இனி கார்களிலும் 'கருப்பு பெட்டி' கட்டாயம்... புதிய உத்தரவால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் திக்குமுக்காடல்...

விமானங்களில் இருப்பதை போல் கார்களுக்கும் கருப்பு பெட்டி கட்டாயம் என ஓர் நாடு அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

விமானங்களில் இருப்பது போல் கார்களிலும் 'கருப்பு பெட்டி' கட்டாயம்... புதிய உத்தரவால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் திக்குமுக்காடல்...

விமானங்களில் பயன்படுத்தி வருவதைப் போல் கார்களிலும் 'கருப்பு பெட்டி' கட்டாயம் பொருத்த வேண்டும் என்ற புதிய விதியை அமல்படுத்த ஓர் நாடு திட்டமிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலேயே இந்த புதிய விதிகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விமானங்களில் இருப்பது போல் கார்களிலும் 'கருப்பு பெட்டி' கட்டாயம்... புதிய உத்தரவால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் திக்குமுக்காடல்...

2022ஆம் ஆண்டு ஜூலை 6 முதல் இந்த விதி அமலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கருப்பு பெட்டி இல்லாத கார்களுக்கு விற்பனைக்கான அங்கீகாரம் வழங்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

விமானங்களில் இருப்பது போல் கார்களிலும் 'கருப்பு பெட்டி' கட்டாயம்... புதிய உத்தரவால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் திக்குமுக்காடல்...

ஆகையால், இப்போதே வாகனங்களில் கருப்பு பெட்டியை கொண்டு வரும் பணியில் ஐரோப்பிய ஒன்றியத்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஈடுபட தொடங்கியிருக்கின்றன. பயணிகள் மற்றும் பயன்பாட்டு வாகனங்கள் அனைத்திலும் கருப்பு பெட்டி பொருத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

விமானங்களில் இருப்பது போல் கார்களிலும் 'கருப்பு பெட்டி' கட்டாயம்... புதிய உத்தரவால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் திக்குமுக்காடல்...

ஆனால், இது இருசக்கர வாகனங்களுக்கு பொருந்தாது. தொழில்நுட்பம் சார்ந்த தரவுகளை சேர்த்து வைக்கும் விதமாக கருப்பு பெட்டிகள் கார்களில் பொருத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. விபத்துகளின்போது உண்மை நிலை என்ன என்பதை அறிவதற்கும் இது உதவும்.

விமானங்களில் இருப்பது போல் கார்களிலும் 'கருப்பு பெட்டி' கட்டாயம்... புதிய உத்தரவால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் திக்குமுக்காடல்...

தேவைப்படும்போது கருப்பு பெட்டிகளில் சேகரிக்கப்படும் தரவுகளை சட்ட அமலாக்க பிரிவு அதிகாரிகளால் மட்டுமே அணுக முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், காப்பீட்டு நிறுவனம் மற்றும் வேறு எவராலும் இந்த தரவுகளை அணுக முடியாது என்பது கவனித்தக்கது.

விமானங்களில் இருப்பது போல் கார்களிலும் 'கருப்பு பெட்டி' கட்டாயம்... புதிய உத்தரவால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் திக்குமுக்காடல்...

கருப்பு பெட்டியில் ஓர் வாகனத்தின் வேகம், நிறுத்தம், ஸ்டியரிங் வீலின் கோணம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் சேகரித்து வைக்கப்பட இருக்கின்றன. தொடர்ந்து, வாகனத்தின் உற்பத்தியாளர்களுக்கு தேவையான தரவுகளை வழங்கும் விதமாகவும் இந்த கருப்பு பெட்டி செயல்படும் என கூறப்படுகின்றது.

விமானங்களில் இருப்பது போல் கார்களிலும் 'கருப்பு பெட்டி' கட்டாயம்... புதிய உத்தரவால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் திக்குமுக்காடல்...

இந்த தரவுகள், வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் தயாரிப்புகளின் தரத்ததை மேம்படுத்திக் கொள்ள உதவும். கருப்பு பெட்டியில் காரின் உரிமையாளர் பற்றிய தகவலோ அல்லது வாகனத்தின் பதிவுகள் பற்றிய தகவல்களோ இடம் பெறாது என கூறப்படுகின்றது.

விமானங்களில் இருப்பது போல் கார்களிலும் 'கருப்பு பெட்டி' கட்டாயம்... புதிய உத்தரவால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் திக்குமுக்காடல்...

மேலும், விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி போல் வாகனங்களில் பேசப்படும் உரையாடல்களும் பதிவு செய்யப்படாதாம். ஆனால், இந்த கருப்பு பெட்டிகள் 24 மணி நேரம் மற்றும் 7 நாட்களும் தொடர்ச்சியாக இயங்கும். தொடர்ந்து, ஸ்டோரேஜ் முழுமையடைந்துவிட்டால் தேவைக்கேற்ப பழைய தகவல்களை அழித்து புதிய தகவல்களைச் சேகரிக்கும் வகையில் இந்த கருப்பு பெட்டி வடிவமைக்கப்பட இருக்கின்றன.

விமானங்களில் இருப்பது போல் கார்களிலும் 'கருப்பு பெட்டி' கட்டாயம்... புதிய உத்தரவால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் திக்குமுக்காடல்...

கார்களில் கருப்பு பெட்டியை நடைமுறைக்கு கொண்டு வரும் முதல் நாடா ஐரோப்பியம் என்றால், இல்லை என்பது எங்களின் பதிலாகும். அமெரிக்கா, கொரியா, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் ஏற்கனவே கருப்பு பெட்டி கார்களில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுவிட்டது.

Most Read Articles

English summary
Europe Govt Announces 'Black Boxes' To Be Mandatory For Cars In From 2022. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X