தீபாவளி பண்டிகை காலத்தில் அறிமுகமாகிறதா எம்ஜி அஸ்டர்? க்ரெட்டா, செல்டோஸின் போட்டி!!

அஸ்டர் என அழைக்கப்படும் எம்ஜி இசட்.எஸ் எஸ்யூவி கார் தீபாவளி உள்ளிட்ட வருகிற வருட இறுதி பண்டிக்கை காலத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

தீபாவளி பண்டிகை காலத்தில் அறிமுகமாகிறதா எம்ஜி அஸ்டர்? க்ரெட்டா, செல்டோஸின் போட்டி!!

பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமான எம்ஜி மோட்டார் இந்திய சந்தையில் ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ், க்ளோஸ்டர் மற்றும் இசட்எஸ் இவி என நான்கு கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதில் இசட்எஸ் இவி என்பது எலக்ட்ரிக் எஸ்யூவி காராகும்.

தீபாவளி பண்டிகை காலத்தில் அறிமுகமாகிறதா எம்ஜி அஸ்டர்? க்ரெட்டா, செல்டோஸின் போட்டி!!

கடந்த இரு வருடங்களாக இந்தியாவில் கார்களை விற்பனை செய்துவரும் எம்ஜி நிறுவனத்திற்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், தொடர்ந்து புது புது கார்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை காலத்தில் அறிமுகமாகிறதா எம்ஜி அஸ்டர்? க்ரெட்டா, செல்டோஸின் போட்டி!!

இந்த வகையில் அடுத்ததாக எம்ஜி பிராண்டில் இருந்து, தற்போது விற்பனையில் உள்ள இசட்எஸ் எலக்ட்ரிக் காரின் பெட்ரோல் வெர்சன் வெளிவரவுள்ளது. எலக்ட்ரிக் மாடலை போல் எஸ்யூவி தோற்றத்தில் வெளிவரவுள்ள இது, அஸ்டர் என்ற பெயரில் அழைக்கப்படலாம்.

தீபாவளி பண்டிகை காலத்தில் அறிமுகமாகிறதா எம்ஜி அஸ்டர்? க்ரெட்டா, செல்டோஸின் போட்டி!!

ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் போன்ற விற்பனையில் ஜொலித்துவரும் நடுத்தர அளவு எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக களமிறங்குவதால், இந்த எம்ஜி கார் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் மிக விரைவாகவே வரும் பண்டிகை காலத்தில் அஸ்டரை எம்ஜி நிறுவனம் இந்தியாவில் களமிறக்க அதிக வாய்ப்புள்ளது.

தீபாவளி பண்டிகை காலத்தில் அறிமுகமாகிறதா எம்ஜி அஸ்டர்? க்ரெட்டா, செல்டோஸின் போட்டி!!

மற்ற வெளிநாட்டு சந்தையில் இசட்எஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் எடுக்கப்பட்ட அஸ்டரின் சோதனை ஓட்ட ஸ்பை படங்களை வைத்து பார்க்கும்போது இசட்.எஸ் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் தான் நம் நாட்டு சந்தைக்கும் கொண்டுவரப்படும் என யூகிக்கிறோம்.

தீபாவளி பண்டிகை காலத்தில் அறிமுகமாகிறதா எம்ஜி அஸ்டர்? க்ரெட்டா, செல்டோஸின் போட்டி!!

இசட்.எஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் முன்பக்கத்தில் தேன்க்கூடு போன்றதான தோற்றத்தில் அறுகோண க்ரில், எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் பம்பரின் மத்தியில் அகலமான மைய காற்று ஏற்பான் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகை காலத்தில் அறிமுகமாகிறதா எம்ஜி அஸ்டர்? க்ரெட்டா, செல்டோஸின் போட்டி!!

பக்கவாட்டு மற்றும் பின்பகுதி எல்லாம் கிட்டத்தட்ட விற்பனையில் உள்ள இசட்.எஸ் எலக்ட்ரிக் காரை தான் ஒத்திருக்கும். டைமண்ட்-கட் அலாய் சக்கரங்களை பெற்றுவரவுள்ள அஸ்டரில் பனோராமிக் சன்ரூஃப் மற்றும் சிவப்பு நிற ப்ரேக் காலிபர்களையும் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

தீபாவளி பண்டிகை காலத்தில் அறிமுகமாகிறதா எம்ஜி அஸ்டர்? க்ரெட்டா, செல்டோஸின் போட்டி!!

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் மற்றும் 1.3 லிட்டர் டர்போசார்ஜ்டு 4-சிலிண்டர் என இரு பெட்ரோல் என்ஜின் தேர்வுகளை 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் எம்ஜி அஸ்டர் பெற்றுவரவுள்ளது. அதேநேரம் சிவிடி-யும் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Creta and Seltos rival MG Astor launched expected by festive season.
Story first published: Saturday, June 26, 2021, 23:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X