இவ்ளோ வேகமா! மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாறிய பிரபல இயக்குநர்... கார், ஸ்கூட்டர் ரெண்டையுமே வாங்கியிருக்காரு!

பிரபல இயக்குநர் ஒருவர் கார், ஸ்கூட்டர் என இரண்டையுமே மின்சார ரகத்தில் வாங்கியிருக்கின்றார். அவர் வாங்கியிருக்கும் மின்சார வாகனங்கள் பற்றிய சிறப்பு தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இவ்ளே வேகமா... மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாறிய பிரபல இயக்குநர்... கார், ஸ்கூட்டர் ரெண்டையுமே வாங்கியிருக்காரு!

இந்தியர்கள் மத்தியில் மின்சார வாகனங்கள் பிரபலமடைய தொடங்கியிருக்கின்றன. முன்னதாக சாலையில் அரிதினும் அரிதாக தென்பட்டு வந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் தற்போது அதிகளவில் தென்பட தொடங்கியிருப்பதே இதற்கு சான்று. அதே நேரத்தில் நாளுக்கு நாள் இ-வாகனங்களுக்கான டிமாண்டும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

இவ்ளே வேகமா... மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாறிய பிரபல இயக்குநர்... கார், ஸ்கூட்டர் ரெண்டையுமே வாங்கியிருக்காரு!

இந்த வரவேற்பானது சாதாரணமான மக்கள் மத்தியில் மட்டுமின்றி பிரபலங்கள் மத்தியிலும் கிடைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரபலங்கள் பலர் மின்சார வாகனங்களை வாங்க தொடங்கியிருக்கின்றனர்.

இவ்ளே வேகமா... மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாறிய பிரபல இயக்குநர்... கார், ஸ்கூட்டர் ரெண்டையுமே வாங்கியிருக்காரு!

அண்மையில் பிரபல பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பெண் இயக்குநரான கிரண் ராவ் பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டரை வாங்கியிருந்தார். இவரின் வரிசையில் தற்போது புதிதாக மேலும் ஓர் இயக்குநர் இணைந்திருக்கின்றார். அவர், ஒரு படி மேலே சென்று மின்சார ஸ்கூட்டர் மற்றும் எலெக்ட்ரிக் கார் ஆகிய இரண்டையும் வாங்கி, அவரது கராஜை அலங்கரித்திருக்கின்றார்.

இவ்ளே வேகமா... மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாறிய பிரபல இயக்குநர்... கார், ஸ்கூட்டர் ரெண்டையுமே வாங்கியிருக்காரு!

மலையாள திரையுலகின் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரான ஜீது ஜோசப், அவரே மின்சார ஸ்கூட்டர் மற்றும் எலெக்ட்ரிக் கார் இரண்டையும் வாங்கியவர் ஆவார். அண்மையில் வெளியாகிய த்ரிஷ்யம் திரைப்படத்தை இவர் இயக்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. எம்ஜி இசட்எஸ் இவி மின்சார கார் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அவர் வாங்கியிருக்கின்றார்.

இவ்ளே வேகமா... மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாறிய பிரபல இயக்குநர்... கார், ஸ்கூட்டர் ரெண்டையுமே வாங்கியிருக்காரு!

ஜீது ஜோசப்பின் இந்த செயல் சாமானியர்களைப் போல் பிரபலங்கள் மத்தியிலும் மின்சார வாகனங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன என்பதை தெரிவிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. ஜீது ஜோசப் வாங்கியிருக்கும் இரு மின்சார வாகனங்களும் இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. அவற்றின் விபரங்களைக் கீழே பார்க்கலாம், வாங்க.

இவ்ளே வேகமா... மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாறிய பிரபல இயக்குநர்... கார், ஸ்கூட்டர் ரெண்டையுமே வாங்கியிருக்காரு!

எம்ஜி இசட்எஸ் இவி (MG ZS EV) மின்சார கார்

எம்ஜி இசட்எஸ் மின்சார கார் இந்தியாவில் இரு விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எக்ஸைட் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் ஆகிய ட்ரிம்களில் அது கிடைக்கிறது. இதில் எக்ஸைட் ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும். எக்ஸ்க்ளூசிவ் உயர் நிலை தேர்வாகும். இதன் 2021ம் ஆண்டு வெர்ஷனில் மூன்று விதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டன.

இவ்ளே வேகமா... மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாறிய பிரபல இயக்குநர்... கார், ஸ்கூட்டர் ரெண்டையுமே வாங்கியிருக்காரு!

340 கிமீ முதல் 419 கிமீ வரை ரேஞ்ஜ் வழங்கும் உயர் தொழில்நுட்ப பேட்டரி, அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் சற்று கூடுதல் அளவுகள் கொண்ட பெரிய டயர் உள்ளிட்டவை அப்டேட்டுகளாக வழங்கப்பட்டுள்ளன. எம்ஜி இசட்எஸ் இவி மின்சார கார் நாட்டில் ரூ. 20.99 லட்சம் தொடங்கி ரூ. 24.18 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஹூண்டாய் கோனா இவி மற்றும் டாடா நெக்ஸான் இவி ஆகிய கார்களுக்கு போட்டியாக இது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

இவ்ளே வேகமா... மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாறிய பிரபல இயக்குநர்... கார், ஸ்கூட்டர் ரெண்டையுமே வாங்கியிருக்காரு!

டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

டிவிஎஸ் ஐக்யூப் இந்தியாவின் மிக அதிக சிறப்பு வசதிகள் கொண்ட மின்சார ஸ்கூட்டராக காட்சியளிக்கின்றது. இந்த மின் வாகனத்தில் 4.4 kWh மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக மணிக்கு 78 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த மின் மோட்டாருக்கு மின் சக்தியை வழங்கும் பொருட்டு 2.25 kWh லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவ்ளே வேகமா... மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாறிய பிரபல இயக்குநர்... கார், ஸ்கூட்டர் ரெண்டையுமே வாங்கியிருக்காரு!

இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 75 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மேலும், பேட்டரியை வழக்கமான சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தால் அது முழுமையாக சார்ஜாக 7 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும். ஸ்கூட்டரில் டிஎஃப்டி திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு வாகனம் குறித்த பல்வேறு தகவல்களை அறிந்துக் கொள்ள முடியும்.

இவ்ளே வேகமா... மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாறிய பிரபல இயக்குநர்... கார், ஸ்கூட்டர் ரெண்டையுமே வாங்கியிருக்காரு!

இதுமாதிரியான பல்வேறு சிறப்பு வசதிகளை டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றிருக்கின்றது. இதேபோல் எம்ஜி இசட்எஸ் இவி மின்சார காரும் பன்முக பிரீமியம் தர அம்சங்களை தாங்கியிருக்கின்றது. ஆகையால், இவை இரண்டிற்கும் இந்திய இளைஞர்கள் மத்தியில் சூப்பரான டிமாண்ட் நிலவி வருகின்றது.

Most Read Articles

English summary
Drishyam director jeethu joseph added mg zs ev and tvs iqube electric scooter to his garage
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X