இந்தியா Alto Vs பாகிஸ்தான் Alto!! Suzuki எந்த நாட்டில் Alto-வை சிறப்பானதாக தயாரிக்கிறது?

எல்லை பிரச்சனையில் துவங்கி கிரிக்கெட் வரையில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எப்போதும் சண்டை இருக்கும் என்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரையில் இந்திய சந்தை சற்று அப்டேட்டான மாடர்ன் கார்களை கொண்டிருந்தாலும், மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா, பாகிஸ்தான் இரண்டும் வளர்ந்துவரும் நாடுகளாகவே உள்ளன.

இந்தியா Alto Vs பாகிஸ்தான் Alto!! Suzuki எந்த நாட்டில் Alto-வை சிறப்பானதாக தயாரிக்கிறது?

இதனால் இந்த இரு நாடுகளில் விற்பனையில் உள்ள கார்களை ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு பார்ப்பதில் எந்த தவறும் இருக்காது என்று தான் நினைக்கிறேன். ஆனால் நம் இந்த செய்தியில் எல்லா வாகனங்களையும் ஒப்பிட்டு பார்க்க போவதில்லை. இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் Maruti Suzuki Alto காரையும், பாகிஸ்தானில் விற்பனையில் உள்ள Suzuki Alto காரையுமே ஒப்பிட்டு பார்க்கவுள்ளோம்.

இந்தியா Alto Vs பாகிஸ்தான் Alto!! Suzuki எந்த நாட்டில் Alto-வை சிறப்பானதாக தயாரிக்கிறது?

Alto-வின் வரலாறு

இந்திய சந்தையில் Alto ஹேட்ச்பேக் கார் முதன்முதலாக 2000ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வகையில் பார்த்தாமேயானால், 20 வருடங்களுக்கும் மேலாக நம் நாட்டில் விற்பனையில் உள்ள இந்த Maruti Suzuki வாகனம் தற்போதைக்கு இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் கார்களுள் ஒன்றாக விளங்குகிறது.

இந்தியா Alto Vs பாகிஸ்தான் Alto!! Suzuki எந்த நாட்டில் Alto-வை சிறப்பானதாக தயாரிக்கிறது?

பாகிஸ்தானில் உள்ள ஆல்டோவை பொறுத்தவரையில், இந்தியாவிலாவது கடந்த 21 வருடங்களாக தான் விற்பனையில் உள்ளது. ஆனால் பாகிஸ்தானில் 1984ல் இருந்தே FX என்ற பெயரில் விற்பனையில் உள்ளது. பின்னரே Suzuki Alto என பெயர் மாற்றப்பட்டது. Maruti மற்றும் Suzuki என்ற இந்திய-ஜப்பானிய நிறுவனங்களின் கூட்டணி இந்திய சந்தைக்காக மட்டுமே ஆகும்.

இந்தியா Alto Vs பாகிஸ்தான் Alto!! Suzuki எந்த நாட்டில் Alto-வை சிறப்பானதாக தயாரிக்கிறது?

எதன் தோற்றம் கூடுதல் ஸ்டைலானது?

இந்தியாவில் Maruti Suzuki Alto கார் நடுத்தர வர்த்தகத்தினர் வாங்கும் மாடலாக இருப்பினும், கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப கார் மிகவும் நேர்த்தியாக Maruti Suzuki நிறுவனத்தால் வடிவமைக்கப்படுகிறது. Maruti Suzuki Alto-வின் இரண்டாம் தலைமுறை நடப்பு 2021ஆம் வருடத்தின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்தியா Alto Vs பாகிஸ்தான் Alto!! Suzuki எந்த நாட்டில் Alto-வை சிறப்பானதாக தயாரிக்கிறது?

பாகிஸ்தானிய Alto இந்த அளவிற்கு இல்லையா? என கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக பாகிஸ்தானில் விற்பனையில் இருக்கும் Alto-வின் முன்பக்கம் ஏதோ ஒரு குறையுடன் இருப்பது போன்றே நமக்கு தோற்றமளிக்கிறது. பாகிஸ்தானில் Alto-வின் முன்பக்கத்தில் நம்பர் ப்ளேட் நம்மூரை போல் மத்தியில் வழங்கப்படாமல், சற்று ஓரமாக வழங்கப்படுவது வழக்கம்.

இந்தியா Alto Vs பாகிஸ்தான் Alto!! Suzuki எந்த நாட்டில் Alto-வை சிறப்பானதாக தயாரிக்கிறது?

இதுவே நமக்கு முழுமையான உணர்வு ஏற்படாததற்கு காரணமா என்பது தெரியவில்லை. அதேபோல் பக்கவாட்டில் இருந்து பாகிஸ்தானின் Alto-வை பார்த்தால், நமது ஞாபகத்திற்கு Maruti Ignis மற்றும் உயரம் அதிகம் கொண்ட ஹேட்ச்பேக்கான WagonR உள்ளிட்டவை வந்து போகின்றன.

இந்தியா Alto Vs பாகிஸ்தான் Alto!! Suzuki எந்த நாட்டில் Alto-வை சிறப்பானதாக தயாரிக்கிறது?

பின்பக்கத்தில் மேலே வழங்கப்பட்டுள்ள நிறுத்து விளக்கை தவிர்த்து பாகிஸ்தானின் Alto காரின் பின்பக்கத்தின் மேற்பகுதியில் வேறெந்த விளக்கையும் பார்க்க முடியவில்லை. இதை விட முக்கியமாக காரின் காற்று இயக்கவியலுக்கு இணக்கமான பண்பை மேம்படுத்தும் வகையில் வழங்கப்படும் ஸ்பாய்லரும் பின்பக்கத்தில் இல்லை.

