Just In
- 17 min ago
சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...
- 51 min ago
மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!
- 1 hr ago
அதிக மைலேஜ் தரும் டாப்10 சப்-4மீ, க்ராஸோவர் கார்கள்... அட இந்தளவு மைலேஜ் தர கூடிய கார்கள் இந்தியாவில் இருக்கா!
- 2 hrs ago
2021 ஃபோக்ஸ்வேகேன் போலோ கார் உலக அளவில் அறிமுகம்!
Don't Miss!
- Finance
900 வருட வரலாறுள்ள பிரம்மாண்ட சொத்தினை வாங்கிய முகேஷ் அம்பானி.. எங்கே தெரியுமா?
- News
2018 போல மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு நடக்க விரும்பவில்லை - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்
- Movies
இடுப்பு பெருத்தவரே... அதிர வைத்த ஜூலி.. அலேக்காக ரசிக்கும் ஃபேன்ஸ்!
- Sports
‘சோற்றில் மறைக்கப்பட்ட முழு பூசணிக்காய்’.. நடராஜன் விலகலில் எழுந்த சர்ச்சை.. உண்மை காரணம் என்ன?
- Education
கோவையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா? அழைக்கும் ICAR நிறுவனம்!
- Lifestyle
கொரோனா சோதனை முடிவு நெகட்டிவாக வந்தாலும் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆபத்துத்தானாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அமெரிக்கர்கள் ரொம்ப அட்வான்ஸாக சென்று கொண்டிருக்கிறார்கள்!! எதிர்காலத்தில் கார் இப்படிதான் இருக்கும் போல...
உலகின் வேகமான 3-சக்கர 2-இருக்கை கொண்ட வாகனமாக எலக்ட்ரிக் கார் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பொதுவாகவே மூன்று சக்கர வாகனங்கள் அவ்வளவு ஸ்டைலாக இருக்காது என்பது பரவலான கருத்து. ஆனால் டேமக் ஸ்பிரிட்டஸ் என்ற பெயர் கொண்ட இந்த எலக்ட்ரிக் வாகனத்தை பார்த்தால், உங்களது எண்ணம் நிச்சயம் மாறிவிடும்.

டேமக் ஸ்பிரிட்டஸ் வாகனத்தை பற்றி பலருக்கு தெரிந்திருக்காது, ஏன் யாருக்குமே தெரிக்காது. ஏனெனில் இந்த வாகனம் இன்னுமும் படங்களின் மூலமாகவே உலகளவிலான வாடிக்கையாளர்களின் பார்வை காட்சியளித்து வருகிறது.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், விற்பனைக்கு வந்தால் இந்த எலக்ட்ரிக் வாகனத்திற்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இன்னும் 50, 100 வருடங்களுக்கு பிறகு கிட்டத்தட்ட அனைத்து வாகனங்களும் இவ்வாறு மூன்று சக்கரங்களில் தான் இருக்கலாம், யார் கண்டது.

இப்படிப்பட்ட எதிர்கால சிந்தனையுடன் ஸ்பிரிட்டஸ் எலக்ட்ரிக் வாகனத்தை வடிவமைத்திருக்கும் டேமக், கனடாவை சேர்ந்த எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமாகும். மூன்று சக்கரங்கள் மற்றும் இரண்டு இருக்கைகள் உடன் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்பிரிட்டஸை போன்று தற்போதைக்கு எந்தவொரு வாகனமும் விற்பனையில் இல்லாததால், இதுதான் தற்போதைக்கு, இவ்வாறான வடிவமைப்பை கொண்ட அதிவேகமான வாகனமாகும்.

ஸ்பிரிட்டஸ் இவி காரில் அதிகப்பட்சமாக 197 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 80kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை முழுவதும் சார்ஜ் செய்து கொண்டு அதிகப்பட்சமாக 482கிமீ தூரம் வரையில் பயணிக்கலாம் என்று டேமக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்தகைய பேட்டரி ஸ்பிரிட்டஸின் அல்டிமேட் வெர்சனில் பொருத்தப்படுகிறது. இதன் விலை 149,995 அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.1.09 கோடி ஆகும். இது மிக அதிகம் என்று சிலருக்கு தோன்றலாம்.

அத்தகையவர்களுக்காகவே மலிவான டீலக்ஸ் வெர்சனிலும் இந்த மூன்று-சக்கர இவி கார் விற்பனை செய்யப்பட உள்ளது. ஏனெனில் ஸ்பிரிட்டஸ் இவி காரின் டீலக்ஸ் வெர்சனின் விலை வெறும் 19,995 அமெரிக்க டாலர்களாக (ரூ.14.5 லட்சம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த வெர்சனில் 36kWh பேட்டரி தான் வழங்கப்படும். அதிகப்பட்சமாக 100எச்பி வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த பேட்டரியின் உதவியுடன் இந்த வாகனத்தை 300கிமீ வரையில் இயக்கி செல்ல முடியுமாம்.

அல்டிமேட் வெர்சனின் விலைக்கும், டீலக்ஸ் வெர்சனின் விலைக்கும் இடையே மிக பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதற்கு காரணம், ஸ்பிரிட்டஸ் அல்டிமேட் வெர்சனில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 1.8 வினாடிகளில் எட்டிவிட முடியுமாம். இதன் வேகத்தை நினைத்து பார்த்தால் பிரம்மிப்பாக உள்ளது.

இவ்வளவு வேகமான எலக்ட்ரிக் வாகனம் உலகளவில் எங்கும் விற்பனையில் தற்போதைக்கு இல்லை என தகவல்கள் கூறுகின்றன. அதேநேரம் டீலக்ஸ் மாடலில் இந்த வேகத்தை கிட்டத்தட்ட 5 வினாடிகள் தாமதமாக 6.9 வினாடிகளில் தான் எட்ட முடியுமாம். எப்படியிருந்தாலும் நமது இந்திய சந்தையை பொறுத்தவரையில் இவை இரண்டின் விலையும் அதிகம் தான்.

இதற்கு ஏற்ப உயர்த்தரத்திலான தொழிற்நுட்பங்கள் ஸ்பிரிட்டஸ் இவி காரில் வழங்கப்பட்டுள்ளன. டேமக் இவி நிறுவனம் தற்சமயம் இந்த மூன்று-சக்கர எலக்ட்ரிக் வாகனத்திற்கான முன்க்கூட்டிய முன்பதிவுகளை ஏற்று வருகிறது. கனடாவில் டொராண்டோ நகரத்தில் உள்ள தொழிற்சாலையில் இந்த வாகனங்களின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.