கார்கள் அப்கிரேட் செய்யப்படும் முறைகள்!! இதை தெரிஞ்சுகினு கார் வாங்க செல்வது நல்லது!

இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமாக இருந்தாலும் சரி, அல்லது வேறெந்த வெளிநாட்டு நிறுவனமாக இருந்தாலும் சரி வாடிக்கையாளர்களின் கவனத்தை தொடர்ந்து பெற வேண்டுமென்றால் கார்களுக்கு ஒவ்வொரு வருடமும் அப்கிரேடை கொண்டுவர வேண்டியது அவசியமானதாகும்.

கார்கள் அப்கிரேட் செய்யப்படும் முறைகள்!! இதை தெரிஞ்சுகினு கார் வாங்க செல்வது நல்லது!

அப்கிரேட் என்றால் காரின் தோற்றம் முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றில்லை. கார் தயாரிப்பு நிறுவனங்கள் வருடத்திற்கு வருடம் ஃபேஸ்லிஃப்ட் அல்லது தலைமுறை மாற்றத்தை தங்களது கார்களுக்கு வழங்குகின்றன. ஃபேஸ்லிஃப்ட் & தலைமுறை மாற்றம், இவை இரண்டிற்கும் இடையேயான வித்தியாசத்தை பற்றி தான் இந்த செய்தியில் விரிவாக பார்க்க உள்ளோம்.

கார்கள் அப்கிரேட் செய்யப்படும் முறைகள்!! இதை தெரிஞ்சுகினு கார் வாங்க செல்வது நல்லது!

முற்றிலும் புதிய கார்களை தவிர்த்து, நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் காரை வாங்குகிறீர்கள் என்றால் அது ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் அல்லது தலைமுறை மாற்றத்தை பெற்றதாகவே இருக்கும். தொழிற்நுட்பங்கள் ஒவ்வொரு நாளும் பல்வேறு பிரிவுகளில் முன்னேற்றம் கண்டு வருகின்றன.

கார்கள் அப்கிரேட் செய்யப்படும் முறைகள்!! இதை தெரிஞ்சுகினு கார் வாங்க செல்வது நல்லது!

இந்த பிரிவுகளில் ஆட்டோமொபைல் துறையும் தான் அடங்குகிறது. தலைமுறை மாற்றத்தின் போதும், ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடின்போதும் புதிய வசதிகளையும், தோற்றத்தில் சற்று மாற்றத்தையும் கார்களில் தயாரிப்பு நிறுவனங்கள் கொண்டு வருகின்றன. சில சமயங்களில் புதிய என்ஜின் & டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கூட அறிமுகப்படுத்தப்படுகின்றன.

கார்கள் அப்கிரேட் செய்யப்படும் முறைகள்!! இதை தெரிஞ்சுகினு கார் வாங்க செல்வது நல்லது!

அதேநேரம் சில நிறுவனங்கள் தாங்கள் கொண்டுவரும் அப்டேட்டிற்கு காரணமும் வைத்திருக்கக்கூடும். இன்னும் விஷயத்திற்கு வரவில்லை பாருங்கள், ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்றால் பொதுவாகவே காரின் வெளிப்புறத்தில், அதிலும் முன் பக்கத்தில் தான் சற்று அதிகமான மாற்றங்கள் கொண்டுவரப்படுவது வழக்கம்.

கார்கள் அப்கிரேட் செய்யப்படும் முறைகள்!! இதை தெரிஞ்சுகினு கார் வாங்க செல்வது நல்லது!

இதன் மூலமாக முன் பக்கத்தில் இருந்து பார்த்தால், கார் மொத்தமும் மாற்றியமைக்கப்பட்ட உணர்வு நமக்கு ஏற்படும். மேலும் இதனால் தான் கார்களின் முன் & பின்பக்க பம்பர் மற்றும் ஹெட்லைட் & டெயில்லைட்களின் வடிவமும் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கிறது. அதற்காக காரின் பக்கவாட்டில், பின்பக்கத்தில் மற்றும் கேபினில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடாக மாற்றங்கள் கொண்டுவரப்படாது போல என நினைத்துவிட வேண்டாம்.

கார்கள் அப்கிரேட் செய்யப்படும் முறைகள்!! இதை தெரிஞ்சுகினு கார் வாங்க செல்வது நல்லது!

ஏனெனில் சில நிறுவனங்கள் காரின் மற்ற பக்கங்களிலும் அப்டேட்களை கொண்டுவருகின்றன. ஆனால் மிகவும் குறைவாகவே. உதாரணத்திற்கு,

ஹூண்டாய் வெர்னா

2020ல் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகள் செயல்பாட்டிற்கு வந்த பிறகு ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் அதன் வெர்னா செடான் காருக்கு ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை வழங்கி இருந்தது.

