தடையே இல்ல! அந்த வண்டி வச்சிருக்கவங்களுக்கு மட்டும்! எப்போ வேணாலும் டெல்லியின் எந்த பகுதிக்கும் செல்லலாம்!

அண்மையில் டெல்லி அரசு குறிப்பிட்ட சில வாகனங்கள் பீக் ஹவர்ஸ் எனப்படும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் இயங்கக் கூடாது என தடை விதித்தது. இந்த தடையில் இருந்து சில வாகனங்களுக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதவில் பார்க்கலாம், வாங்க.

இந்த வண்டி வச்சிருக்கவங்களுக்கு தடை கிடையாது! எப்போ வேணாலும் நகரத்தின் எந்த பகுதிக்கும் செல்லலாம்...

தலைநகர் டெல்லி கடுமையான மாசுபாட்டில் சிக்கி தவித்து வருகின்றது. கடந்த தீபாவளி பண்டிக்கைக்கு பின்னர் நிலைமை மிகவும் மோசமானதாக காட்சியளிக்கின்றது. இதன் விளைவாக காற்று மாசுபாட்டிற்கு எதிரான போரை மாநில அரசு கையிலெடுத்திருக்கின்றது. இதன் அடிப்படையில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே உள் எரிப்பு எந்திரங்கள் கொண்ட (பெட்ரோல், டீசல்) வாகனங்கள் நகரத்திற்குள் பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த வண்டி வச்சிருக்கவங்களுக்கு தடை கிடையாது! எப்போ வேணாலும் நகரத்தின் எந்த பகுதிக்கும் செல்லலாம்...

நகரத்தின் முக்கியமான 250 சாலைகளில் முக்கியமாக வர்த்தக வாகனங்களின் இயக்கம் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலையில் 5 மணி தொடங்கி இரவு 9 மணி வரையிலும் இருக்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டைக் குறைக்கும் பொருட்டு இந்த தடை அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாகவும், இதை மீறும் வாகனங்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த வண்டி வச்சிருக்கவங்களுக்கு தடை கிடையாது! எப்போ வேணாலும் நகரத்தின் எந்த பகுதிக்கும் செல்லலாம்...

இந்த நிலையில், மேலே அறிவிக்கப்பட்ட தடை குறிப்பிட்ட சில வாகனங்களைக் கொண்டிருப்போர்க்கு மட்டும் பொருந்தாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆம், காற்று மாசை துளியளவும் ஏற்படுத்தாத வாகனங்களான மின் வாகனங்களுக்கு மட்டும் இந்த விதியில் விலக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த வண்டி வச்சிருக்கவங்களுக்கு தடை கிடையாது! எப்போ வேணாலும் நகரத்தின் எந்த பகுதிக்கும் செல்லலாம்...

இதுகுறித்த அறிவிப்பை மாநிலத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் வெளியிட்டிருந்தார். அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் 'நோ என்ட்ரீ ஹவர்ஸ்' எனப்படும் நுழை தடைவு செய்யப்பட்ட நேரங்களில் மின்சார இலகு ரக வாகனங்களின் இயக்கத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வண்டி வச்சிருக்கவங்களுக்கு தடை கிடையாது! எப்போ வேணாலும் நகரத்தின் எந்த பகுதிக்கும் செல்லலாம்...

ஆகையால், மின்சார இலகு ரக வர்த்தக வாகனங்களின் இயக்கத்திற்கு அதிகாரப்பூர்வ அனுமதி கிடைத்துள்ளது. இதன் விளைவாக அவை நகரத்தின் எந்த சாலையில் வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் இயங்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. வர்த்தக வாகன பயன்பாட்டாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வண்டி வச்சிருக்கவங்களுக்கு தடை கிடையாது! எப்போ வேணாலும் நகரத்தின் எந்த பகுதிக்கும் செல்லலாம்...

அதேநேரத்தில், எந்த மாதிரியான நேரத்திலும் இனி எதிர்காலத்தில் மின் வாகனங்களுக்கு மட்டும் தடைவிதிக்கப்படாது என்பது இப்புதிய விலக்கின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. குறிப்பாக காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் மின் வாகனங்களுக்கு பொருந்தாதும் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஆகையால், எதிர்காலத்தில் மின் வாகனங்களின் இயக்கம் அந்நகரத்தில் அபரீதமாக வளர்ச்சியடையும் என நம்பப்படுகின்றது.

இந்த வண்டி வச்சிருக்கவங்களுக்கு தடை கிடையாது! எப்போ வேணாலும் நகரத்தின் எந்த பகுதிக்கும் செல்லலாம்...

காற்று மாசுபாட்டைக் கருத்தில் கடும் நடவடிக்கைகளை டெல்லி அரசு எடுத்து வருகின்றது. பழைய வாகனங்களின் இயக்கத்திற்கு தடை, உரிய காற்று மாசுபாடு சான்று வைத்திருத்தல் என பல கடும் விதிகளை அது அமல்படுத்தியுள்ளது. இவற்றை வைத்திருக்காத வாகனங்கள் மீது கடந்த காலங்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வண்டி வச்சிருக்கவங்களுக்கு தடை கிடையாது! எப்போ வேணாலும் நகரத்தின் எந்த பகுதிக்கும் செல்லலாம்...

அண்மையில், 300 வாகனங்களுக்கு உரிய காற்று மாசுபாடு சான்று இல்லாத காரணத்தினால் அபராத செல்லாண் வழங்கப்பட்டது. கடந்த செவ்வாய் அன்று மட்டும் 280 வாகனங்களுக்கும், புதன் அன்று மட்டும் 390 வாகனங்களுக்கும் பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் வைத்தே அபராதம் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வண்டி வச்சிருக்கவங்களுக்கு தடை கிடையாது! எப்போ வேணாலும் நகரத்தின் எந்த பகுதிக்கும் செல்லலாம்...

மாநில அரசு காற்று மாசுபாட்டை அதிகம் வெளியேற்றும் வாகனங்களுக்கும் எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதில், தன்னார்வலர்கள் உட்பட பல குழுக்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே நே என்ட்ரீ ஹவர்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வண்டி வச்சிருக்கவங்களுக்கு தடை கிடையாது! எப்போ வேணாலும் நகரத்தின் எந்த பகுதிக்கும் செல்லலாம்...

டெல்லி அரசு வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் பொருட்டு உள் எரிப்பு எஞ்ஜின் கொண்ட வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மாநிலத்தில் 10 ஆண்டுகள் பழைய வாகனங்களின் இயக்கத்திற்கு அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த வண்டி வச்சிருக்கவங்களுக்கு தடை கிடையாது! எப்போ வேணாலும் நகரத்தின் எந்த பகுதிக்கும் செல்லலாம்...

இந்த வாகனங்களை மீண்டும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அவற்றை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றிக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. குறிப்பிட்ட சில ஏஜென்சிகளுக்கு இதற்கான அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின்கீழ் பெட்ரோல், டீசல் வாகனங்களை உரிய அங்கீகாரத்துடன் மின்சார வாகனமாக மாற்றி கொள்ள முடியும்.

Most Read Articles

English summary
Electric vehicles can ply during no entry hours in delhi
Story first published: Saturday, November 20, 2021, 14:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X