டேஸியா டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி வெளியீடு: இந்தியாவுக்கு கொண்டு வருமா ரெனோ?

புதுப்பொலிவுடன் ஐரோப்பிய சந்தையில் டேஸியா டஸ்ட்டர் எஸ்யூவி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் புதிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

டேஸியா டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி வெளியீடு: இந்தியாவுக்கு கொண்டு வருமா ரெனோ?

ஐரோப்பிய சந்தைகளில் டஸ்ட்டர் எஸ்யூவி ரெனோ நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் டேஸியா பிராண்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக புதிய அம்சங்களுடன் அங்கு ஃபேஸ்லிஃப்ட் மாடலாக வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, வடிவமைப்பில் சிறிய மாறுதல்களுடன் புதிய பொலிவு பெற்றிருப்பதுடன், சில கூடுதல் அம்சங்களுடன் விற்பனைக்கு வர இருக்கிறது.

டேஸியா டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி வெளியீடு: இந்தியாவுக்கு கொண்டு வருமா ரெனோ?

புதிய டேஸியா டஸ்ட்டர் எஸ்யூவியில் புதிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், Y வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகள், முன்புறத்தில் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள், மற்றும் டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த எஸ்யூவியில் க்ரில் அமைப்பில் புதிய வடிவிலான க்ரோம் வில்லைகள் பதிக்கப்பட்டுள்ளன. 15 அங்குல மற்றும் 16 அங்குல சக்கரஙகளில் கிடைக்கும்.

டேஸியா டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி வெளியீடு: இந்தியாவுக்கு கொண்டு வருமா ரெனோ?

உட்புறத்தில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் உள்ளன. மல்டிவியூ கேமரா, பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

டேஸியா டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி வெளியீடு: இந்தியாவுக்கு கொண்டு வருமா ரெனோ?

இந்த காரில் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஹீட்டடு முன்புற இருக்கைகள், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் 3.5 அங்குல மல்டி இன்ஃபர்மேஷன் திரை ஆகியவை உள்ளன.

டேஸியா டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி வெளியீடு: இந்தியாவுக்கு கொண்டு வருமா ரெனோ?

2021 மாடலாக வர இருக்கும் புதிய டேஸியா டஸ்ட்டர் எஸ்யூவி ஐரோப்பாவில் இரண்டு பெட்ரோல் எஞ்சின், எல்பிஜி மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 89 பிஎச்பி பவரை வழங்கும். 1.3 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 128 பிஎச்பி பவர் அல்லது 148 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் தேர்வுகளில் கிடைக்கும்.

டேஸியா டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி வெளியீடு: இந்தியாவுக்கு கொண்டு வருமா ரெனோ?

இந்த காரில் இருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 113 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். தவிரவும், 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் எல்பிஜி எரிபொருளில் இயங்கும் தேர்விலும் கிடைக்கும்.

டேஸியா டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி வெளியீடு: இந்தியாவுக்கு கொண்டு வருமா ரெனோ?

இந்தியாவின் முதல் காம்பேக்ட் எஸ்யூவி கார் மாடல் என்ற பெருமைக்குரிய டஸ்ட்டர் எஸ்யூவி வாடிக்கையாளர்களின் தனித்துவமான தேர்வாக இருந்து வருகிறது. சந்தைப் போட்டி அதிகம் இருந்தாலும், சந்தையில் அழுத்தமாக தனது பெயரை பதிவு செய்திருக்கிறது.

டேஸியா டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி வெளியீடு: இந்தியாவுக்கு கொண்டு வருமா ரெனோ?

இந்த நிலையில், முதல் தலைமுறை மாடல் தொடர்ந்து விற்பனையில் இருந்து வரும் நிலையில், டேஸியா பிராண்டில் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட இந்த மாடலை ரெனோ நிறுவனம் இந்தியா கொண்டு வருவது அவசியமாக இருக்கிறது. ஆனால், இதுதொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வத் தகவலும் இதுவரை இல்லை.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault's sister company Dacia has revealed Duster facelift SUV for European markets.
Story first published: Wednesday, June 23, 2021, 11:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X