எதிர்பார்த்த தகவல் வெளியாகியாச்சு... புதிய மாருதி சுசுகி செலிரியோ கார் அறிமுகம் எப்போது?..

எதிர்பார்ப்பைத் தூண்டி வரும் புதுப்பிக்கப்பட்ட மாருதி சுசுகி செலிரியோ கார் அறிமுகம் எப்போது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்பார்த்த தகவல் வெளியாகியாச்சு... புதிய மாருதி சுசுகி செலிரியோ கார் அறிமுகம் எப்போது?..

மாருதி சுசுகி நிறுவனம் அதன் புதுப்பிக்கப்பட்ட செலிரியோ காரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அண்மைக் காலங்களாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றது. இதனால், இதன் வருகையை எதிர்நோக்கி பட்ஜெட் வாகன விரும்பிகள் பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

எதிர்பார்த்த தகவல் வெளியாகியாச்சு... புதிய மாருதி சுசுகி செலிரியோ கார் அறிமுகம் எப்போது?..

இந்த நிலையில், மிகுந்த ஆர்வத்துடன் செலிரியோ காரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அக்காரின் அறிமுகம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் தளம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, புதுப்பித்தலைப் பெற்றிருக்கும் செலிரியோ 2021 மே மாதத்தின் மத்தியில் அறிமுகமாக இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

எதிர்பார்த்த தகவல் வெளியாகியாச்சு... புதிய மாருதி சுசுகி செலிரியோ கார் அறிமுகம் எப்போது?..

இந்த புதுப்பிக்கப்பட்ட செலிரியோ காரில் மாருதி நிறுவனம் முதல் முறையாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வை வழங்க இருக்கின்றது. இதுவே, இந்த புதுப்பிக்கப்பட்ட செலிரியோவில் நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அம்சமாகும். இதுதவிர இன்னும் சில மாற்றங்களையும் இக்கார் பெற்றிருக்கின்றது.

எதிர்பார்த்த தகவல் வெளியாகியாச்சு... புதிய மாருதி சுசுகி செலிரியோ கார் அறிமுகம் எப்போது?..

மாருதி சுசுகி, அதன் புகழ்பெற்ற ஹார்டெக்ட் பிளாட்பாரத்தில் வைத்தே செலிரியோ காரை புதுப்பித்திருக்கின்றது. ஆகையால், புதுமையான அம்சங்கள் பலவற்றை இக்காரில் மிக நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம். ஏற்கனவே, டிசையர், ஸ்விஃப்ட், வேகன்ஆர், இக்னிஸ் உள்ளிட்ட பல்வேறு கார் மாடல்களை நிறுவனம் இந்த பிளாட்பாரத்தைப் பயன்படுத்தியே உற்பத்தி செய்து வருகின்றது.

எதிர்பார்த்த தகவல் வெளியாகியாச்சு... புதிய மாருதி சுசுகி செலிரியோ கார் அறிமுகம் எப்போது?..

புதுப்பிக்கப்பட்ட செலிரியோ கார் சற்று கூடுதலான உயரத்தைப் பெற்றிருக்கின்றது. ஆகையால், இதனை உயரமான பையன் என அழைக்கத் தொடங்கியிருக்கின்றனர். இத்துடன், இந்த ஹேட்ச்பேக் ரக காரின் டிசைனிலும் லேசான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. செலிரியோ காரை சாலையில் நிறுவனம் டெஸ்ட் டிரைவ் செய்தபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களே இதற்கு சான்று.

எதிர்பார்த்த தகவல் வெளியாகியாச்சு... புதிய மாருதி சுசுகி செலிரியோ கார் அறிமுகம் எப்போது?..

காரை முழுமையான மறைப்புகளுடன் பல பரீட்சையில் நிறுவனம் ஈடுபடுத்தியதால் அதில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்த தகவலை மிக துள்ளியமாக தெரிவிக்க முடியவில்லை. இருப்பினும், முகப்பு பகுதி க்ரில், கட்டுமஸ்தான உடல்வாக மற்றும் அதிக இட வசதிகள் புதுப்பிக்கப்பட்ட செலிரியோ காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

எதிர்பார்த்த தகவல் வெளியாகியாச்சு... புதிய மாருதி சுசுகி செலிரியோ கார் அறிமுகம் எப்போது?..

இன்னும் இதுபோன்ற என்னென்ன அம்சங்கள் எல்லாம் அப்டேட் செய்யப்பட்டிருக்கின்றன என்கிற அதிகாரப்பூர்வ தகவல்கள் மிக விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன. அறிமுகத்திற்கு முன்னரே இத்தகவலை மாருதி சுசுகி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Facelift Maruti Suzuki Celerio Launch Timeline Revealed. Read In Tamil.
Story first published: Thursday, March 11, 2021, 19:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X