கார்கள் அப்கிரேட் செய்யப்படும் முறைகள்!! இதை தெரிஞ்சுகினு கார் வாங்க செல்வது நல்லது!

இந்த அப்கிரேடினால் இந்த செடான் காரின் உடல் அமைப்பிலும், பரிமாண அளவுகளிலும் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. மாறாக புதிய ஹெட்லைட் தொகுப்பு என காரின் முன்பக்கம் தான் அப்போதைய மாடர்ன் தரத்திற்கு ஏற்ப கொண்டுவரப்பட்டது. குறிப்பாக வெர்னாவின் முன்பக்க க்ரில் சற்று பெரியதாக்கப்பட்டது.

கார்கள் அப்கிரேட் செய்யப்படும் முறைகள்!! இதை தெரிஞ்சுகினு கார் வாங்க செல்வது நல்லது!

இது 2020ல் கார் அறிமுகமான சமயத்தில் வாடிக்கையாளர்கள் பலரை கவர்ந்தது. ஆனால் உட்புற கேபினின் தோற்றத்தில் பெரியதாக எந்த மாற்றமும் வழங்கப்படவில்லை என்றாலும், புதிய, பெரிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருடன் 2020 ஹூண்டாய் வெர்னா அறிமுகப்படுத்தப்பட்டது.

கார்கள் அப்கிரேட் செய்யப்படும் முறைகள்!! இதை தெரிஞ்சுகினு கார் வாங்க செல்வது நல்லது!

தலைமுறை மாற்றத்தை பொறுத்தவரையில், அத்தகைய சமயத்தில் கார்களில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் மிக முக்கியமானவைகளாக இருக்கும். அதாவது காரின் அடிப்படை வடிவம் கூட சற்று திருத்தியமைக்கப்படலாம். அதேபோல் கூடுதல் வசதிகளும், இவ்வளவு ஏன் இயந்திர மாற்றங்கள் கூட கொண்டுவரப்படலாம்.

கார்கள் அப்கிரேட் செய்யப்படும் முறைகள்!! இதை தெரிஞ்சுகினு கார் வாங்க செல்வது நல்லது!

தலைமுறை மாற்றமாக இருந்தாலும் கூட காரின் அடிப்படை சேசிஸ் பெரும்பாலும் கை வைக்கப்படாமலே இருக்கும். ஆனால் பல வருடங்களுக்கு பிறகு இரண்டாம் தலைமுறையில் வெளிவந்துள்ள 2021 டாடா சஃபாரியில் ப்ளாட்ஃபராம் கூட மாற்றப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு அப்டேட்களை பெற்ற மற்றொரு கார் ஹூண்டாய் க்ரெட்டா ஆகும்.

கார்கள் அப்கிரேட் செய்யப்படும் முறைகள்!! இதை தெரிஞ்சுகினு கார் வாங்க செல்வது நல்லது!

2020இல் கொரோனா வைரஸ் பரவலால் எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்ட சரிவை சரிசெய்ய பெரும்பாலான நிறுவனங்கள் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட், தலைமுறை மாற்றம் என்றெல்லாம் பிரித்து பார்க்காமல், தங்களது கார்கள் அனைத்தையும் புத்துணர்ச்சியானதாக மாற்றின. ஆனால் இதில் மிக பெரிய வெற்றியை ருசித்த மாடல் என்று பார்த்தால், அதுவும் க்ரெட்டா தான்.

கார்கள் அப்கிரேட் செய்யப்படும் முறைகள்!! இதை தெரிஞ்சுகினு கார் வாங்க செல்வது நல்லது!

ஏனெனில் 2020 க்ரெட்டாவை இந்திய எஸ்யூவி கார்களின் அடையாளமாக ஹூண்டாய் நிறுவனம் மாற்றியது. வெர்னா செடான் காரின் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடில் ஒரு விதமாக நடந்து கொண்ட அதே ஹூண்டாய் நிறுவனம் தான் க்ரெட்டாவின் தலைமுறை மாற்றத்தில் முற்றிலும் வேறு மாதிரியாக நடந்து கொண்டுள்ளது. ஹூண்டாய் மோட்டார்ஸ் ஒரு உதாரணமே. மற்ற முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களும் இவ்வாறு தான் சந்தையில் தேவையை பொறுத்து அப்கிரேட்களை வழங்கி வருகின்றன.

Most Read Articles

English summary
What Is The Difference Between A Facelift And Generation-Change.
Story first published: Saturday, September 11, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X