Just In
- 1 hr ago
உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
- 1 hr ago
மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!
- 1 hr ago
குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
- 2 hrs ago
செம்ம டிமேண்ட்! உற்பத்தியைவிட தேவை பல மடங்கு அதிகரிப்பு! க்ரெட்டா எஸ்யூவிக்கு தொடரும் பிரமாண்ட எதிர்பார்ப்பு!!
Don't Miss!
- News
சென்னை புதுவரவுக்கு கண்டிப்பாக அமைச்சரவையில் இடம் தரக் கூடாது- திமுகவில் இப்பவே அதிரிபுதிரி மோதல்
- Sports
குறி வைத்த கோலி.. தமிழக வீரரை இந்திய அணிக்கு தட்டி தூக்க ரெடி.. முதல் "பவர்-ஹிட்டர்" பேட்ஸ்மேன்!
- Lifestyle
செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர் பொரியல்
- Finance
16% சம்பள உயர்வு, 5 நாள் வேலை.. 1.14 லட்சம் எல்ஐசி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!
- Movies
விவேக் பெயரில் குழப்பிய மும்பை ஊடகங்கள்.. பதறியடித்து டிவிட்டிய பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
என்னது... ஹெட்லைட்டிற்கும் வைப்பரா, எத்தனை பேர் பார்த்திருக்கீங்க? இதனால் உண்மையில் பயன் இருக்கா?
சில கார்களின் ஹெட்லேம்ப்களுக்கும் வைபர்கள் கொடுக்கப்படுவது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? இதனால் உண்மையில் பயன் இருக்கா உள்ளிட்ட விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் விற்பனையில் இருந்த கார்களுடன் ஒப்பிடும்போது தற்போது இருக்கும் கார்கள் முற்றிலும் வித்தியாசமானவை. வித்தியாசமானவை என்பதை விட முழுவதுமாக மேம்படுத்தப்பட்டவை என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

ஏனெனில் நாளுக்கு நாள் புது புது தொழிற்நுட்பங்கள் கார்கள் மட்டுமில்லாமல் அனைத்து வாகனங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக ஒவ்வொரு கார் தயாரிப்பு நிறுவனமும் குறைந்தது ஒரு ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு குழுவையாவது வைத்துள்ளது.

இதன் காரணமாக நம் தந்தை உபயோகப்படுத்திய பெரும்பான்மையான கார் சாதனங்களை நாம் உபயோகப்படுத்துவதில்லை. ஆனால் பழைய கார்களை வைத்திருந்தாலோ அல்லது மாடிஃபை செய்து பயன்படுத்தி இருந்தாலோ அத்தகைய சாதனங்களை பார்த்திருக்க வாய்ப்புண்டு.

அவ்வாறான கார் சாதனங்களில் ஒன்று தான் ஹெட்லேம்ப்களுக்கான வைபர்கள். இந்தியாவில் இப்போது விற்பனையில் இருக்கும் எந்த காரிலும் ஹெட்லேம்ப் கழுவி எனப்படும் வைப்பர்கள் வழங்கப்படுவதில்லை என்று தான் நினைக்கிறேன்.

முந்தைய காலங்களில் வழங்கப்பட்டிருக்கலாம். அதுவும் சந்தேகம் தான், ஏனெனில் ஹெட்லேம்ப் வைபர்கள் இந்தியா போன்ற சூடான நாடுகளை காட்டிலும் எப்போதும் பனி பெய்து கொண்டிருக்கும் வெளிநாட்டு சூழலுக்கு தான் மிகவும் அவசியமானதாக விளங்குகின்றது.

2000ஆம் காலக்கட்டங்களில் இத்தகைய வாஷர்கள் கார்களில் கட்டாயமான அம்சமாக பொருத்தப்பட்டன. இப்போது வால்வோ எக்ஸ்சி90, ஸ்கோடா சூப்பர்ப் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற கார்களில் கூடுதல் ஆக்ஸஸரீயாக வழங்கப்படுகிறது.

கார்களில் ஹெட்லேம்ப் வைபர்கள் பொருத்தப்படுவது 20 வருடங்களுக்கு முன்னர் எல்லாம் ஆடம்பர விஷயமாக பார்க்கப்பட்டன. இருப்பினும் ஹெட்லேம்ப் வைபர்களை காரில் முதன்முதலாக கொண்டுவந்த நிறுவனம் எது என்பது உறுதியாக தெரியவில்லை.

நமக்கு தெரிந்த வரையில் வால்வோ நிறுவனமாக தான் இருக்க வேண்டும். செயல்பாட்டை பொறுத்துவரையில், கிட்டத்தட்ட விண்ட்ஷீல்டு வைபர்களை போல தான், தண்ணீரை வேகமாக ஹெட்லேம்ப்பின் கண்ணாடிகளின் மீது தெளித்து சுத்தம் செய்யும்.

பனி தேசங்களில் பல நாட்களாக நிறுத்த வைக்கப்பட்ட கார்களின் ஹெட்லேம்ப்பையும் சேர்த்து பனி மூடிவிடும், அவற்றை அகற்ற இத்தகைய வைபர்கள் உதவியாக விளங்கின, இப்போதும் சில கார்களில் உதவியாக விளங்கி வருகின்றன.

ஆஃப்-ரோட்டில் செல்லும்போது ஹெட்லேம்ப்பின் மீது படியும் சேறை துடைக்கவும் வைப்பர் பயன்பட்டன. இதன் இயக்கத்தின் பின்னணியில் பெரிய அளவில் எந்த அறிவியலும் இல்லை. பழைய கார்களில் ஹெட்லைட் வைபர்களுக்கு தனித்தனி மோட்டார்கள் பொருத்தப்பட்டன.

இவை நீர்த்தேக்கத்தை விண்ட்ஷீல்டு உடன் பகிர்ந்து கொண்டன. ஆனால் நீரை வழங்க பம்ப் தனித்தனி தான். ஹெட்லேம்ப் வைபர்களுக்கான ஸ்விட்ச்கள் ஸ்டேரிங் சக்கரத்தில் வழங்கப்பட்டன. ஆனால் இந்த அம்சம் தற்சமயம் பல கார்களில் வழங்கப்படாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இதில், இவை காரின் ஸ்டைலை குறைக்கின்றன என்பது ஒன்றாகும்.