எலக்ட்ரிக் கார்களில் உடனடியாக அதிக வேகம் கிடைக்க இதுதான் காரணமா!! எரிபொருள் என்ஜின் கார்களை விட பெஸ்ட் தானா?

எரிபொருள் என்ஜின் கார்களை காட்டிலும் எலக்ட்ரிக் கார்கள் ஏன் வேகம் அதிகம் கொண்டவைகளாக உள்ளன. அதனை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

எலக்ட்ரிக் கார்களில் உடனடியாக அதிக வேகம் கிடைக்க இதுதான் காரணமா!! எரிபொருள் என்ஜின் கார்களை விட பெஸ்ட் தானா?

பொதுவாக பட்ஜெட் விலையில் வாங்கக்கூடிய கார் ஒன்றில் பொருத்தப்படும் பெட்ரோல் என்ஜின் தனது அதிகப்பட்ச குதிரையாற்றலை (பிஎச்பி) சராசரியாக 7000- 8000 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்துகிறது. குறைந்த ஆக்ஸிஜன் அடர்த்தியின் காரணமாக, அதிகப்பட்ச வேகத்தை எட்டும்வரை கிட்டத்தட்ட ஒரே அளவிலான டார்க் திறனை காருக்கு வழங்குகிறது.

எலக்ட்ரிக் கார்களில் உடனடியாக அதிக வேகம் கிடைக்க இதுதான் காரணமா!! எரிபொருள் என்ஜின் கார்களை விட பெஸ்ட் தானா?

அதாவது இத்தகைய பெட்ரோல் என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் அளவானது காரின் வேகத்தால் ஏற்படும் ஆக்ஸிஜன் குறைவை தாண்டி, கிடைக்கப்பெறும் ஆக்ஸிஜன் அளவையும் சார்ந்துள்ளது. ஆனால் எலக்ட்ரிக் வாகனத்தில் வழங்கப்படும் எலக்ட்ரிக் மோட்டார், அதனுள் பேட்டரியானது காரின் வேகத்தை சார்ந்தது கிடையாது. அதுமட்டுமின்றி எலக்ட்ரிக் கார்களில் கியர் வழங்கப்படுவதில்லை.

எலக்ட்ரிக் கார்களில் உடனடியாக அதிக வேகம் கிடைக்க இதுதான் காரணமா!! எரிபொருள் என்ஜின் கார்களை விட பெஸ்ட் தானா?

மேலும், எரிபொருள் என்ஜின் அமைப்பில் எரிபொருளும் காற்றும் கலப்பதற்கு சற்று நேரத்தை எடுத்து கொள்ளும். அதன்பின் இவை சிலிண்டர்களுக்கு செல்ல வேண்டும். இத்தகைய கால விரயத்தினாலும் எரிபொருள் என்ஜின் கார்கள் உடனடியாக அதிவேகத்தை எட்டுவதில் சிரமப்படுகின்றன. ஆனால் எலக்ட்ரிக் கார்களில் இவ்வாறான செயல்பாடுகள் எதுவும் இல்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் எலக்ட்ரான்கள் ஒரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பாய்ந்துவிடும்.

எலக்ட்ரிக் கார்களில் உடனடியாக அதிக வேகம் கிடைக்க இதுதான் காரணமா!! எரிபொருள் என்ஜின் கார்களை விட பெஸ்ட் தானா?

இதன் காரணமாக எலக்ட்ரிக் கார்களில் கிடைக்கப்பெறும் டார்க் திறன் விகிதங்கள் உடனடியாக ஏற்றம் காணுகின்றன. ஆனால் எரிபொருள் என்ஜின் கார்களில் ஆர்பிஎம் அதிகரிக்க அதிகரிக்கவே டார்க் திறன் கிடைக்கும். இதனை, பூட்டப்பட்ட கதவினை சாவி கொண்டு திறந்து உள்ளே செல்வதற்கும், வாகனம் ஒன்றினால் மோதி கதவை உடைத்து உள்ளே செல்வதற்குமான வித்தியாசமாக பார்க்கலாம்.

எலக்ட்ரிக் கார்களில் உடனடியாக அதிக வேகம் கிடைக்க இதுதான் காரணமா!! எரிபொருள் என்ஜின் கார்களை விட பெஸ்ட் தானா?

எலக்ட்ரிக் கார்களில் அதிகப்பட்ச டார்க் திறன் 0 ஆர்பிஎம்-லேயே கிடைக்கும். இதனால் உடனடி முடுக்கம் கிடைப்பதால், டர்போகள் மற்றும் சூப்பர்சார்ஜர்கள் உதவியுடன் மலை ஏற்றங்களில் கூட எலக்ட்ரிக் கார்களில் பெரியதாக எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை. எலக்ட்ரிக் கார்கள் மிகவும் செங்குத்தான டார்க் திறன் அதிகரிப்பை கொண்டுள்ளன. ஏனெனில் ஆர்பிஎம் அதிகரிக்க, அதிகரிக்க காரின் வேகம் அதிகரிக்கும்.