இந்தியா Alto Vs பாகிஸ்தான் Alto!! Suzuki எந்த நாட்டில் Alto-வை சிறப்பானதாக தயாரிக்கிறது?

உட்புற கேபினில் உள்ள வேறுபாடுகள்

வெளிப்பக்கதை போல் இந்த இரு நாட்டில் விற்பனையில் உள்ள Alto கார்கள் உட்புறத்திலும் ஏகப்பட்ட வித்தியாசங்களை கொண்டுள்ளன. மிக முக்கியமானது என்றால், கியர் லிவர். இந்திய Alto-வில் கியர் லிவர் முன்பக்க இருக்கைகளுக்கு மத்தியில் வழங்கப்படுகிறது. ஆனால் பாகிஸ்தானின் Alto-வில் டேஸ்போர்டுடன் இணைத்தாற்போன்று வழங்கப்படுகிறது.

இந்தியா Alto Vs பாகிஸ்தான் Alto!! Suzuki எந்த நாட்டில் Alto-வை சிறப்பானதாக தயாரிக்கிறது?

இதனால் பாகிஸ்தானிய Alto காரின் உட்புற கேபினில் கூடுதல் இட வசதி கிடைக்கிறது. இதனால் டேஸ்போர்டு அமைப்பில் நாம் பாகிஸ்தானின் Alto-விற்கு தான் மதிப்பெண்களை வழங்க வேண்டும். இருப்பினும் இந்திய Alto தொழிற்நுட்ப அம்சங்களில் மேம்பட்டதாக உள்ளது. அவை என்னென்ன என்பதை கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.

Features Maruti Alto Suzuki Alto
Power Steering Yes Yes
Rear Parcel Tray Yes No
Internally Adjustable ORVMs Yes Yes
Remote Keyless Entry Yes Yes
Central Locking Door Yes Yes
Front Power Windows Yes Yes
No. of Speakers 2 2
இந்தியா Alto Vs பாகிஸ்தான் Alto!! Suzuki எந்த நாட்டில் Alto-வை சிறப்பானதாக தயாரிக்கிறது?

பயணிகளின் பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில், சில பாதுகாப்பு தரங்கள் இந்தியாவில் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த விஷயத்தில் இந்திய Alto கார் தான் கூடுதல் பாதுகாப்பானதாக விளங்குகிறது.

Safety Maruti Alto Suzuki Alto
ABS Yes Yes
EBD Yes No
Dual Front Airbags Yes Yes
Reverse Parking Sensors Yes No
Rear Door Child Lock Yes No
Speed Alert Alarm Yes Yes
இந்தியா Alto Vs பாகிஸ்தான் Alto!! Suzuki எந்த நாட்டில் Alto-வை சிறப்பானதாக தயாரிக்கிறது?

இயக்க ஆற்றலில் சிறந்தது எது?

இயக்க ஆற்றல் விஷயத்தில் இந்திய Maruti Suzuki Alto காரின் கையே ஓங்கி இருப்பது கீழுள்ள அட்டவணை பார்க்கும்போது உங்களுக்கே தெரியவரும். இந்திய Alto காரில் அதிகப்பட்சமாக 47.99 பிஎஸ் பவரை வெளிப்படுத்தக்கூடிய 796சிசி என்ஜின் வழங்கப்படுகிறது. ஆனால் பாகிஸ்தானிய Alto-வில் அளவில் சற்று சிறிய 658சிசி என்ஜின் வழங்கப்படுகிறது.

இந்தியா Alto Vs பாகிஸ்தான் Alto!! Suzuki எந்த நாட்டில் Alto-வை சிறப்பானதாக தயாரிக்கிறது?
Specification Maruti Alto Suzuki Alto
Engine 796cc 658cc
Power 47.99ps@6,000rpm 39.42ps@6,500rpm
Torque 69Nm@3,500rpm 56Nm@4,000rpm
Transmission 5-speed MT 5-speed MT/AGS
Fuel Efficiency 22.05kmpl 25kmpl

இதனால் இந்த என்ஜின் காருக்கு வழங்கும் ஆற்றலும் சற்று குறைகிறது. ஆனால் மைலேஜ் விஷயத்தில் பாகிஸ்தானிய Alto கார் சிறப்பானதாக விளங்குகிறது. இதற்காகவே வழக்கமான 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் அந்த நாட்டில் Alto-வில் டிரான்ஸ்மிஷன் தேர்வாக ஏஜிஎஸ் வழங்கப்படுகிறது.

இந்தியா Alto Vs பாகிஸ்தான் Alto!! Suzuki எந்த நாட்டில் Alto-வை சிறப்பானதாக தயாரிக்கிறது?

எங்களது கருத்து

பாகிஸ்தானின் Alto-வும் நம்மை வசீகரிக்கும் விதத்திலேயே உள்ளது. இருப்பினும் இவை இரண்டை காட்டி எந்த காரை வாங்குவீர்கள் என கேட்டால், பெட்டகம் போன்ற உடலமைப்பை கொண்டில்லாத, சிறந்த செயல்படுதிறன் மற்றும் கூடுதல் தொழிற்நுட்பங்களை கொண்ட இந்தியாவின் Alto-வின் பக்கம் தான் செல்வேன். உங்களது தேர்வு என்னவாக இருக்கும் என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

Most Read Articles

English summary
Maruti Suzuki Alto VS Suzuki Alto: Another Indo-Pak Duel
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X