மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டு வரும் கடும் கட்டுப்பாடுகள் காரணமாக, வாகன விற்பனையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆட்டோமொபைல் துறை நிறுவனங்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை ஆட்டோமொபைல் துறையினர் அவ்வளவு எளிதாக மறுந்துவிட முடியாது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் காரணமாக, நாடுமுழுவதும் வர்த்தகம் அடியோடு முடங்கியது.

மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!

இதனால், ஒரு வாகனத்தை கூட விற்பனை செய்ய முடியாத நிலைக்கு பல நிறுவனங்கள் தள்ளப்பட்டன. இந்திய ஆட்டோமொபைல் துறை வரலாறு கண்டிராத நிகழ்வாக பதிவானது. சில நிறுவனங்கள் மட்டும் குறைந்த அளவு வாகனங்களை ஏற்றுமதி செய்து ஆசுவாசப்படுத்திக் கொண்டன.

மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!

இந்த சூழலில், கொரோனா இரண்டாவது அலை மிக மோசமான கட்டத்தை எட்டி உள்ளது. பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மிக கணிசமாக உயர்ந்து வருகிறது. நிலைமைய கையை விட்டு போய்விட்டதாக பல மாநிலங்கள் கவலை தெரிவித்துள்ளன.

மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!

மேலும், கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, லாக்டவுன், ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தி வருகின்றன. இதனால், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிப்பை சந்தித்துள்ளன. மஹாராஷ்டிராவில் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, டாடா, மஹிந்திரா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் வாகன உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!

அதேபோன்று, டீலர்கள் செயல்பாடுகளும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதால், கார் உள்ளிட்ட வாகனங்களின் விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களும் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு கட்டுப்பாடுகளும், அச்சமான சூழலும் வாகன விற்பனையில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!

இதேபோன்று, கொரோனா அதிகம் பரவும் மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதால், வாகன விற்பனை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆட்டோமொபைல் துறை சார்ந்த நிறுவனங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளன.

மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!

கடந்த ஆண்டு ஏற்பட்ட பெரும் பாதிப்பிலிருந்து மீண்டு கார் உள்ளிட்ட வாகன விற்பனை சூடுபிடித்த நிலையில், கொரோனா இரண்டாவது அலை தற்போது வாகன நிறுவனங்களின் வர்த்தகத்தில் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!

கொரோனாவால் கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு தேவைப்படும் செமி கன்டக்டர் சாதனம் தட்டுப்பாடும் அதிகரித்து வருவதால், பல நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளில் உற்பத்தி இல்லா நாட்களை கடைபிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!

ஒட்டுமொத்தத்தில் கொரோனா படுத்தும்பாட்டால் வாகன நிறுவனங்கள் மீண்டும் பெரும் சோதனை காலக்கட்டத்தில் உள்ளன. கொரோனா இரண்டாவது அலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அடுத்த சில மாதங்கள் பிடிக்கும் என்று தெரிகிறது.

மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!

இதனால், உடனடியாக தீர்வு காண முடியாத சூழலில் வாகன நிறுவனங்களும், அத்துறை சார்ந்த பிற நிறுவனங்களும் கடின காலத்தில் உள்ளன. கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் வாகன விற்பனையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், ஆட்டோமொபைல் துறை சார்ந்த நிறுவனங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளன.

Most Read Articles

English summary
Current Lockdown and Curfew Restrictions Likely To Affect Car and Bike Sales Again in 2021.
Story first published: Friday, April 23, 2021, 11:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X