எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறும் மக்கள்! பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையில் இருந்து தப்பிக்க இதுதான் வழி

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு உயர்ந்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறும் மக்கள்! பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையில் இருந்து தப்பிக்க இதுதான் வழி

இந்தியாவில் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தற்போது மெல்ல மெல்ல பிரபலமடைந்து வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை வேகம் எடுக்க இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்றாலும், சமீப காலமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை உயர்ந்து வருவதை தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறும் மக்கள்! பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையில் இருந்து தப்பிக்க இதுதான் வழி

இ-வாகன் போர்ட்டலில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை உயர்ந்து வருவதாக அரசு கூறியுள்ளது. இதில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளின் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறும் மக்கள்! பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையில் இருந்து தப்பிக்க இதுதான் வழி

இந்தியாவில் கடந்த 2017-18ம் ஆண்டில் சாலையில் இயங்கிய எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை வெறும் 69,012 மட்டுமே. இந்த எண்ணிக்கை கடந்த 2018-19ம் ஆண்டில் 1,43,358 ஆக உயர்ந்தது. இதன்பின் வந்த 2019-20ம் ஆண்டில் இந்த எண்ணிக்கையானது 1,67,041 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு உயர்ந்து வருவது நல்ல விஷயம்தான்.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறும் மக்கள்! பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையில் இருந்து தப்பிக்க இதுதான் வழி

மக்களவையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக வழங்கியுள்ள பதிலில், மத்திய கனரக தொழில்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறும் மக்கள்! பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையில் இருந்து தப்பிக்க இதுதான் வழி

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக மத்திய அரசு தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஃபேம் இந்தியா-2 திட்டம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை இதற்கு உதாரணமாக கூற முடியும். எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம், காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறும் மக்கள்! பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையில் இருந்து தப்பிக்க இதுதான் வழி

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பதற்காகவும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. மத்திய அரசு மட்டுமல்லாது, பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் ஆர்வமாக உள்ளன.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறும் மக்கள்! பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையில் இருந்து தப்பிக்க இதுதான் வழி

டெல்லி, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம் போன்ற பல்வேறு மாநிலங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். குறிப்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி மாநில அரசு இந்த விஷயத்தில் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு டெல்லி அரசு மானியம் வழங்கி வருகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறும் மக்கள்! பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையில் இருந்து தப்பிக்க இதுதான் வழி

அத்துடன் ரேஞ்ச் பற்றி மக்கள் மத்தியில் இருக்கும் பயத்தை போக்குவதற்காக, சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் டெல்லி அரசு எடுத்து வருகிறது. இந்த வரிசையில் ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள் போன்றவற்று டெல்லி அரசு சமீபத்தில் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறும் மக்கள்! பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையில் இருந்து தப்பிக்க இதுதான் வழி

இந்த கட்டிடங்களில் எல்லாம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பார்க்கிங் இட வசதியை ஒதுக்குவதுடன், சார்ஜிங் ஸ்டேஷன் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. காற்று மாசுபாடு பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த விஷயத்தில் டெல்லி மிக தீவிரமாக பணியாற்றி வருகிறது.

Most Read Articles
English summary
Demand For Electric Vehicles Doubles In Three Years In India - Here Are All The Details. Read in Tamil
Story first published: Wednesday, March 17, 2021, 22:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X