Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 5 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 6 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 7 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்திய சொகுசு வாகன சந்தையை கதற விட தயாராகும் பிரபல நிறுவனம்... ஒட்டுமொத்தமாக 4 புதிய கார்களை திட்டம்!!
இந்தியாவின் சொகுசு வாகன சந்தையை மெர்சலாக்குகின்ற வகையில் புதிதாக நான்கு கார்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. எந்த ஆண்டிற்கு அவை விற்பனைக்கு வரும் என்பதைக் கீழே காணலாம்.

பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இந்திய லக்சூரி வாகனச் சந்தையை அதகளப்படுத்தும் வகையில் ஒட்டுமொத்தமாக நான்கு புதிய சொகுசு கார்களைக் களமிறக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் 2022ம் ஆண்டிற்குள் அனைத்து வாகனங்களையும் அது களமிறக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல ஜீப் வாகன உற்பத்தி நிறுவனமே இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது. இது, ஜீப் காம்பஸ் மாடலின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை முதல் மாடலாக இந்தியாவில் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

கூடுதல் இருக்கை வசதிகளுடன் இக்கார் எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, மூன்று இருக்கை வரிசைகளுடன் புதிய காம்பஸ் களமிறங்க உள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்ததாக விராங்க்ளர் மற்றும் கிராண்ட் செரோக்கி ஆகிய மாடல்களையும் உள்ளூர் தொழிற்சாலையான ரஞ்ஜன்கவோன் ஆலையில் வைத்து அசெம்பிள் செய்து விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

இந்த புதிய நடவடிக்கைக்காக சுமார் 180 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய முதலீட்டைச் செய்ய ஜீப் திட்டமிட்டுள்ளது. இதுமட்டுமின்றி ஹைதராபாத்தில் புதிய டிஜிட்டல் தொழிற்சாலையை உருவாக்க மேலும் 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய ஜீப் திட்டமிட்டு வருகின்றது. இங்கு வைத்தே புதிய கார்களை உற்பத்தி செய்து விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது ஜீப்.

தொடர்ந்து எச்6 என்ற குறிப்பெயருடன் புதிய பெரிய எஸ்யூவி ரக காரையும் ஜீப் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த புதிய மாடலையும் காம்பஸ் மாடலைத் தழுவியே ஜீப் உருவாக்கி வருகின்றது. ஸ்டைலில் வேண்டுமானலும் இக்கார் காம்பஸ் காரைப் போன்று காட்சியளிக்கலாம், ஆனால், காம்பஸ் காரைக் காாட்டிலும் பிரமாண்ட வசதிகளுடன் புதிய எச்6 விற்பனைக்கு களமிறங்க இருக்கின்றது.

அதிக இடவசதி மற்றும் சொகுசு வசதிகளை விரும்பும் இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கிலேயே இக்காரை நாட்டில் களமிறக்க ஜீப் திட்டமிட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி கூடுதல் எஞ்ஜின் திறனை இக்கார் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதுப்பிக்கப்பட்ட ஜீப் காம்பஸ் கார் வருகின்ற 7ம் தேதி விற்பனைக்கு வரவிருக்கின்றது. மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இக்காரில் 10.1 இன்சிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (யுகன்னெக்ட்5 வசதிக் கொண்டது). பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், மறுசீரமைப்பு செய்யப்பட்ட இருக்கை மற்றும் ட்யூவல் டோன் கேபின் ஆகிய புதிய அம்சங்களுடன் இக்கார் அறிமுகமாக இருக்கின்றது.