ரீ-சேல் மதிப்பு அதிகம் கொண்ட கார்கள் எது தெரியுமா...? வாங்க பார்க்கலாம்...

மறு விற்பனையின்போது அதிக மதிப்புடன் விற்பனையாகும் கார்களின் பட்டியலை தனியார் நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ரீ-சேல் மதிப்பு அதிகம் கொண்ட கார்கள் எது தெரியுமா...? வாங்க பார்க்கலாம்...

மறு விற்பனை (Resale)யின்போது அதிக மதிப்புடன் விற்பனையாகும் கார்கள் எது என்கிற தகவலை தனியார் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. ஆரஞ்சு புத்தம் வேல்யூ (Orange Book Value) என்ற பெயரில் நடத்தப்பட்ட சர்வே மூலமாகவே இந்த தகவல் தெரிய வந்திருக்கின்றது.

ரீ-சேல் மதிப்பு அதிகம் கொண்ட கார்கள் எது தெரியுமா...? வாங்க பார்க்கலாம்...

இது வெளியிட்டிருக்கும் தகவலின்படி, நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றான எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி மற்றும் மாருதி சுசுகி நிறுவனத்தின் சியாஸ் ஆகிய கார்களே அதிக மதிப்புடன் மறு விற்பனையைப் பெறும் கார்கள் என்பது தெரிய வந்திருக்கின்றது.

ரீ-சேல் மதிப்பு அதிகம் கொண்ட கார்கள் எது தெரியுமா...? வாங்க பார்க்கலாம்...

அதாவது, இரு கார்களும் அதனதன் பிரிவில் அதிக மறு விற்பனை மதிப்பு கொண்ட கார்கள் என ஓபிவி தெரிவித்திருக்கின்றது. இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் சி-செக்மண்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் அதிக மறு விற்பனை மதிப்பைக் கொண்ட காராக எம்ஜி ஹெக்டர் இருக்கின்றது. இது 90 சதவீதம் வரை மறு விற்பனை மதிப்பைப் பெற்றிருக்கின்றது.

ரீ-சேல் மதிப்பு அதிகம் கொண்ட கார்கள் எது தெரியுமா...? வாங்க பார்க்கலாம்...

இக்காருக்கு அடுத்த இடத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் மற்றும் டாடா ஹாரியர் ஆகிய கார்கள் இருக்கின்றன. இதேபோன்று செடான் கார்கள் பிரிவில் மாருதி சுசுகியின் சியாஸ் காரே அதிக மறு விற்பனை மதிப்பு கொண்ட கார்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது.

ரீ-சேல் மதிப்பு அதிகம் கொண்ட கார்கள் எது தெரியுமா...? வாங்க பார்க்கலாம்...

இக்காருக்கு அடுத்தபடியாக ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் ஸ்கோடா ரேபிட் ஆகிய கார்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருக்கின்றன. புத்தம் புதிய செடான் கார் தற்போது சந்தையில் ரூ. 8.31 லட்சம் தொடங்கி ரூ. 11.09 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

ரீ-சேல் மதிப்பு அதிகம் கொண்ட கார்கள் எது தெரியுமா...? வாங்க பார்க்கலாம்...

இக்கார் 1.462 சிசி திறன் கொண்ட பெட்ரோல் எஞ்ஜினில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த எஞ்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி இந்தியாவில் ரூ. 12.73 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து ரூ.17.72 லட்சம் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது.

ரீ-சேல் மதிப்பு அதிகம் கொண்ட கார்கள் எது தெரியுமா...? வாங்க பார்க்கலாம்...

இந்த கார் 1,451 சிசி திறன் பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 1,956 திறன் கொண்ட டீசல் எஞ்ஜின் என இரு விதமான மோட்டார் தேர்வில் கிடைக்கின்றது. மேலும், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வும் இக்காரில் கிடைக்கின்றது.

ரீ-சேல் மதிப்பு அதிகம் கொண்ட கார்கள் எது தெரியுமா...? வாங்க பார்க்கலாம்...

ட்ரூம் எனும் நிறுவனமே இந்த ஆரஞ்சு புக் வேல்யூ சர்வேயினை நடத்தியது. இந்நிறுவனம், எஸ்யூவி மற்றும் செடான் கார்கள் மட்டுமின்றி ஹேட்ச்பேக், எம்பிவி போன்ற கார்களுக்கான சர்வேயையும் எடுத்து வருகின்றது. முதல்கட்டமாக தற்போது எஸ்யூவி மற்றும் செடான் கார்களின் மறு விற்பனை மதிப்பு பற்றிய தகவலை அது வெளியிட்டிருக்கின்றது.

ரீ-சேல் மதிப்பு அதிகம் கொண்ட கார்கள் எது தெரியுமா...? வாங்க பார்க்கலாம்...

இந்த தகவல்கள் அனைத்தையும் பயன்படுத்திய கார்களை விற்பனைச் செய்யும் சந்தையில் சேகரித்ததன் அடிப்படையில் ட்ரூம்'ஸ் வெளியிட்டிருக்கின்றது. இந்நிறுவனம் பழைய கார்களின் மதிப்பை தனது செயற்கை நுண்ணறிவுக் கொண்ட தளத்தின் வாயிலாக கண்டறிந்து சுமார் 10 செகண்டுகளுக்கு வழங்கி வருகின்றது. இந்த சேவையை உலகின் 38 நாடுகளில் செய்து வருகின்றது ட்ரூம்.

Most Read Articles

English summary
Droom's Orange Book Value Survey Reveals Highest Resale Value Cars Details. Read In Tamil.
Story first published: Saturday, January 30, 2021, 15:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X