டெல்லி வாசிகள் கொடுத்து வச்சவங்க! மஹிந்திரா மின்சார காருக்கு பெரும் தொகை தள்ளுபடி அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?

டெல்லியில் மஹிந்திரா நிறுவனத்தின் இ-வெரிட்டோ மின்சார காருக்கு பெரும் தொகை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

டெல்லி வாசிகள் கொடுத்து வச்சவங்க! மஹிந்திரா மின்சார காருக்கு பெரும் தொகை தள்ளுபடி அறிவிப்பு... எவ்வளவு தெரியுமா?

மின் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க செய்யும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதிலும், தேசத்தின் தலைநகரான டெல்லியில் இந்த முயற்சி சற்று அதி தீவிரமாகவே காணப்படுகின்றது. இந்த யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவால், மின் வாகனங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்காக மிகப் பெரிய சலுகைகளை அறிவித்து வருகின்றார்.

டெல்லி வாசிகள் கொடுத்து வச்சவங்க! மஹிந்திரா மின்சார காருக்கு பெரும் தொகை தள்ளுபடி அறிவிப்பு... எவ்வளவு தெரியுமா?

இதற்காக 'ஸ்விட்ச் டெல்லி' எனும் திட்டத்தையும் அவர் தொடங்கியிருக்கின்றார். இதனடிப்படையில், மானியம், சிறப்பு தள்ளுபடி என பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மஹிந்திரா நிறுவனத்தின் இ-வெரிட்டோ காருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு தற்போது சலுகைகளை அறிவித்திருக்கின்றது.

டெல்லி வாசிகள் கொடுத்து வச்சவங்க! மஹிந்திரா மின்சார காருக்கு பெரும் தொகை தள்ளுபடி அறிவிப்பு... எவ்வளவு தெரியுமா?

மஹிந்திரா நிறுவனத்தின் பிரபலமான மின்சார கார்களில் ஒன்றே இ-வெரிட்டோ. இந்த மின்சார காருக்கே டெல்லி அரசு சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்திருக்கின்றது. சலுகை அல்லாத நிலையில் மஹிந்திரா இ-வெரிட்டோ கார் ரூ. 13,94,520 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஆரம்ப நிலை வேரியண்ட் டி2-வின் விலையாகும். இதன் உயர்நிலை வேரியண்டான டி6-ன் விலை ரூ. 15,29,571 ஆகும்.

டெல்லி வாசிகள் கொடுத்து வச்சவங்க! மஹிந்திரா மின்சார காருக்கு பெரும் தொகை தள்ளுபடி அறிவிப்பு... எவ்வளவு தெரியுமா?

இந்த விலைகளிலேயே ரூ. 2.88 லட்சம் வரை தள்ளுபடி செய்ய டெல்லி அரசு திட்டமிட்டிருக்கின்றது. அதாவது, பல்வேறு பிரிவுகளின்கீழ் விதிக்கப்படும் வரி, பதிவு மற்றும் மானியம் ஆகியவற்றின் வாயிலாக இந்த சலுகைகளை வழங்க இருப்பதாக அரசு அறிவித்திருக்கின்றது.

டெல்லி வாசிகள் கொடுத்து வச்சவங்க! மஹிந்திரா மின்சார காருக்கு பெரும் தொகை தள்ளுபடி அறிவிப்பு... எவ்வளவு தெரியுமா?

இதனால் முழுமையாக பதிவு மற்றும் வரி தள்ளுபடியாக இருக்கின்றது. இதேபோன்று, ஊக்குவிப்பு தொகையாக ரூ. 1.50 லட்சம் தள்ளுபடி செய்ய இருக்கின்றது. இவையே மஹிந்திரா இ-வெரிட்டோ மின்சார காருக்கு டெல்லி அரசு அறிவித்திருக்கும் சலுகை ஆகும். இதனால், மின்சார காரின் விலை ரூ. 11.18 மற்றும் ரூ. 12.41 லட்சங்களாக மாறியிருக்கின்றன.

டெல்லி வாசிகள் கொடுத்து வச்சவங்க! மஹிந்திரா மின்சார காருக்கு பெரும் தொகை தள்ளுபடி அறிவிப்பு... எவ்வளவு தெரியுமா?

இந்த அதிரடி தள்ளுபடி அறிவிப்பு மின்சார கார்களின் விற்பனையை பெருமளவில் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இக்காரில், 72 வோல்ட் 3 பேஸ் ஏசி இன்டக்சன் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 41 எச்பி மற்றும் 91 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

டெல்லி வாசிகள் கொடுத்து வச்சவங்க! மஹிந்திரா மின்சார காருக்கு பெரும் தொகை தள்ளுபடி அறிவிப்பு... எவ்வளவு தெரியுமா?

மஹிந்திரா நிறுவனம் விரைவில் இ-கேயூவி100 எனும் மின்சார காரையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து எக்ஸ்யூவி 300 மாடலிலும் மின்சார காரை மஹிந்திரா களமிறக்க திட்டமிட்டிருக்கின்றது. இவ்விரு மின்சார கார்களும் மிக விரைவில் விற்பனைக்கு வரவிருக்கின்றன.

Most Read Articles

English summary
Delhi Govt Announced Rs. 2.88 Lakh Discount For Mahindra e-Verito Electric Car. Read In Tamil.
Story first published: Tuesday, February 9, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X