எலக்ட்ரிக் கார்களில் உடனடியாக அதிக வேகம் கிடைக்க இதுதான் காரணமா!! எரிபொருள் என்ஜின் கார்களை விட பெஸ்ட் தானா?

கியர்கள் எதுவும் இல்லாததும் எலக்ட்ரிக் கார்களின் இத்தகைய பண்பிற்கு காரணமாகும். எரிபொருள் என்ஜின் கார்களில் டார்க் திறன் கிடைப்பது என்ஜினின் க்ராங்க்‌ஷாஃப்ட் சுழலும் வேகத்தை பொறுத்தது ஆகும். எரிபொருள் என்ஜின்கள் பெரும்பான்மையான டார்க் திறனை ஆரம்பத்திலேயே ஆக்ஸலரேஷன் அதிகமாக கொடுக்கப்படுவதால் வெளியிட்டுவிடுகின்றன.

எலக்ட்ரிக் கார்களில் உடனடியாக அதிக வேகம் கிடைக்க இதுதான் காரணமா!! எரிபொருள் என்ஜின் கார்களை விட பெஸ்ட் தானா?

இதுதான் காரை ஸ்டார்ட் செய்யும்போது புகை வெளிவருவதற்கு காரணம். பிறகு கொஞ்ச கொஞ்சமாக ஆர்பிஎம்-கள் கட்டமைக்கப்படும். ஆனால் எலக்ட்ரிக் மோட்டார்கள் எல்லா விதமான வேகங்களிலும் அதிகப்பட்ச டார்க் திறனை வழங்குகிறது. எரிபொருள் என்ஜின் கார்களில் கியரை மாற்ற சில வினாடிகள் ஆகும். இதுவும் இத்தகைய கார்கள் உடனடி அதிவேகத்தை எட்ட சிரமப்படுவதில் காரணமாகும்.

எலக்ட்ரிக் கார்களில் உடனடியாக அதிக வேகம் கிடைக்க இதுதான் காரணமா!! எரிபொருள் என்ஜின் கார்களை விட பெஸ்ட் தானா?

ஆனால் உண்மையில், கியர்களை கொண்டில்லாத எலக்ட்ரிக் கார்களை காட்டிலும் எரிபொருள் என்ஜின் கார்களே நெடுஞ்சாலைகளில் நீண்ட தொலைவிற்கு தொடர்ச்சியாக அதிவேகத்தில் பயணிக்க வைக்கின்றன. எலக்ட்ரிக் கார்களில் ஒரே ஒரு கியர் மட்டும் தான். ஏற்கனவே கூறியதுபோல், இது எல்லா வேகங்களிலும் முழு டார்க் திறனை வழங்குகிறது.

எலக்ட்ரிக் கார்களில் உடனடியாக அதிக வேகம் கிடைக்க இதுதான் காரணமா!! எரிபொருள் என்ஜின் கார்களை விட பெஸ்ட் தானா?

டெஸ்லா மாடல் எஸ் பிளைட் காரில் 0-வில் 100kmph வேகத்தை வெறும் 2 வினாடிகளில் எட்டிவிடலாம். இது எவ்வாறு சாத்தியமாகிறது?. இதற்கான விடை புரிந்துக்கொண்டால், எரிபொருள் என்ஜின் கார்களுக்கும், எலக்ட்ரிக் கார்களுக்கும் டார்க் திறன் வளைவில் எத்தகைய வித்தியாசம் உள்ளது என்பதை அறிந்துக்கொள்ளலாம். டெஸ்லா மாடல் எஸ் பிளைட் காரில் 100kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்படுகிறது.

எலக்ட்ரிக் கார்களில் உடனடியாக அதிக வேகம் கிடைக்க இதுதான் காரணமா!! எரிபொருள் என்ஜின் கார்களை விட பெஸ்ட் தானா?

0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 1.98 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த டெஸ்லா எலக்ட்ரிக் காரில் 1020 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றல் கிடைக்கிறது. இருப்பினும் சில சூழல்கள் எரிபொருள் என்ஜின் கார்களே சிறந்தவை என சொல்ல வைக்கின்றன. ஏனெனில் இவற்றில் அதிகப்பட்ச வேகத்தை கியர்களின் உதவியுடன் தொடர்ச்சியாக பெறலாம். ஆனால் எலக்ட்ரிக் கார்களில் தொடர்ச்சியாக ஆக்ஸலேரேஷன் கொடுத்த வண்ணம் இருக்க வேண்டிய சூழலே தற்போதைக்கு உள்ளது.

Most Read Articles

English summary
Why Do Electric Cars Accelerate Faster Than Internal Combustion Cars?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X