5-ற்கு வெறும் 1 ஸ்டார்!! ஐரோப்பிய மோதல் சோதனைகளில் மண்ணை கவ்விய டேசியா ஸ்ப்ரிங் காரின் தரம்!

மிகுந்த ஆச்சிரியத்தை ஏற்படுத்தும் வகையில் டேசியா ஸ்ப்ரிங் கார் ஐரோப்பிய என்சிஏபி மோதல் சோதனையில் வெறும் ஒரு நட்சத்திரத்தை பெற்றுள்ளது. இதுகுறித்து நமக்கு கிடைக்க பெற்றுள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

5-ற்கு வெறும் 1 ஸ்டார்!! ஐரோப்பிய மோதல் சோதனைகளில் மண்ணை கவ்விய டேசியா ஸ்ப்ரிங் காரின் தரம்!

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ரெனால்ட் க்விட் காரின் தோற்றத்தில் ஐரோப்பிய சந்தையில் டேசியா ஸ்ப்ரிங் என்ற பெயரில் எலக்ட்ரிக் கார் விற்பனையில் உள்ளது. சமீபத்தில் ஐரோப்பிய என்சிஏபி மோதல் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த இந்த இவி-க்கு தான் ஐந்திற்கு வெறும் 1 நட்சத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய போக்குவரத்து விதிகளுக்கு ஏற்ப இடது-கை காரான இதில், தானியங்கி ஓட்டுனர் உதவி அமைப்புகள் (ADAS) தொழிற்நுட்பம் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த டேசியா ஹேட்ச்பேக் எலக்ட்ரிக் காருக்கு 1 நட்சத்திரமே கிடைத்துள்ளது. ஐரோப்பிய என்சிஏபி சோதனையில் முன்பக்க மற்றும் பின்பக்க மோதல்களுக்கு உள்ளாக்கப்பட்ட இந்த காரின் பாதசாரிகளின் பாதுகாப்பு தொழிற்நுட்பங்களும் சோதனை செய்யப்பட்டன.

5-ற்கு வெறும் 1 ஸ்டார்!! ஐரோப்பிய மோதல் சோதனைகளில் மண்ணை கவ்விய டேசியா ஸ்ப்ரிங் காரின் தரம்!

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான பாதுகாப்பு

மொத்தம் 38 மதிப்பெண்களை கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான பாதுகாப்பு பிரிவில் டேசியா ஸ்ப்ரிங் இவி-க்கு வெறும் 18.9 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. பயணிகளின் கேபின் நிலையானதாக இருந்தாலும், அனைத்து பயணிகளின் கால்களும் ரிஸ்க்கில் தான் எப்போது இருக்கின்றன என்பது இந்த முடிவுகளின் மூலம் தெரிய வருகிறது.

5-ற்கு வெறும் 1 ஸ்டார்!! ஐரோப்பிய மோதல் சோதனைகளில் மண்ணை கவ்விய டேசியா ஸ்ப்ரிங் காரின் தரம்!

அதேபோல் ஓட்டுனரின் மார்பு பகுதியும் விபத்தின்போது பலத்த அடி வாங்கக்கூடியதாக உள்ளது. காரின் முன்பக்கம் முழுவதுமாக சுவரில் அதிவேகத்தில் மோதும்போது, பின் இருக்கை பயணிகளின் தலை பகுதி கூட பாதுகாப்பில்லாத பகுதியில் இருக்கிறது. முன் இருக்கை பயணிகளின் தலைப்பகுதியும், முன் & பின் இருக்கை பயணிகளின் தொடை பகுதிகளை தவிர்த்து பயணிகளின் மற்ற பாகங்களுக்கான பாதுகாப்பு மதிப்பீடு சுமார் தரத்திலேயே உள்ளது.

5-ற்கு வெறும் 1 ஸ்டார்!! ஐரோப்பிய மோதல் சோதனைகளில் மண்ணை கவ்விய டேசியா ஸ்ப்ரிங் காரின் தரம்!

மேலும், பக்கவாட்டு மோதலிலும், பக்கவாட்டு கம்பம் மோதலிலும் டேசியா ஸ்ப்ரிங் காரின் பாதுகாப்பு தரம் பரவாயில்லை என்கிற நிலையில் தான் உள்ளது. இருப்பினும், காரில் மிக முக்கியமாக பாதுகாக்கப்பட வேண்டிய பாகங்கள் நல்ல நிலையிலேயே மோதலுக்கு பின்பும் உள்ளன. பின்பக்க மோதலில் முன் இருக்கை பயணிகளை தவிர்த்து, பின் இருக்கை பயணிகள் பலத்த பாதிப்படைவர்.

5-ற்கு வெறும் 1 ஸ்டார்!! ஐரோப்பிய மோதல் சோதனைகளில் மண்ணை கவ்விய டேசியா ஸ்ப்ரிங் காரின் தரம்!

