எந்த கதவிலும் கைப்பிடி இருக்காது! மின்சார கார்குறித்த ஆச்சரிய தகவலை வெளியிட்ட பிரபல நிறுவனம்!

டெஸ்லா சைபர்ட்ரக் மின்சார காரில் கைப்பிடிகள் இருக்காது என நிறுவனத்தின் சிஇஓ கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

எந்த கதவிலும் கைப்பிடி இருக்காது! மின்சார கார்குறித்த ஆச்சரிய தகவலை வெளியிட்ட பிரபல நிறுவனம்!

அமெரிக்காவை மையமாகக் கொண்டு மின் வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனம் டெஸ்லா. இந்நிறுவனம் சைபர்ட்ரக் எனும் புதிய பிக்-அப் ட்ரக் ரக வாகனத்தை மிக விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. நிறுவனத்தின் தற்போதைய தயாரிப்புகளைக் காட்டிலும் இது மிக அதிக தொழில்நுட்பம் மற்றும் சிறப்பு வசதிகளுடன் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

எந்த கதவிலும் கைப்பிடி இருக்காது! மின்சார கார்குறித்த ஆச்சரிய தகவலை வெளியிட்ட பிரபல நிறுவனம்!

ஆகையால், ஒட்டுமொத்த மின் வாகன உலகமே இதன் வருகையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில், நிறுவனத்தின் சிஇஓ-வான எலன் மஸ்க், டெஸ்லா சைபர்ட்ரக் பற்றிய ஓர் சுவாரஷ்ய தகவலை வெளியிட்டிருக்கின்றார்.

எந்த கதவிலும் கைப்பிடி இருக்காது! மின்சார கார்குறித்த ஆச்சரிய தகவலை வெளியிட்ட பிரபல நிறுவனம்!

அவர், புதிய சைபர்ட்ரக் மின்சார வாகனத்தில் ஹேண்டில் பார்களே இடம் பெறாது என கூறியிருக்கின்றார். அதிகாரியின் இப்பதிவில் வாகன ஆர்வலர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. ஹேண்டில் பார்கள் இருக்காது என்றால் எப்படி வாகனத்தின் கதவை திறப்பது என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழும்பியது.

எந்த கதவிலும் கைப்பிடி இருக்காது! மின்சார கார்குறித்த ஆச்சரிய தகவலை வெளியிட்ட பிரபல நிறுவனம்!

இதற்கு சமீபத்தில் தனது டுவிட்ர் பக்கத்தில் பதிலளித்த எலன் மஸ்க், தனது உரிமையாளரை தானே அடையாளம் கண்டு கதவுகளை திறக்கும் வசதி சைபர் ட்ரக்கில் இடம் பெற இருப்பதாக தெரிவித்தார். இந்த தகவல் சைபர்ட்ரக்கின் வருகையை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும் மின் வாகன பிரியர்களை மேலும் குஷியில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது.

எந்த கதவிலும் கைப்பிடி இருக்காது! மின்சார கார்குறித்த ஆச்சரிய தகவலை வெளியிட்ட பிரபல நிறுவனம்!

டெஸ்லா நிறுவனம் சைபர்ட்ரக் பிக்-அப் ட்ரக்கை கடந்த 2019ம் ஆண்டே முதன் முதலில் வெளியுலகில் காட்சிப்படுத்தியது. மேலும், இந்த மின்சார ட்ரக்கை நடப்பாண்டில் விற்பனைக்குக் கொண்டு வரவும் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக கொரோனா வைரசால் ஏற்பட்ட சிக்கல்கள் வாகனத்தின் அறிமுகத்தை அடுத்த ஆண்டிற்கு (2022) தள்ளிச் சென்றிருக்கின்றது.

எந்த கதவிலும் கைப்பிடி இருக்காது! மின்சார கார்குறித்த ஆச்சரிய தகவலை வெளியிட்ட பிரபல நிறுவனம்!

டெஸ்லா நிறுவனம் பிக்-அப் ட்ரக்கை தனது டெக்சாஸ் ஜிகாஃபேக்டரியில் வைத்து உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த பிக்-அப் ட்ரக்கை சரக்கு ஏற்றி செல்லும் வாகனமாக மட்டுமின்றி பலதரப்பட்ட பயன்பாட்டிற்கு உட்படுத்தும் வகையில் டெஸ்லா உருவாக்கி வருகின்றது. அந்தவகையில், ஓர் சிறந்த இழுவை அல்லது சுற்றுலாவிற்கு உகந்த வாகனமாகவும் இது வர இருக்கின்றது.

எந்த கதவிலும் கைப்பிடி இருக்காது! மின்சார கார்குறித்த ஆச்சரிய தகவலை வெளியிட்ட பிரபல நிறுவனம்!

குறிப்பாக, 2019ம் ஆண்டில் இந்த வாகனம் எப்படி காட்சியளித்ததோ அதே தோற்றத்தில், எந்தவொரு மாற்றமும் இல்லாமல் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என மஸ்க் தனது மற்றுமொரு பதிவின் வாயிலாக தெரிவித்திருக்கின்றார். சைபர்ட்ரக் விற்பனைக்கு வருவதற்கு முன்னரே உலக நாடுகள் சிலவற்றில் ஆர்டர்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

எந்த கதவிலும் கைப்பிடி இருக்காது! மின்சார கார்குறித்த ஆச்சரிய தகவலை வெளியிட்ட பிரபல நிறுவனம்!

டெஸ்லா சைபர் ட்ரக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 980 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இது டாப் ஸ்பீடு மணிக்கு 400 கிமீட்டருக்கும் அதிகம் எனவும் கூறப்பட்டுகின்றது. அதேசமயம், இந்த வாகனம் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100கிமீ எனும் வேகத்தை எட்ட வெறும் 6.5 செகண்டுகளே போதும் எனவும் கூறப்படுகிறது.

எந்த கதவிலும் கைப்பிடி இருக்காது! மின்சார கார்குறித்த ஆச்சரிய தகவலை வெளியிட்ட பிரபல நிறுவனம்!

இத்தகைய சிறப்பு வாய்ந்த மின்சார வாகனமாகவே டெஸ்லா பிக்-அப் ட்ரக் விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. தற்போது வரை 2 லட்சத்திற்கும் அதிகமான ஆர்டர்கள் சைபர் ட்ரக்கிற்கு குவிந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Elon Musk Said Cybertruck Won't Have Door Handles. Read In Tamil.
Story first published: Friday, July 16, 2021, 16:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X