Just In
- 15 min ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 1 hr ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 12 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 14 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
Don't Miss!
- News
ஜோ பிடன் அமைச்சரவையில் முக்கிய பதவிக்கு அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்
- Movies
தமிழில் ரீஎன்ட்ரி.. நெல்சன் இயக்கும் படம்.. 'தளபதி' விஜய் ஜோடியாகிறாரா நடிகை பூஜா ஹெக்டே?
- Sports
அதிரடி மன்னர்களின் அதிரடி அரைசதங்கள்... ஏமாற்றம் அளிக்காத இந்திய அணியின் பேட்டிங்
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆவலை தூண்டிவரும் புதுப்பிக்கப்பட்ட மாருதி ஸ்விஃப்ட் காரின் அறிமுக விபரம் கசிந்தது... எப்போது என தெரியுமா?
இந்தியர்களின் பெரும் எதிர்பார்ப்புகளில் ஒன்றாக இருக்கும் புதுப்பிக்கப்பட்ட மாருதி சுசுகி ஸ்விஃப்ட் காரின் அறிமுகம் எப்போது என்கிற தகவல் கசிந்துள்ளது. இதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

மாருதி சுசுகி நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த மாடல்களின் ஒன்றான ஸ்விஃப்ட் காரை புதுப்பித்து வருவதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. இக்காரையே விரைவில் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அவ்வப்போது இக்கார் பற்றிய தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன.

ஆகையால், இக்கார் விரைவில் இந்தியாவில் அறிமுகமாவது உறுதியாகியுள்ளது. இதன் காரணத்தினால் மாருதி நிறுவனம் அவ்வப்போது இந்தியச் சாலைகளில் புதுப்பிக்கப்பட்ட ஸ்விஃப்ட் காரை தீவிர பலப்பரீட்சையில் ஈடுபடுத்தி வருகின்றது. அவ்வாறு, தீவிர சோதனையில் ஸ்விஃப்ட் கார் ஈடுபடும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் எப்போது புதுப்பிக்கப்பட்டு வரும் புதிய ஸ்விஃப்ட் கார் எப்போது அறிமுகம் என்ற தகவல்களும் தற்போது கசிந்துள்ளன. இதுகுறித்து எச்டி ஆட்டோ தளம் வெளியிட்டிருக்கும் புதிய தகவலின்படி புதுப்பிக்கப்பட்ட மாருதி சுசுகி ஸ்விஃப்ட் கார் வருகின்ற மார்ச் மாதம் அறிமுகமாக இருப்பது தெரிவந்துள்ளது. ஆனால், தேதி பற்றிய தகவல் தெரியவரவில்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்விஃப்ட் மாடலைக் காட்டிலும் கூடுதல் சிறப்பு வசதி மற்றும் திறன்களைக் கொண்டதாக புதுப்பிக்கப்பட்ட மாருதி ஸ்விஃப்ட் கார் இருக்கின்றது. அந்தவகையில், புதிய ஸ்விஃப்ட் 90 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் புதிய அணிகலன்களுடனேயே விற்பனைக்கு வரவிருக்கின்றது.

இதுமட்டுமின்றி முன், பின் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் புதிய உருவ அமைப்பைப் பெற்றிருக்கின்றது. எனவேதான் இது புதுப்பிக்கப்பட்ட ஸ்விஃப்ட் காராக கருதப்படுகின்றது. தொடர்ந்து, உருவ மாற்றம் மட்டுமின்றி பல்வேறு அணிகலன் மாற்றங்களையும் இக்கார் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய க்ரில் மற்றும் பம்பர் ஆகியவற்றை இக்கார் பெறவிருக்கின்றது. இதேபோன்று, காரின் இருக்கை அமைப்பும் புதிய ஸ்டைலில் எதிர்பார்க்கப்படுகின்றது. அதிக சொகுசு மற்றும் ஸ்போர்ட்டி ஸ்டைல் இது இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

இளைஞர்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களை விரும்பும் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் இந்த சிறப்பு மாற்றத்தை ஸ்விஃப்ட் மேற்கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதைத்தொடர்ந்து, எல்இடி ஹெட்லைட், எல்இடி பகல்நேர மின்விளக்கு, 15 இன்சிலான ட்யூவல் டோன் அலாய் வீல், 7.0 இன்சிலான ஸ்மார்ட் ப்ளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன்), கீலெஸ் என்ட்ரீ என எக்கசக்க வசதிகள் இக்காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.

புதுப்பிக்கப்பட்ட ஸ்விஃப்ட் காரில் 1.2 லிட்டர் கே12சி பெட்ரோல் எஞ்ஜினையே மாருதி வழங்க இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகப்பட்சமாக 90 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. மேலும் இந்த எஞ்ஜினில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும் கூறப்படுகின்றது. அதிக மைலேஜிற்காக இத்தகைய கியர்பாக்ஸ் தேர்வை மாருதி வழங்க இருக்கின்றது.

விலையைப் பொருத்தவரை எந்தவித அறிவிப்பும் கிடைக்கவில்லை. அதேசமயம், தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்விஃப்ட் காரைக் காட்டிலும் கூடுதல் விலையிலேயே புதுப்பிக்கப்பட்ட கிடைக்க இருக்கின்றது.

அந்தவகையில், ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரையிலான விலையுயர்வில் இக்கார் எதிர்பார்க்கப்படுகின்றது. புதுப்பிக்கப்பட்ட ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கான அறிமுகத்தைப் பெற்ற பின்னர் ஃபோர்டு ஃபிகோ மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இருக்கும்.