குழந்தைகள் பாதுகாப்பு

டேசியாவின் மலிவான எலக்ட்ரிக் காராக விளங்கும் டேசியா 49 மதிப்பெண்களுக்கு 27.5 மதிப்பெண்களை பெற்றுள்ளது. ஐரோப்பிய மோதல் சோதனைகளில் இதற்காக 6 மற்றும் 10 வயது உடைய சிறுவர்களின் டம்மிகள் பயன்படுத்தப்படுகின்றன. முன்பக்க மோதலில் 6 வயது உடைய சிறுவனின் தலை & கழுத்து பகுதி பெரிய பாதிப்பை பெறக்கூடியதாக உள்ளது. அதுவே 10 வயது சிறுவன் சற்று பாதுகாக்கப்படுவான் என்பதை இந்த சோதனையின் மூலம் அறிய முடிகிறது.

5-ற்கு வெறும் 1 ஸ்டார்!! ஐரோப்பிய மோதல் சோதனைகளில் மண்ணை கவ்விய டேசியா ஸ்ப்ரிங் காரின் தரம்!

பக்கவாட்டு மோதலில் சிறுவர்கள் நன்றாகவே பாதுகாக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கைகளை முன் இருக்கைகளில் பொருத்த முடியாது. பின் இருக்கை வரிசையில் மட்டுமே பொருத்தப்படும். இதனை காட்டிலும் முக்கியமாக, ஒருங்கிணைக்கப்பட்ட குழந்தை கட்டுப்பாட்டு அமைப்பு ஸ்பிரிங் மாடலில் வழங்கப்படுவதில்லை. இதுதான் இந்த எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரின் ஒட்டுமொத்த மோதல்கள் சோதனை முடிவை வெகுவாக குறைத்துள்ளது.

5-ற்கு வெறும் 1 ஸ்டார்!! ஐரோப்பிய மோதல் சோதனைகளில் மண்ணை கவ்விய டேசியா ஸ்ப்ரிங் காரின் தரம்!

பாதசாரி பாதுகாப்பு

முன்பக்க மோதலின்போது பாதசாரியின் தலை & கால்கள் காரின் பொனெட் & பம்பர் மூலமாக அடையக்கூடிய பாதிப்புகள் குறைவு என்பது காரின் ஏ-பில்லரில் பொருத்தப்பட்டு இருந்த கேமிராக்களின் மூலம் தெரியவந்துள்ளது. டேசியா ஸ்ப்ரிங் காரின் தானியங்கி அவசரகால பிரேக்கிங், சாலையில் வரும் மற்ற வாகனங்களை மட்டுமே அடையாளம் காணுகிறது. மற்றப்படி பாதசாரிகள் மற்றும் சைக்கிளிஸ்ட்களை அடையாளப்படுத்தி கொள்வதில்லை. ஒட்டுமொத்தமாக, பாதசாரிகள் பாதுகாப்பில் 54 மதிப்பெண்ணிற்கு, வெறும் 21.3 மதிப்பெண்களை இந்த எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் பெற்றுள்ளது.

5-ற்கு வெறும் 1 ஸ்டார்!! ஐரோப்பிய மோதல் சோதனைகளில் மண்ணை கவ்விய டேசியா ஸ்ப்ரிங் காரின் தரம்!

பாதுகாப்பு அமைப்பு

ஐரோப்பிய சந்தையில் வேக கட்டுபாடு மற்றும் தானியங்கி அவசர கால பிரேக்கிங்கிற்கான (AEB) உதவி அமைப்புகளை டேஸியா ஸ்ப்ரிங் பெறுகிறது. ஆனால் இவை இந்திய ரெனால்ட் க்விட்டில் வழங்கப்படுவதில்லை. சோதனையில் AEB பெரிய அளவில் தனது செயல்திறனை காட்டவில்லை. இதனாலும் இந்த எலக்ட்ரிக் காருக்கு குறைவான மதிப்பீடு கிடைத்துள்ளது.

5-ற்கு வெறும் 1 ஸ்டார்!! ஐரோப்பிய மோதல் சோதனைகளில் மண்ணை கவ்விய டேசியா ஸ்ப்ரிங் காரின் தரம்!

ஐரோப்பிய சந்தையில் வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வாகனம் ஒரே பாதையை தொடர்வதற்கான உதவி மற்றும் ஓட்டுனர் தூங்குவதை கண்டறியும் அமைப்பு உள்ளிட்டவற்றை டேஸியா ஸ்ப்ரிங் பெறுவதில்லை. இந்திய ரெனால்ட் க்விட்டில் இரட்டை முன்பக்க காற்றுப்பைகள், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

Most Read Articles

மேலும்... #டேஸியா #dacia
English summary
Dacia Spring (Renault Kwid EV) Scores Just 1 Star In Euro NCAP Crash Test
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X