் முழுமையான ஒப்பீடுகை!

என்ஜின் சிறப்பம்சங்கள்

கேரன்ஸில் மொத்தம் மூன்று விதமான என்ஜின் தேர்வுகளை கியா வழங்கியுள்ளது. இதில் ஒன்றான 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனும், 1.4 லி டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் & 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகளும், மூன்றாவது 1.5 லி டர்போ-டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் & 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.

மாருதி எக்ஸ்.எல்6 காரை காட்டிலும் சிறந்ததா கியா கேரன்ஸ்? ஓர் முழுமையான ஒப்பீடுகை!

ஆனால் மறுப்பக்கம், எக்ஸ்.எல்6 காரில் ஒரே ஒரு 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்ட என்ஜின் தேர்வு மட்டுமே கொடுக்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 105 பிஎஸ் மற்றும் 138 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் & 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. இதனுடன் எதிர்காலத்தில் சிஎன்ஜி தேர்வும் எக்ஸ்.எல்6 காரில் வழங்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மாருதி எக்ஸ்.எல்6 காரை காட்டிலும் சிறந்ததா கியா கேரன்ஸ்? ஓர் முழுமையான ஒப்பீடுகை!

விலைகள்

தென்கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் இன்னும் கேரன்ஸ் எம்பிவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை அறிவிக்கவில்லை. எங்களுக்கு தெரிந்த வரையில் இதன் பிரீமியம் தர தோற்றத்தை வைத்து பார்க்கும்போது, இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.15 லட்சங்களில் இருந்து ரூ.21 லட்சங்கள் வரையில் நிர்ணயிக்கப்படலாம். இந்த காரில் வழங்கப்பட்டுள்ள அம்சங்கள் & எக்கச்சக்க என்ஜின் தேர்வுகளை வைத்து பார்க்கும்போது இவை ஏற்கக்கூடிய விலைகளே.

மாருதி எக்ஸ்.எல்6 காரை காட்டிலும் சிறந்ததா கியா கேரன்ஸ்? ஓர் முழுமையான ஒப்பீடுகை!

மாருதி எக்ஸ்.எல்6 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.98 லட்சங்களில் இருந்து ரூ.11.86 லட்சங்கள் வரையில் உள்ளன. கேரன்ஸின் எதிர்பார்க்கப்படும் விலைகளுடன் ஒப்பிடுகையில் இவை மிகவும் குறைவாகும். எந்த அளவிற்கு என்றால், எக்ஸ்.எல்6-இன் அதிகப்பட்ச விலைக்கும், கேரன்ஸின் ஆரம்ப விலைக்கும் இடையில் சில லட்சங்கள் வித்தியாசம் இருக்கும்.

Most Read Articles
English summary
Comparison between new kia carens maruti xl6
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X