Just In
- 5 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 7 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 9 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 9 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Lifestyle
ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை!
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புக்கிங்கில் கலைகட்டும் டொயோட்டா ஃபார்ச்சூனர்... ஒரு மாசம்கூட ஆகல அதுக்குள்ள இத்தனை யூனிட் புக்காகியிருக்கா!!
அறிமுகமாகி ஒரு மாதம்கூட ஆகாதநிலையில் டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் கார்களுக்கு அமோகமான வரவேற்பு கிடைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியர்களின் பல நாள் எதிர்பார்ப்பான புதுப்பிக்கப்பட்ட மாடல் ஃபார்ச்சூனர் மற்றும் ஃபார்ச்சூனர் லெஜன்டர் எஸ்யூவி கார்கள் மிக சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகின. கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி அன்றே இவ்விரு கார்களின் அறிமுகமும் நாட்டில் அரங்கேறியது.

புதிய ஸ்டைல் மற்றும் அதிக வசதிகளுடன் அறிமுகமாகிய இக்கார்களுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த ஜனவரி மாதத்தின் இறுதி வரை கிடைத்த புக்கிங் பற்றிய தகவல் வெளியாகியிருக்கின்றது.

இதன்படி, சுமார் 5,000 ஆயிரம் யூனிட்டுகள் ஃபார்ச்சூனர் கார்களுக்கான புக்கிங் கிடைத்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. அறிமுகமாகி ஒரு மாதமாவதற்கு இத்தகைய அமோகமான வரவேற்பை ஃபார்ச்சூனர் கார்கள் பெற்றிருப்பது இந்திய நான்கு சக்கர வாகன சந்தையில் பெரும் வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக ஃபார்ச்சூனர் கார்கள் இருக்கின்றன. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் நிறுவனத்தின் விற்பனை விகிதத்தில் 53 சதவீதத்தை இக்கார்களே பெறுகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே இப்போது கிடைத்திருக்கும் புக்கிங்கின் எண்ணிக்கை அமைந்திருக்கின்றது.

ஆகையால், எதிர்காலத்தில் முந்தைய ஃபார்ச்சூனர் கார் மாடலுக்கு கிடைத்த அதே வரவேற்பே தற்போது அறிமுகமாகியிருக்கும் புதுப்பிக்கப்பட்ட ஃபார்ச்சூனர் மாடலுக்கும் கிடைக்கும் என்பது தெரிகின்றது. பல்வேறு அப்டேட்டான அம்சங்கள் மற்றும் ஸ்டைலிலேயே இந்த புதுப்பிக்கப்பட்ட ஃபார்ச்சூனர் கார்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன.

அதிலும், ஃபார்ச்சூனர் லெஜன்டர் எனும் பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் கார் மாடல், அதிக ஸ்போர்டி மற்றும் கூடுதல் லக்சூரி அம்சங்களுடன் களமிறங்கியிருக்கின்றது. எனவேதான் இக்காரின் பெயருடன் லெஜன்டர் எனும் கூடுதல் பெயரையும் நிறுவனமும் சேர்த்திருக்கின்றது.

மிகவும், ஷார்பான தோற்றம் கொண்ட ஹெட்லேம்ப், இரு விதமான நிறங்கள், வித்தியாசமான பம்பர் அமைப்பு மற்றும் இன்னும் பல கஸ்மெட்டிக் மாற்றங்கள் இக்கார் விற்பனைக்கு வந்திருக்கின்றன. மேலும், இந்த கார்களில் அனைத்து விதமான சாலைகளையும் சமாளிக்க கூடிய 20 இன்சிலான ட்யூவல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் டயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இது ஃபார்ச்சூனர் காரின் முரட்டுத் தனமான தோற்றத்திற்கு கூடுதல் மிரட்டும் தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது. ஃபார்ச்சூனர் லெஜன்டர் அதிகளவு சிறப்பு அம்சங்களைக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் இக்காரை உயர்நிலை வேரியண்டாக மட்டுமே விற்பனைக்கு வழங்குகின்றது டொயோட்டா.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்களின் விலை பற்றிய தகவலை பட்டியலாகக் கீழே காணலாம்:
2.7 பெட்ரோல் 4x2 MT - ரூ. 29.98 லட்சம்
2.7 பெட்ரோல் 4x2 AT - ரூ. 31.57 லட்சம்
2.8 டீசல் 4x2 MT - ரூ. 32.48 லட்சம்
2.8 டீசல் 4x2 AT - ரூ. 34.84 லட்சம்
2.8 டீசல் 4x4 MT - ரூ. 35.14 லட்சம்
2.8 டீசல் 4x4 AT - ரூ. 37.43 லட்சம்
2.8 டீசல் 4x2 AT லெஜன்டர் - ரூ. 37.58 லட்சம்

புதிய ஃபார்ச்சூனர் எஸ்யூவி கார் இருவிதமான எஞ்ஜின் தேர்வில் மட்டுமே கிடைப்பது மேலே கொடுக்கப்பட்ட விலை பட்டியலில் உங்களுக்கு தெரிந்திருக்கும். இதில், 2.8 லிட்டர் டீசல் எஞ்ஜினில் விற்பனைக்குக் கிடைக்கும் ஃபார்ச்சூனர் கார் 201 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

இதேபோன்று, 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் கிடைக்கும் ஃபார்ச்சூனர் கார்கள் 164 பிஎச்பியையும், 245 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டதாக இருக்கின்றது. இவையிரண்டும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் வேகக்கட்டுப்பாட்டு தேர்விலும் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன.