ரகசியமாக XUV300 காரை திரும்பி அழைக்கும் Mahindra... உட்குளிர்விக்கும் குழாயில் பிரச்னையாம்... முழு விபரம்!

Mahindra நிறுவனம் XUV300 கார் மாடலை ரகசியமாக திரும்பி அழைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எதற்காக இந்த அழைப்பு என்பது பற்றிய முக்கிய விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

ரகசியமாக XUV300 காரை திரும்பி அழைக்கும் Mahindra... உட்குளிர்விக்கும் குழாயில் பிரச்னையாம்... முழு விபரம்!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் எக்ஸ்யூவி 300 (XUV300) மாடலும் ஒன்று. இந்த கார் மாடலின் டீசல் எஞ்ஜின் தேர்வுகளையே நிறுவனம் தற்போது திரும்பி அழைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கவில்லை.

ரகசியமாக XUV300 காரை திரும்பி அழைக்கும் Mahindra... உட்குளிர்விக்கும் குழாயில் பிரச்னையாம்... முழு விபரம்!

அதேவேலையில், உட்குளிர்விக்கும் குழாயில் ஏற்பட்டிருக்கும் கோளாறின் காரணமாக மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி300 காரை திரும்பி அழைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இந்த அழைப்பு பணிகள் மிகவும் அமைதியான முறையில் சத்தமின்றி செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.

ரகசியமாக XUV300 காரை திரும்பி அழைக்கும் Mahindra... உட்குளிர்விக்கும் குழாயில் பிரச்னையாம்... முழு விபரம்!

இதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. எதிர்காலத்தில் வரும் பிரச்னையைத் தவிர்க்கும் பொருட்டு இந்த திரும்பி அழைக்கும் பணியை மஹிந்திரா நிறுவனம் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகின்றது. இதுகுறித்து நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்குமா என்பது பற்றிய தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

ரகசியமாக XUV300 காரை திரும்பி அழைக்கும் Mahindra... உட்குளிர்விக்கும் குழாயில் பிரச்னையாம்... முழு விபரம்!

அதேவேலையில், பிரச்னையை சந்தித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு பழுதான சாதனம் இலவசமாக மாற்றித் தரப்பட இருக்கின்றது. எக்ஸ்யூவி300 பிஎஸ்6 தர எஞ்ஜின் உடன் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இது ஓர் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட கார் மாடலாகும்.

ரகசியமாக XUV300 காரை திரும்பி அழைக்கும் Mahindra... உட்குளிர்விக்கும் குழாயில் பிரச்னையாம்... முழு விபரம்!

குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் ஆய்வில் இந்த கார் ஐந்திற்கு ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றது. ஆகையால், இந்தியாவின் பாதுகாப்பான கார் என்ற மகுடத்தை எக்ஸ்யூவி300 மாறியது. தற்போது டீசல் எஞ்ஜின் தேர்வில் 1.5 லிட்டர் டர்போசார்ஜட் மோட்டாரே பயன்படுத்தப்படுத்தப்படுகின்றது.

ரகசியமாக XUV300 காரை திரும்பி அழைக்கும் Mahindra... உட்குளிர்விக்கும் குழாயில் பிரச்னையாம்... முழு விபரம்!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 117 பிஎஸ் மற்றும் 300 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்விலும் எக்ஸ்யூவி300 கிடைக்கின்றது. இந்த எஞ்ஜின் 108 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

ரகசியமாக XUV300 காரை திரும்பி அழைக்கும் Mahindra... உட்குளிர்விக்கும் குழாயில் பிரச்னையாம்... முழு விபரம்!

6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோஷிப்ட் டிரான்ஸ்மிஷன் தேர்வில் இந்த எஞ்ஜின் விற்பனைக்குக் கிடைக்கிறது. கியா சொனெட், நிஸான் மேக்னைட், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு இது போட்டியாக விற்பனைக்குக் கிடைக்கிறது.

ரகசியமாக XUV300 காரை திரும்பி அழைக்கும் Mahindra... உட்குளிர்விக்கும் குழாயில் பிரச்னையாம்... முழு விபரம்!

மஹிந்திரா நிறுவனம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்யூவி700 கார் மாடலின் விலை பற்றிய தகவலை வெளியிட்டிருக்கின்றது. எக்ஸ்யூவி 500 கார் மாடலின் அப்கிரேட் செய்யப்பட்ட மாடலாக எக்ஸ்யூவி 700 விற்பனைக்கு வர இருக்கின்றது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ.11.99 லட்சமாகும்.

ரகசியமாக XUV300 காரை திரும்பி அழைக்கும் Mahindra... உட்குளிர்விக்கும் குழாயில் பிரச்னையாம்... முழு விபரம்!

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதன் உயர்நிலை மாடலின் விலை ரூ. 19.79 லட்சமாக உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் அனைத்தும் எக்ஸ்யூவி700 காரை வாங்கும் முதல் 25,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரகசியமாக XUV300 காரை திரும்பி அழைக்கும் Mahindra... உட்குளிர்விக்கும் குழாயில் பிரச்னையாம்... முழு விபரம்!

இதன் பின்னர் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலையில் மாற்றம் செய்யப்படும். ஆனால், எவ்வளவு மாற்றம் செய்யப்படும் என்பது பற்றிய தகவலை நிறுவனம் வெளியிடவில்லை. புதிய எக்ஸ்யூவி 700 காரை வருகிற அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து டீலர்ஷிப் ஷோரூம்களில் காணலாம். இதைத்தொடர்ந்து, அக்டோபர் மாதம் 10 தேதியில் இருந்து காரின் டெலிவரி பணிகளை நிறுவனம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரகசியமாக XUV300 காரை திரும்பி அழைக்கும் Mahindra... உட்குளிர்விக்கும் குழாயில் பிரச்னையாம்... முழு விபரம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலை விபரத்தை பட்டியலாகக் கீழே காணலாம்.

MX Series
Fuel Type 5-Seater (MT)
MX Petrol ₹11.99 Lakh
Diesel ₹12.49 Lakh
AndrenoX Series
Fuel Type MT AT
AX3

(5-Seater)

Petrol ₹13.99 Lakh ₹15.59 Lakh
Diesel ₹14.59 Lakh** ₹16.19 Lakh
AX5

(5-Seater)

Petrol ₹14.99 Lakh** ₹16.59 Lakh
Diesel ₹15.59 Lakh** ₹17.19 Lakh**
AX7

(7-Seater)

Petrol ₹17.59 Lakh ₹19.19 Lakh
Diesel ₹18.19 Lakh ₹19.79 Lakh
**Also available in 7-Seater at an additional ₹60,000
ரகசியமாக XUV300 காரை திரும்பி அழைக்கும் Mahindra... உட்குளிர்விக்கும் குழாயில் பிரச்னையாம்... முழு விபரம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் டெஸ்ட் டிரைவ் கிடைக்கும் நகரங்களின் பட்டியல்:

Phase 1 - October 2 onwards Phase 2 - October 7 onwards
டெல்லி என்சிஆர் ஜெய்பூர்
பெங்களூர் சூரத்
மும்பை பாட்னா
ஹைதராபாத் கொச்சின்
சென்னை கட்டாக்
அஹமதாபாத் கான்பூர்
புனே கோழிகோடு
இந்தூர் நாசிக்
லக்னோ
கோவை
வதோதரா

Source: Team BHP

Most Read Articles

English summary
Due to intercooler hose fault mahindra recalls xuv300
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X